Headlines

‘கிழக்கு அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும்’ மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட தோப்பூர் பிரமுகர் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- தோப்பூர் பிரதேசத்தின் பிரபல சமூக சேவகரும், கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் (RDS) தலைவருமான ஏ.எஸ்.ரிபாஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். கட்சியின் மத்திய குழுத் தலைவர் அப்துல் ரசாக் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே, அவர் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். காலாகாலமாக எமது பிரதேசவாழ் மக்கள் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களித்து வந்தபோதும், இந்தப் பிரதேசத்தில் எந்தவிதமான அபிவிருத்தியும் இதுவரை இடம்பெறவில்லை. கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசியலில்…

Read More

தளம்பல் அரசியல் தொடர்ந்தால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக் குறியாகுமா………..?

இஸ்ஸதீன் றிழ்வான் இனவாதமும் சர்வதிகாரமும் குடும்பவாதமும் இணைந்த இலங்கை அரசியல் மைத்திரி என்ற மாந்திரத்தால்முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானமும் சாத்வீகமும் கொண்ட ஒரு ஆரம்பத்தை எதிர்பார்த்தோம்,எதிர்பார்க்கின்றோம். சிறிய  பெரிய கட்சிகளின் கோர்ப்பாய் இன்றைய அரசாங்கள் நகர்கிறது, முடிவுகள் எடுப்பதில் பாரியசர்ச்சைகளும் சுமைகளும் சேர்ந்தே சுழலுகிறது. கூட்டிணைந்திருக்கின்ற கட்சிகளையும் பிரதிநிதிகளையும் திருப்திப்படுத்தவேண்டி இருப்பதால்தீர்மானங்களை எடுப்பதில் பாரிய சவாலைஇந்த அரசு முகங்கொடுக்கின்றது. இதற்கு நல்ல உதாரணமாக மரிச்சிக்கட்டி வில்பத்து விவகாரம் அமைந்திருக்கின்றது. மரிச்சிக்கட்டியில் முறையற்ற எந்த குடியேற்றங்களும் இடம்பெறவில்லை என்பதை ஆளும்…

Read More

நேபாள பூகம்பம்- தேவைப்படும் நிதி கிடைக்கவில்லை

நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய போதுமான நிதி கிடைக்கவில்லை என்று ஐ நா தெரிவித்துள்ளது. இதுவரை நிவாரண நிதியாக 22 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக நேபாள பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜேம்ஸ் மெக்கோல்ட்ரிக் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு வாரத்துக்கும் முன்பு நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 415 மில்லியன் டாலர்கள் வேண்டும் என்று ஐ நா கோரியிருந்தது. நிதி உதவிகள் வேகமாக கிடைத்தால்தான், மலைப் பகுதிகளில் இருக்கும் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு…

Read More

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம்

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மலேரியா நோய் தொடர்பான நிலைமை குறித்து ஆராய்ந்து இலங்கை மலேரியா நோயை ஒழித்த நாடு என்பதை உறுதிப்படுவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க இந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை வரும்…

Read More

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்திற்கு பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம்

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய த்திற்கு கடந்த 02.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம் செய்தார். வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய அதிபர் தேவநாயகம் அவர்களின் வேண்டுக்கினங்க கௌரவ பிரதி அமைச்சர் அமீர்அலி பாடசாலைக்கு சென்று அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து எதிர்காலத்தில் என்னால் முடிந்த பங்களிப்புகளை செய்து தருவதாக குறிப்பிட்டார். இவ்விஜயத்தில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம சேவையாளர் அருள் ராஜ், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து…

Read More

இரட்டைப் படுகொலையை கண்டித்து ஏறாவூரில் கடையடைப்பு

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வருக்கும்  அதிக தண்டனை  வழங்கக் கோரி இன்று ஏறாவூரில் கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு –  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில்…

Read More

கழுத்தை அறுத்துகொள்வதாக தெரிவிக்கும் மஹிந்த 82 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி!

ஒரு டொலரையேனும் மோசடி செய்திருந்து அதனை நிரூபிக்கும் பட்சத்தில் தனது கழுத்தை அறுத்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சுனாமி உதவித் திட்டத்தில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்துள்ளார் என பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த  பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க, சுனாமி உதவி திட்ட மோசடியில் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ் மற்றும் மத்திய வங்கியின்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் வழங்கியுள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழத்துச் செய்தி

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரிமிக்க சமூகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இஸ்லாம் மார்க்கம் மனித சமூகத்தின் விமோசனத்திற்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் படியும் எமக்கு போதித்துவருவவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்றைய தியாமிகு திருநாளில் நாம் விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படும் வகையில் எமது வாழ்வின் பணிகளை அமைத்துக்கொள்ளுமாறு பெருநாள் வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பொருநாளையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இந்த பெருநாள்…

Read More

கூட்டமைப்புடனான பான் கீ மூனின் சந்திப்பு மிகவும் முக்கியமானது

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் அரசாங்கத்திற்கு சாதகமானது. ஜெனிவா நெருக்கடிகளில் இருந்து நாம் பூரணமாக விடுபட அவரது விஜயம் சாதகமாக அமையும் என அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடனான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சந்திப்பு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் அவரது…

Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் மீண்டும் கோரிக்கை!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் அமைப்பு மீளவும் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே தற்போதைக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட முடியாது என கூறப்படுவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு நாம் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். முறைப்பாடு செய்யப்படாத சர்ச்சைகளற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்பட…

Read More

காத்தான்குடி இறைச்சிக்கடை உரிமையாளர்கள் ஹர்த்தால்

– ஜவ்பர்கான் – காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தமது கடைகளை மூடி ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தினமென்பதால் பிரதேசத்து முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மாட்டிறைச்சியை உணவாக உண்பது வழமையாகும். இவர்களின் இந்த பகிஸ்கரிப்பினால் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பொதுச் சந்தை மற்றும் புதிய காத்தான்குடி சந்தை, புதிய காத்தான்குடி சந்தை உட்பட காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள 28 மாட்டு இறைச்சிக்கடைகளும்…

Read More

தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-முர்ஷிட் கல்குடா- கண்டி பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் சில நாட்களாக பாராமுகமாக இருந்தது கவலைக்குரிய விடயம். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்களின் பின்னர் விசாரணை இடம்பெற்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,  கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…

Read More