Headlines

மொனராகலையில் ஐஸ் கட்டி மழை! மகிழ்ச்சியில் மக்கள்

மொனராகலை பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. நீண்ட காலமாக மழையின்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த மொனராகலயின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மொனராகலை சியம்பலாண்டுவ முத்துகண்டிய என்னும் பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. கடுமையான காற்றுடன் இவ்வாறு ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது : மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பெரும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும், அது தொடர்பில் தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், சமல் ராஜபக்ஷவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென குறிப்பிட்ட அவர், அமைச்சுப் பதவி குறித்து சமலிடம் யாரும் தொடர்புகொண்டு பேசவில்லையெனவும், அது பொய்யான தகவலென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிரணியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும்…

Read More

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!! (கவிதை)

பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே நிற்கும் தூரம் தடைகளாய்ப் போன தூக்கம் ..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம் மடையெனத் திறக்கும் கண்ணீர் ..மனத்தினில் கொதிக்கும் செந்நீர் உடைந்திடும் இளமைக் கட்டும் ..உடையினில் வேடம் மட்டும்! வாயினைக் கட்டிப் பூட்டி …வயிற்றினைப் பசியால் வாட்டி காயமும்…

Read More

கிரமத்துக்கு ஒரு கோடி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் பிரதம அதிதியாக மொஹமட் பாயிஸ்

தேசிய இளைஞர் சேவைகள் சபையின் கிரமத்துக்கு ஒரு கோடி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் கொழும்பு வடக்கு ரோயல் இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது….

Read More

வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறவில்லை – பஸில் ராஜபக்ஸ

வில்பத்து மற்றும் அதனையண்டிய பிரதேசத்தில் உரியமுறைகளை பின்பற்றியே வடக்கு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டதாக பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு வசந்தம் திட்டத்திற்கு தான் பொறுப்பாளராக நியமிக்கபட்பட்டிருந்த போது, உரிய சட்டங்களை பின்பற்றி  அங்கு மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு, அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கியதாகவும், இவை முழுக்கமுழுக்க சட்டபூர்வமானவை எனவும் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உண்டு. அதன்பின்னர் அவர்கள் புலிகளினால் பலாத்காரமாக விரட்டியடிக்கபட்டனர். பயங்கரவாத பிரச்சினை…

Read More

தவம் கட்சியினைக் காட்டிக் கொடுத்தாரா..? காட்டிக் கொடுத்ததாக கூறியவர் காட்டிக் கொடுத்தாரா..?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறிய நல்ல கருத்துக்கள் பலவற்றை திரிவு படுத்தி கற்சிதமாய் மக்களிடம் சேர்க்கும் பணியில் சிலர் அண்மைக் காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதன் பின்னணியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளதாகவும் அறிய முடிகிறது.அண்மையில் தாருஸ் சலாமில் நடந்த கட்சிக் கூட்டத்தின் போது தவம் அரசிற்கு சார்பாக குரல் கொடுத்ததாக ஒரு குறித்த ஊடகவியலாளர் அண்மையில் கூறி இருந்தார். “இது ஓர் திரிவு படுத்தப் பட்ட செய்தி” என …

Read More

சவூதி வேலை சம்மந்தமான வழக்குளில் இனி உடனடி தீர்ப்பு!

சவுதியில் வீட்டு வேலை மற்றும் கம்பெனி வேலை சம்மந்தப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினையை தினமும் சந்திக்கிறார் இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர சவுதி தொழில் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி: வீட்டு வேலையில் சம்பளம் மற்றும் பிற பிரச்சினைகள் மூலம் தொடரப்பட்ட வழக்குகள் 5 நாட்களில் அவருடைய sponsor முன்நிலையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் அப்படி வழக்கு முடியவில்லை என்றால் வழக்கு பதிவு செய்யபட்டு நீதிமன்றத்தில் நீதிபதி முன்நிலையில் 10…

Read More

புதுகுடியிருப்பு முஸ்லிம் பாடசாலையில் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட புதுகுடியிருப்பு வட்டாரத்தின், மன்/புதுகுடியிருப்பு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது. அத்துடன், கடந்த ஆண்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் இப்பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை நுழைவாயில் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரமும் இன்று அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,  மன்னார் பிரதேச…

Read More

ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் – அப்பாஸ்

ஐ.நா. பொது சபை கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் அப்பாஸ், போரின் போது தங்களிடம் இருந்து ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் மஹ்மவுத் அப்பாஸ், போரின் போதுதங்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட நிலங்களை இஸ்ரேல்…

Read More

சிரியாவின் துயர நிலை கவலையளிக்கின்றது – அமைச்சர் றிஷாத்

சிரியாவின் கேந்திர நகரமான அலப்போ பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிக்கி உயிருக்காகப் போராடிவரும் மக்களின் துயரநிலை கவலையளிப்பதாகவும் இவர்களுக்கு விமோசனம் கிடைக்க நாம் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளில் பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் குளிர்காய நினைக்கும் அந்நியசக்திகளின் அநாவசியத்தலையீடுகள் காரணமாக இவ்வாறான மிலேச்சத்தனமான படு கொலைகளும் இரத்தக்களரிகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான திட்டமிட்ட ஊடுருவலை சமாதானத்தை விரும்பும் நாடுகளும், உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டுள்ள…

Read More

அமெரிக்க முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்கிறார்கள்

“கடிகாரம் செய்து கைதான அகமது முகமதின் குடும்பம் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது, நாட்டில் முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்வதைக் காட்டுகிறது’ என்று அமெரிக்க முஸ்லிம்கள் அமைப்பின் தலைவர் யாஸர் பீர்ஜாஸ் கூறியுள்ளார். அகமது முகமது  சொந்தமாகச் செய்து, வகுப்புக்கு எடுத்து வந்த கடிகாரத்தை ஆசிரியர்கள் வெடிகுண்டு என தவறாகக் கருதியால் அவர் கைது செய்யப்பட்டார். மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கத்தார் நாட்டுக்குக் குடி பெயர முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து…

Read More

ஊவா தேர்தலில் அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் இனவாதத்திற்கு பாடம் புகட்டுவதாக அமையுமா?

-சத்தார் எம் ஜாவித்– முஸ்லிம் சமுகம் கடந்த முப்பது வருட காலத்தில் யுத்தம் காரணமாக உடல் ரீதியாக ஒரு விதமான இன்னல்களுக்கு முகங்கொடுத்து துன்பப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் தற்போது இன்னுமொரு விதத்தில் அதாவது பொதுபல சேனா என்ற அரக்கர்களினால் உணர்வு ரீதியாக துன்பத்தை அனுபவித்து வரும் இத்தருணத்தில் ஊவாத் தேர்தலுக்கு மக்கள் முகங்கொடுக்க தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது. உண்மையில்  சிறுபான்மையினர் என்ற வகையில் இத்தேர்தல் ஒரு முக்கியமான கருவியாகவே கருதப்பட வேண்டியுள்ளது. காரணம் முஸ்லிம் சமுகத்தை புறந்தள்ள நினைக்கும்…

Read More