Headlines

சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை படைத்தது




சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது 1056-ம் ஆண்டில் லியாவோ ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

மரத்தினால் ஆன இக்கோபுரம் 67.31 மீட்டர் உயரம் கொண்டது. இதில் உள்ள மரக்கட்டைகள் 3 ஆயிரம் கன மீட்டருடன் 2600 டன் எடை கொண்டதாகும்.

எனவே, உலகிலேயே மிக உயரமான மரத்தினால் ஆன ‘பகோடா’ கோபுரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *