Headlines

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் மற்றும் இஸ்வா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் – தாஹிர் எம்.பி சந்திப்பு!

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் இஸ்வா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆகியோருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிருக்குமிடையிலான சந்திப்பொன்று, புதன்கிழமை (01) குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. மேற்படி சந்திப்புகளின் போது, நிந்தவூரின் மத்திய நிர்வாகக் கட்டமைப்பின் முக்கியத்துவம், மார்க்க ரீதியான எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் ஊரின் அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்புக்களில், கட்சியின் நிந்தவூர் மத்திய குழு தலைவரும் முன்னாள் பிரதேச சபை…

Read More

“பிரதமருக்கு எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி

“எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை செயற்பாட்டை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தைக் கோருவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதன்படி பார்க்கும்போது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனை அரசியலமைப்பின் 20 ஆவது…

Read More

மூதூர் தொகுதிக்கான பிரதான தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு!

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூபினால், மூதூர் தொகுதிக்கான தேர்தல் காரியாலயம் நேற்று (16) திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, மு.கா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால ஆதரவாளர்கள் சிலர், முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் வெற்றியின் பங்காளர்களாக, அவரின் கரங்களைப் பலப்படுத்துவதற்காக கட்சியில் இணைந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் விசேட கூட்டத்தில், முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் மாகாண…

Read More

21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு

ஓட்டமாவடி ஸலாகியா பாலர் பாடசாலையின் 21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு கடந்த 27.12.2016 ஆம் திகதி நாகூர் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிக்கா மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் காதர் , மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ஹான் , பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும்…

Read More

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட 9பேருக்கு நோட்டீஸ்

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காவியுடைக்கான துணிகளை விநியோகித்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட ஒன்பது பேருக்கே நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் இடம்பெற்ற பிரசாரத்தின் போது, பொதுசொத்துக்களை நாசம் செய்தமை போன்றவற்றுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, இந்த ஒன்பது பேருக்கும் எதிராக பெவ்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண…

Read More

சோபிததேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் : பிரதமர்

சங்கைக்குரிய அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபிததேரரின் இறுதி நிகழ்வுகள் நேற்று (வியாழக்கிழமை) இலங்கை நாடாளுமன்றத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கள் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சாதாரண பிரஜை ஒருவருக்காக அரச மரியாதையுடன் கூடிய இறுதிக் கிரியைகள் நடத்தப்படுகின்றது. சோபிததேரர் ஏதேனும் ஓர்…

Read More

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஹஜ் பெருநாள் தொழுகை

(அஸ்ரப் ஏ சமத்) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஹஜ்பெருநாள் தொழுகை மருதானை ஆனந்தாக் கல்லூரி அருகில் உள்ள வைட்பார்க் மைதாணத்தில் இன்று(6) காலை 07.00 மணிக்கு நடைபெற்றது. இப் பெருநாள் தொழுகையை டி.எஸ்.ஜ.என்  ரஸ்லான் மௌலவி அவர்களினால் நடாத்தப்பட்டது. மாளிகாவத்தை, மருதானை பிரதேசத்தின் வாழ் முஸ்லீம் ஆண்கள், பெண்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டனர்.

Read More

10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தாத நேபாளத்தின் கடைசி மன்னர்

நேபாளத்தின் கடைசி மன்னரான ஞானேந்திர ஷா கடந்த 10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தவில்லை என மின்ஆணையம் தெரிவித்துள்ளது. மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் தலைமையில் நடந்த பெரும் போராட்டத்தின் விளைவாக அங்கு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஜனநாயக அரசு பொறுப்பேற்றுள்ளது. மன்னராட்சி முடிவுக்கு வந்ததாக பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து மன்னராக இருந்த ஞானேந்திர ஷா, காத்மாண்டுவில் உள்ள நாராயண் ஹித்தி அரண்மனையை காலி செய்து வெளியேறினார். பின்னர் அரச சொத்தான நாகார்ஜுன அரண்மனையில் வசித்து…

Read More

சீனாவுடனான ஒப்பந்தம் உலக ஆடை வர்த்தகத்திற்கு பாரிய நன்மை!

எதிர்வரும் இலங்கை – சீனா ஒப்பந்தமானது 8 பில்லியன் அமெரிக்க டொலருக்கு குறையாத மாபெரும் உலக ஆடை வர்த்தகத்திற்கு இட்டுச்செல்லுவதோடு உலகில் பாரியளவிலான சேட் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த ஒப்பந்தம் தொடர்பில் நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றோம். தீர்வையற்ற சந்தை அணுகலுக்கு சீனா இலங்கைக்கு மிகவும் ஒரு முக்கிய நாடாக திகழ்கின்றது. இது ஆடை பங்கீட்டு நிறுவனங்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் காணப்படும். இந்த தீர்வையற்ற சந்தை அணுகல் எங்களுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆசியாவில் இருந்து…

Read More

இலங்கையில் பலூன் வழி கூகுள் இணையம்!

இன்று (16) முதல் பலூன் வழி கூகுள் இணைய வசதியை பயன்படுத்தும் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது. பலூன் வழி இணைய சேவை தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வருடம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. பலூன் வழி இணைய சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.இதற்காக தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட ஆளில்லா கூகுள் பலூன் நேற்று இலங்கையின் தென் பகுதி ஊடாக இலங்கை வான்பரப்பிற்குள் பிரவேசித்து நிலை கொண்டுள்ளது. இதனையடுத்து…

Read More

ரணிலே அடுத்த பிரதமர் ஆய்வில் தகவல் – 62.3 சதவீதம் முஸ்லிம்கள் ஆதரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கூடுதலான ஆதரவு கிடைக்கும் என பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.  இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் உணர்வு மற்றும் அவர்களின் மனப்பாங்கு  தொடர்பில் முக்கிய கேள்விகளை கொண்டு நாடளாவிய ரீதியில் மாற்றுக்கொள்கை நிலையத்தினால் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் இலங்கையின் அடுத்த பிரதமராகுவதற்கு…

Read More

சூறாவளியால் இலங்கையின் வானிலையில் மாற்றம்!

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள சூறாவளியால் இலங்கையின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.சூறாவளி நிலைகொண்டுள்ள திசையை நோக்கி காற்றலைகள் நகர்கின்றமையால் மழை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஷோபா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி இலங்கைக்கு சுமார் 2000 கிலோமீற்றர் தொலைவில் அரபிக் கடலில் நிலைகொண்டுள்ளது. இந்த சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இந்த சூறாவளிக்கு அஷோபா என இலங்கையினால் பெயர் சூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Read More