Headlines

ஹெலியை வீடியோ செய்தவர் கைது

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை, தன்னுடைய அலை பேசியில் வீடியோ செய்த்தாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த ஹெலி, பம்பலப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில், நேற்று தரையிறங்கிய போதே, வெள்ளவத்தையில் தங்கியிருந்து தொழில் புரியும் 26 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Read More

“அம்பாறை மாவட்ட மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும்” இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்ட மக்கள், மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பேராதரவு வழங்கி, இன, மத, குல பேதங்களின்றி முஸ்லிம் சமூக நலனில் அக்கறை கொண்டு தொழிற்பட்டு வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித்தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். இஷாக் கேட்டுக்கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கருகில் நடைபெற்ற…

Read More

இனவாதமும்மதவாதமும் தொடர்ந்தும் இந்த நாட்டை ஆட்டிப்படைக்க முடியாது புல்மோட்டையில் ரிஷாத்

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும், அதனை சரி செய்து மீண்டும்  மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம்  என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் இன்று காலை (01) இடம்பெற்ற பொதுமக்கள் ,ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம் வெற்றிகரமாக இடம்பெற்ற போதும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சகல இனங்களையும் சமனாக மதிக்கின்ற, சமத்துவத்தை பேணுகின்ற, சிறுபான்மை…

Read More

இன்று பிரதமர் விசேட உரை

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு கூடுவதோடு 2.00 மணிக்கு பின்னர் அரசியலமைப்பு சபையாக கூடும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் தித்தவல தெரிவித்தார். அதேவேளை இன்றைய சபை அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரிய வருகிறது. இன்றைய பாராளுமன்ற அமர்வு தொடர்பில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் தித்தவல மேலும் தெரிவிக்கையில், இன்று செவ்வாய்க்கிழமை 1.00 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற…

Read More

மனுக்குலத்தின் தாயகம் இலங்கை; நுால் வெளியீடு

– அஸ்ரப் ஏ சமத் – சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை நமது இலங்கைத்தீவில் இருந்து இலங்கை நாட்டின் பாவா ஆதம் மலை உச்சியில் கால் பதித்து நீண்ட காலம் அழுது மன்றாடினாா். பின்னா் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு இலங்கையில் இருந்து கால் நடையாக மக்கா சென்றாா்கள். மல்வானை சகிட் எழுதிய தமிழ் நுால் வெளியீட்டு விழாவில் நுாலாசிரியா சகீத் சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை அவா்கள் பாதம் பட்ட இடம் இதனை நாம் சஹீட்…

Read More

முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

-A.R.A.Raheem – வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.அனைத்து மத மாணவர்களும் ஆரம்ப கல்வி கற்கும் பாடசாலையாகக் காணப்படும் இப் பாடசாலையானது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லா நிலையில் கடந்த காலங்களில் இயங்கிவந்தது. இது பற்றி றிப்கான் பதியுதீன் அவர்களின் கவனத்தின்கீழ் கொண்டுவந்ததற்கமைய இப் பாடசாலைக்கான கதிரை,மேசை,அலுமாரி…

Read More

ஒரே நாளில் கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தம் அமைச்சர் ரிஷாட் முன்னிலையில் இன்று கைச்சாத்து

ஊடகப்பிரிவு இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக கம்பனிகளை இலத்திரனியல் அடிப்படையில் தன்னியக்க முறையி;ல் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம் இன்று காலை (30.05.2017) வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. கம்பனி பதிவாளர் திணைக்களத்திற்கும், கே.பி.எம்.ஜீ – ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பான திட்டத்தை அமுல்ப்படுத்த 57மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இந்தத் தொகையை கம்பனி பதிவாளர் திணைக்களம், வரியிறுப்பாளர்களிடமிருந்து அறவிடாமல் கம்பனி பதிவாளர் நிதியத்திடமிருந்து பெற்று வழங்குகின்றது….

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனால் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும்!

ஜெஸ்மி எம்.மூஸா மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் செய்த சேவையில் வெற்றிடம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை உணர்ந்து அமைச்சர் றிஸாட் பதியுதீனால் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும் என மருதமுனை சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மருதமுனை வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.ஜே.எல். அஸீல் தலைமையில் மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

சாலாவ மக்களிடம் இராணுவ தளபதி மன்னிப்பு கோரியுள்ளார்

சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்கிடங்கு தீப்பரவல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குஉதவவென்று 12 சேவை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் அந்தப்பிரதேச மக்களின் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வர 50ஆயிரம்படைவீரர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இலங்கையின் இராணுவத்தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை சாலாவ தீப்பரவல் தொடர்பில் ஏற்பட்ட சேதங்களுக்காக தாம் பொதுமக்களிடம் மன்னிப்பை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் பொதுமக்களும் இராணுவத்தினரும் பாரிய பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவிசாவளையில் செய்தியாளர்களை சத்தித்தபோது இந்த கருத்துக்களை அவர்வெளியிட்டுள்ளார்.

Read More

வடகொரியா அதிபருடன் பேசுவேன்: டொனால்டு டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பல மாதங்களுக்கு முன் பிரச்சாரத்தை தொடங்கிய டொனால்டு டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய பேச்சு மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவிற்கு நேரடியாக சவால்விட்டு வரும் வடகொரியாவுடன் பேச்சு நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் அமெரிக்காவின் உறவு குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பிய போது “நான் அவருடன் பேசுவேன்(கிம் ஜோங்). அவருடன் பேசுவதில் எனக்கு எந்த பிரச்சனையும்…

Read More

பாலைவன நிலத்தில் கிடைத்த வெற்றி… கத்தார் தலைநகர் தோஹாவில் நெல் அறுவடைக்குத் தயார்.

அபூ சுமைய்யா கேரள விவசாய ஆர்வலர்களால் Al Dosari Park shahaniya வில் சிறிய நிலப் பரப்பில் முதலாவதாக செய்யப் பட்ட நெற் பயிர் செய்கை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நெற் பயிர் செய்கை நீர் வளமுள்ள நிலத்திலே (water rich soil ) செய்கை பண்ணப் படுவது வழக்கம் இவர்கள் பாலைவன நிலத்தில் வெற்றிகரமாக நெற் பயிர் செய்து வெற்றி கண்டிருகின்றார்கள்.

Read More

கசப்புணர்வுகளை மறந்து நிந்தவூர் மண்ணுக்கு பணி செய்வோம்” புதிய தவிசாளர் தாஹிர் அறைகூவல்!

-ஊடகப்பிரிவு- தேர்தலகால கசப்புணர்வுகளை மறந்து நமது பிரதேசமான நிந்தவூர் மண்ணுக்கும், மக்களுக்கும் ஒன்றுபட்டு பணிசெய்வதற்கு சகல உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.எம்.தாஹிர் அறைகூவல் விடுத்தார். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நிந்தவூர் பிரதேச சபைக்குத் தெரிவான உறுப்பினர்களிடையே சபையின் தலைவர், உபதலைவர் தெரிவுக்கான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் நடைபெற்றது. கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில்,…

Read More