Headlines

அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை அனுபவிக்கும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்

Irshad Rahumathulla இந்த நாட்டில் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை அனுபவிக்கும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த உரிமைகளுக்கு தடைகள் வருகின்ற போது இதனை வெற்றிக் கொள்ள தமது கட்சியின் தொழிற்சங்கம் எல்லா நேரங்களிலும் செயற்படும் என்றும் கூறினார். தொழிலாளர் தினத்தையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில்…

Read More

பூகம்பம் குறித்து இஸ்லாம்..!

பூகம்பம் எப்படி உருவாகும்..? பூமிக்கு கீழே கண்டத்திட்டுகள் நகர்ந்து ஒன்றோடொன்று உராய்வது தான் பூகம்பத்துக்கு காரனம் என அறிவியல் சொல்கிறது… இத அப்படியே மனசுல வச்சுக்கிட்டு வாங்க.. அல்லாஹ் தனது வேதத்தில் “பூமியின் மீது மலைகளை முளைகளாக நட்டி வைத்திருக்கிறோம்..உங்களை அசைத்து விடாது இருப்பதற்காக” ன்னு சொல்கிறான்… முளைகள்னா என்ன? இரண்டு வேறு வேறான நிலைகள் கொண்ட பொருட்களை ஒன்னோடு ஒன்னா இணைப்பது தான் முளைகள்..அதன்படி பூமியின் உள்பகுதி திரவத்திற்கு சமமான நிலையிலும்,மேற்பகுதி திடமான நிலையிலும் இருக்கு….

Read More

றிஷாத்  பதியுதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் சிங்கள ராவய முறைப்பாடு

அமைச்சர் றிஷாத்  பதியூதீனை கைது செய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு கோரியுள்ளது. சிங்கள ராவய அமைப்பு அமைச்சருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. வில்பத்து வனப் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைச்சர் தொடர்புபட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read More

இலங்கைக்கு ஒபாமா புகழாரம்

தற்போது இலங்கையில் இடம் பெற்று வருகின்ற மாற்றங்கள் உலகத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நிவ்யோர்க் நகரில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று மாலை சந்தித்த ஒபாமா இதனை கூறியுள்ளார். மாறிவரும் இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஒபாமா இதன் போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கனடாவின் பிரதமர் Justin Trudo,அவுஸ்திரேலியாவின் பிரதமர் Malcolm Turnbull மற்றும் பாகிஸ்தான் பிரதமர் Nawaz Sherif ஆகியோரை ஜனாதிபதி…

Read More

வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக ‘பிரேரணை கொண்டுவருவேன்’

‘இனங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளுக்கு எதிரான தடைச் சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து பலரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் விரைவில் தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டுவருவேன்’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ‘பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டும் விதத்திலான வெறுப்புக் கருத்துகளை, மஹியங்கனையில் வைத்துத் தெரிவித்திருந்தார். இது, கண்டிக்கத்தக்கதாகும்’ என்றும் அவர் குறிப்பட்டுள்ளார். இந்த…

Read More

முஸ்லிம் தீவிரவாதி என்று அழைப்பது தவறு: டொனால்ட் டிரம்புக்கு தலாய்லாமா அறிவுரை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர் இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ள திபெத்திய மதகுரு தலாய் லாமா, சில முஸ்லிம்கள் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதால் முஸ்லிம் தீவிரவாதி என பொத்தாம்பொதுவாக அனைவரையும் அழைப்பது தவறு என கூறியுள்ளார். தனது மனதில் தோன்றும் கருத்தை கூறும் உரிமை டொனால்ட் டிரம்புக்கு உண்டு. ஆனால், அவரை நான் சந்திக்க நேர்ந்தால் உங்களது நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன? என்பதை விபரமாக கூறுங்கள்…

Read More

இன்று மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை

பொதுத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 5 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். குறித்த உரை நேற்று (13) நிகழ்த்தப்படவிருந்த போதும், இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அமைச்சர் றிஷாத் அவசர கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தை கையாலவென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முக்கியஸ்தர்களான அமைச்சர்களான திலக் மாரப்பன, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள தனித்தனிக் கடிதத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். அப்பாவிகளான இந்த கைதிகள் சந்தர்ப்பவசத்தால் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டவர்களாக இருக்கலாம். அத்துடன் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு…

Read More

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 39 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் இரண்டு பிக்குமார் மற்றும் மாணவியரும் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான காயங்களுக்குட்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெறும் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் இன்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். எனினும் இச்சம்பவத்தின் போது சாதாரண காயங்களுக்குள்ளான ஆறு பொலிசார் கொழும்பு…

Read More

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவி பிரமாணம்

சிறைச்சாலைகள் அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். அத்துடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவி பிரமாணம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக கடமையாற்றிய திலக் மாரபன்ன நேற்று முன்தினம் பதவி விலகிய நிலையிலேயே, இந்த அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை கிராம சேவகர் பிரிவில் செமட்ட செவண வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. ஒட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உதவி பிரதேச செயலாளர் ஏ.அப்கர், செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்…

Read More