Headlines

காலி – மாத்தறை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்




காலி மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உனவட்டுன மற்றும் கட்டுகொட பகுதிகளுக்கு இடையிலான பாலமொன்றில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இம் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *