Headlines

அனைத்து இனங்களும் சமமாக வாழும் நிலையை மஹிந்த அரசாங்கம் அழித்து விட்டது – ரணில்




நாட்டில் சகல இனங்களும் சரி சமமாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
பேருவளை – சபுகொடை விகாரையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் அனைத்து வாழும் அனைத்து இனங்கள் மற்றும் அவர்களின் கலாசாரம் பெருமைக்குரிய விடயங்களாகும். மேலும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் சரி சமமாக வாழும் நிலை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். மஹிந்த அரசாங்கம் அதனை முற்றாக அழித்து விட்டது. அதன் காரணமாகவே இனங்களுக்கிடையிலான முறுகல் நிலைகள் மீண்டும் தோன்றியுள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *