Headlines

ஐ.நா வாக்கெடுப்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கை அரசுக்கு அமைச்சர் ரிஷாட் நன்றி தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- பலஸ்தீன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனத்தை ஆதரித்து அமெரிக்காவுக்கு எதிராக, இலங்கை வாக்களித்திருந்ததை வரவேற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலைநகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி, இன்று (22) கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக, அமெரிக்கா கடந்த 5 ஆம் திகதி வெளியிட்ட…

Read More

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு..சதொச உட்பட ஏனைய சுப்பர் மார்க்கட்களிலும் ஒரே விலையில்.. அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

– ஊடகப்பிரிவு- கூடுதலாக கோரிக்கையுள்ள நாட்டரிசி பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதனால், அதனை கட்டுப்பாட்டு விலைக்கு கொண்டு வர வேண்டுமென கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். அண்மையில் நடாத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, உள்நாட்டில் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோவின் ஆகக்கூடிய விலை ரூபா.74 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது லங்கா சதொசவில் ஒரு கிலோ நாட்டரிசி ரூபா. 70 க்கு விற்பனை…

Read More

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் போட்டியிடும் மாவட்டங்களும், விபரங்களும்!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள 06 மாவட்டங்களில் தனித்தும், 07 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடுகின்றது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை…

Read More

“இலங்கையின் கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்” அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- “நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை கைத்தறித்துறை ஒரு பின்னடைவை எதிர்கொண்டதுடன் வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும், பல அரசு முயற்சியாளர்கள் வெற்றிகரமாக இந்த துறைகளை புதுப்பித்துள்ளன. இன்று, பல இலங்கை கைத்தறி தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர். இலங்கையின் கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் முன்னெடுத்து வருகின்றனர்.  எனது அமைச்சும் இந்த துறையை ஊக்குவிப்பதற்காகவும், கைத்தறி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும்…

Read More

13 மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்!

-ஊடகப்பிரிவு- வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கொழும்பு ஆகிய 07 மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்திலும், அம்பாறை, குருநாகல், கம்பஹா,  களுத்துறை, திருகோணமலை, கண்டி ஆகிய 06 மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (21) தாக்கல் செய்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய தேசிய…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிபாரிசில் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலை தரமுயர்வு!

  -ஊடகப்பிரிவு-   முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நற்பிட்டிமுனை அமைப்பாளரும், சி.எம்.முபீத் மற்றும் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசன் தலைவர் சி.எம்.ஹலீம் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சிபாரிசில், 38 வருடமாக 1C தரத்தில் இருந்த நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயம் 1AB  தரத்துக்கு உயர்த்தப்பட்டு உயர்தர விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப வகுப்புக்களுக்கான அனுமதி வழங்கப்படுள்ளதுடன், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் பானகமுவ பாடசாலைக்கு புதிய மக்தப் கட்டிடம்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதியின் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும், பிரதேச சபை வேட்பாளருமான அஸ்வரின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன்,…

Read More

குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீடுகளுக்கான மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மேல்மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில், கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில், பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், 06 வீடுகளுக்கான மின்சார இணைப்பு இன்று (20) வழங்கி வைக்கப்பட்டது. மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் தலைமையில், இடம்பெற்ற இந்நிகழ்வில்…

Read More

காத்தான்குடி சுதந்திரக் கட்சி முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்  ரிஷாட்டுடன் இணைவு!

-ஊடகப்பிரிவு- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அணியிலிருந்து நீண்ட காலமாக பலமிக்க பிரமுகர்களாய் திகழ்ந்த பலர் இன்று காலை (20) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி நகர சபை தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் முன்னிலையில் இணைந்து கொண்ட இவர்கள்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் காத்தான்குடி நகரசபையில் தனித்து, தனது மயில் சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.    

Read More

மு.கா முதன்மை வேட்பாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- கல்பிட்டி பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதான வேட்பாளராக களமிறங்க இருந்த கடையாமோட்டை வட்டாரத்தை சேர்ந்த, முஹம்மத் பைசல் இன்று (20) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். இவர் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, கல்பிட்டி பிரதேச சபை தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி அமைப்பாளர்…

Read More

‘எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தலல்ல. ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தல் அல்ல. ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரைத் தெரிவு செய்வதற்காக அவர் சார்ந்த சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்கின்ற தேர்தலாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சரிப் அலி ஆசிரியர் அமைப்பின் ஏற்பாட்டில், றோஸ் முன்பள்ளியின் 23 வது மாணவர் தரமுயர்த்தல் விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) செம்மண் ஓடை அல்/ஹம்றா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதில் பிரதம…

Read More

களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டி!

-ஊடகப்பிரிவு- களுத்துறை மாவட்டத்தில் உள்ள களுத்துறை நகரசபை மற்றும் பேருவளை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில்  சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. களுத்துறை நகரசபைக்கான வேட்புமனுவை கட்சியின் முதன்மை வேட்பாளரும், அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான எஸ்.எம்.ஹிஷாம், களுத்துறை மாவட்டத்தில் இன்று (20) தாக்கல் செய்தார். நாளை காலை (21) பேருவளை பிரதெச சபைக்கான வேட்புமனுவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாக்கல் செய்யவுள்ளது. இதே வேளை, கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மாநகர சபை, அத்தனகல்ல…

Read More