Headlines

மன்னார் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை புனர் நிர்மாணம் சம்மந்தமான கூட்டம்





வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்றது

மன்னார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளைக்காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது . மன்னார் மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியை மேம்படுத்தவும் அதனூடாக அனைத்து கிராமங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அங்கத்தவர்களான தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளரும் அமைச்சரின் இணைப்பாளருமான முனவ்வர், மீள்குடியேற்ற துரித செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப், அமைச்சரின் இணைப்பாளர் அலிகான் ஷரீப், அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர்,மந்தை தமிழ் பிரதேச இணைப்பாளர் நந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *