Headlines

ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் திருப்பப்பட்டது!

நாட்டின் சகல மாவட்டங்களிலும் பெய்த கடும் மழை காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஹெலிகொப்டர் பயணம் பாதி வழியில் தடைப்பட்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற பிரஜைகள் குடிநீர் பயன்பாடு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஹெலிகொப்டர் மூலம் கண்டிக்கு பயணித்தார். எனினும், சீரற்ற காலநிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கொழும்பிற்கே ஹெலிகொப்டர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த மாநாட்டின் பிரதம அதிதியாக ஜனாதிபதி பெயரிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இத்திஹாதா பரீட்சையில் தஸ்கர ஹக்கானிய்யா முதலிடம்

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது அல்ஹம்துலில்லாஹ். சென்ற 21 , 22 ம் திகதிகளில் அகுரனை ஜாமிஆ ரஹ்மானியாவில் அகில இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தினால் ஷரீஆப்பிரிவின் இறுதியாண்டு வகுப்பு மாணவர்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில்  தஸ்கர அல்ஹக்கானியாவின் இறுதியாண்டு மாணவர்களான மாவனெல்லையைச் சேர்ந்த எம்.எச் முஹம்மத் ஸாதிக், அகுரனையைச் சேர்ந்த எம்,ஏ அப்துல்லாஹ் ஆகியோர் முதலாம்மிடத்தைப் பெற்றுள்ளனர். சுமார் 69 அரபுக்கல்லூரிகளிள் 138 மாணவர்கள் கலந்து கொண்ட இப்பரீட்சையில் இருவரும் 120 புள்ளிகளில் 119 புள்ளிகள்…

Read More

மஹிந்த உயர்நீதிமன்றத்துக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்தவின் இரண்டாம் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் கடுவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் யோஷித்தவின் விளக்கமறியல் காலத்தை தொடர்ந்தும் நீடித்துள்ளது. இந்நிலையில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் பிணைமனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள…

Read More

போனஸ் ஆசனம் தருவதாக பொதுபலசேனா அழைத்தாலும் அய்யூப் அஸ்மீன் சென்றுவிடுவார்

முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க போனஸ் ஆசனம் தருகின்றோம் வாருங்கள் என பொதுபலசேனா அழைத்தாலும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் சென்றுவிடுவார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவம் இல்லை என குற்றம் சுமத்தும் கல்முனை வடக்கு இளைஞர் அமையம் அவரது செயற்பாடுகள் அவ்வாறு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது. கல்முனை வடக்கு இளைஞர்  அமையத்தின் தலைவர் ஏ.எச்.எம் பூமுதீன் வெயியிட்டுள்ள அறிக்கையில் மேற்படடி குறிபிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தமிழ் தேசிக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் வடக்கு முஸ்லிம்கள்…

Read More

பேக்கரிகளில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம்

பேக்கரி மற்றும் பேக்கரி உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பாண் உள்ளிட்ட பேக்கரி தின்பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சாதாரண நிலையங்களில் தராசு…

Read More

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு!!!

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலுக்கு தேவையான புனரமைப்பு வேலைகளுக்கு உதவியளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸின் பிரதிநிதிகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கண்டி பொல்கொல்லையில் அமைந்துள்ள கூட்டுறவுக்கல்லூரியில் சந்தித்து முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு கஷ்டங்கள் குறித்து விபரித்தனர். குறிப்பாக இஸ்லாமியக் கடமைகளை மேற்கொள்வதில் தாங்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். பள்ளிவாசலின் திருத்த வேலைகள் இருப்பதாகவும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கென சில வசதிகளை செய்து…

Read More

‘சமூகத்தின் விடிவுக்காக குரல் கொடுக்கும் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்’ வி.சி இஸ்மாயில்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களை நேசிக்கின்ற, முஸ்லிம் சமூகத்தின் விடிவுப் போராட்டத்திற்காக குரல் கொடுக்கின்ற ஒரு கட்சியாகும் என லக்ஸல நிறுவனத்தின் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச சபைக்கு வறிப்பத்தாஞ்சேனை வடக்கு வட்டாரத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும், பிரதம வேட்பாளர் எஸ்.ஏ.அன்வரை ஆதரித்து வறிப்பத்தாஞ்சேனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது –  றிப்கான் பதியுதீன்

தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார். தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் கூறியதாவது, எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும்…

Read More

சிறந்த பாடசாலை தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக அதிக நிதி!

“கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் செயற்திட்டத்தின் கீழ் 7000 பாடசாலைகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 6000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. இச் செயற்திட்டங்களுக்காக ஒவ்வொரு மாகாணங்களுக்கும் 50 மில்லியன் ரூபா முதல் 400 மில்லியன் ரூபா வரை நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மேலும் பணவசதிகள் தேவைப்பட்டால் அதிகளவிலான நிதியை ஒதுக்கத் தயாராகவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அறிவு, ஆக்கத்திறன், மற்றும் மனிதநேயமுள்ள சிறுவர்களை உருவாக்கும்…

Read More

தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்களை தொடர வேண்டாம்

துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என்ற ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கை குற்றம் புரிந்தவரை பாதுகாக்கும் செயல் என துறைமுக அபிவிருத்தி அமைச்சின் செயளாளர் மஞ்சுல குணசேகர  தெரிவித்தார்.

Read More

ஏறாவூரில் தாயும் மகளும் அடித்துக் கொலை!

மட்டக்களப்பு – ஏறாவூர் முகாந்திரம் வீதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 56 வயதுடைய பெண்ணும் அவரது மகளும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று  சனிக்கிழமை இரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். நூறுமுகம்மது ஹ{சைரா மற்றும் அவரது திருமணமான மகளான 30 வயதுடைய முகம்மது யூசுப் ஜெனீரா பாணு ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளது. பாரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகி;க்கின்றனர். கொலையாளிகள் வீட்டின் சமயலறையின் கூரை ஓடுகளைக் கழற்றி உள்ளே நுழைந்து…

Read More

யாழிலும் கையெழுத்து வேட்டை

– பாறுக் ஷிஹான்- யாழில்  இன்று வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கௌரவமானதாக இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 3 ஜும்மா பள்ளிவாசலின்  முன்பாக அமைந்துள்ள விசேட செட்டின் கீழ் மக்கள் தமது கையொப்பங்களை இட்டனர். மறிச்சுகட்டி தொடர்பில்  மக்களுக்கு புதிய கதைகளை பெரும் பான்மையினர் கூறுகின்றனர்.ஆனால் வில்பத்து அமைந்திருப்பது புத்தளம் எல்லையில்ஆனால் மீள்குடியேற்றம் இடம் பெறுவது மன்னார் மறிச்சுக்கட்டி மக்கள் வாழ்ந்த பாரம்பரிய மண்ணில் என்பதை உறக்கச் சொல்வோம். ஜனாதிபதியே…இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதமாக…

Read More