Headlines

முதியோர் தினத்தில் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

முதியோர் தினத்தை முன்னிட்டு கைதடி முதியோர் இல்லத்தில்  கடந்த 60 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.எதிர்வரும் 1 ம் திகதி முதல் 7 ம் திகதி வரை முதியோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவர்கள் முதியோர் இல்லத்துக்கு இவர்கள் ஆற்றிய சேவைகள்  நினைவு கூரவுள்ளதாக இல்லத்தின் பணிப்பாளர்  கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

Read More

லசந்த வழக்கு ; இராணுவ புலனாய்வு அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியை எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று (03) கல்கிசை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பல்கலைக்கு 27,603 மாணவர்கள் உள்வாங்கப்படுவர்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 27,603 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார். இது கடந்த முறையை விட 10 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Read More

எனக்கு பள்ளிவாசலுக்குச் செல்லக்கூட முடியாத நிலை இருக்கிறது – அசாத் சாலி

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரான அசாத் சாலி, மத்திய மாகாண சபை உறுப்பினராக உள்ளார். முஸ்லிம் தரப்பில் இருந்து அரசாங்கத்தை விமர்சிப்பதில் முதலாமவராகவும் உள்ளார். இதன் காரணமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் அவரது கைத்துப்பாக்கிக்கான லைசென்ஸை புதுப்பிக்க பொலிசார்…

Read More

ஐ. தே. க. ஆட்சியில் புதிய அரசியல் யாப்பு – கபீர் ஹாசிம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் வாபஸ் பெறப்பட வேண்டும். அடுத்த பாராளுமன்றத்தில் ஐ.தே.க. ஆட்சியின் கீழ் 20 தாவது திருத்தத்தை நிறைவேற்ற முன்னுரிமை வழங்கி நிறைவேற்றுவதாக ஐ. தே. க செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார். மக்கள் ஆணையுடன் உருவாகும் அடுத்த ஐ. தே. க. ஆட்சியில் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்….

Read More

கொழும்பில் 2500 டொன் கழிவுகள் அகற்றப்பட்டன

வெள்ளத்திற்கு பின்னர் கொழும்பு மாவட்டத்தில் காணப்பட்ட 2500 டொன் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்பாட்டில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியன இணைந்து கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதுவரை கொலொன்னாவை, மீதொட்டமுல்ல, கொட்டிகாவத்த முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கொதடுவ, கொஹிலவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் தொண்டு நிறுவனங்களும் இப்பணிகளில் இணைந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னாயத்த பிரிவு கூறியுள்ளது. அவ்வாறு…

Read More

மன்னார் அரிப்பு பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு வாழ்வாதார பொருட்கள்.

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் அரிப்பு கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கான வாழ்வாதார பொருட்கள் மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.  இவ் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்…

Read More

வீழ்த்தினவள் வழக்கு, தொடுக்கப் போறாளாம்…!

சிரிய அகதியை இடறவைத்த ஹங்கேரி நாட்டு கெமரா பெண் இடறி விழு ந்த அந்த அகதி மீது வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார். பெட்ரா லாஸ்லோ என்ற அந்த பெண், 52 வயது ஒசாமா அப்துல் மொஹஸன் என்ப வர் தனது குழந்தையுடன் பொலிஸ் பிடியில் இருந்து தப்பித்து ஓடும்போது தடு க்கி விழச்செய்தார். இந்த வீடியோ சமூகதளம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி யதை அடுத்து லஸ்லோ பணியாற்றிய தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந் தும் நீக்கப்பட்டார். இந்த…

Read More

‘இன‌வாதிக‌ளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் த‌லைமையிலான‌ ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முன்வர வேண்டும்’ உலமா கட்சித் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என‌ அனைத்து முஸ்லிம் க‌ட்சிக‌ளும் ஐக்கிய தேசியக் கட்சியுட‌ன் இணைந்தே உள்ள‌ன‌ என்ற ய‌தார்த்த‌தை முஸ்லிம்க‌ள் இன்ன‌மும் புரிந்து கொள்ள‌வில்லை. இவ்விரு க‌ட்சிக‌ளும் ஐ.தே.க வுடன் இணைந்தே மைத்திரியை ஜ‌னாதிப‌தியாக்கின‌. இரு க‌ட்சிக‌ளும் ஐ.தே.க வுட‌ன் இணைந்தே  ஐ.தே.க‌ த‌லைவ‌ர் ர‌ணிலை பிர‌த‌ம‌ர் ஆக்கின‌. இந்த‌ நிலையில் ம‌யில் யானையுட‌ன் இணைந்தால் ஹ‌லால், ம‌ர‌ம் யானையுட‌ன் இணைந்தால் ஹ‌ராமா என‌ ச‌மூக‌ம் கேட்ப‌து அத‌ன்…

Read More

புனித கஃபாவை அழிக்கும் முயற்சியில் அப்ரஹா மன்னன் பயணித்த பாதை சவூதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது!!

சவூதி அரேபியாவின் King Saud பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களான இளைஞர் குழு ஒன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அப்ரஹா மன்னனின் யானைப்படை புனித கஅபாவை அழிப்பதற்காக பயன்படுத்திய பாதை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இந்த யானைப்படை தொடர்பில் புனித அல்-குர்ஆன், 1௦7 ஆம் அத்தியாயத்தில், சுருக்கமாகவும் யானைபடைக்கு நேர்ந்த கதியை தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் பதினான்காம் நூற்றாண்டின் குர் ஆன் ஆய்வாளரான இப்னு கதீர் என்பவர் குறிப்பிடுகையில் அப்ரஹா அல் ஆஸ்ரம் (Abraha Al-Ashram)…

Read More

அவன்கார்ட் கணக்காய்வாளரை குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு

அவன்கார்ட் நிறுவனத்தின் கணக்காய்வாளரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று (25) உத்தரவிட்டுள்ளார். காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணைகளை மார்ச் முதலாம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

Read More

ஜனாதிபதிக்கும் முன்னணி கட்சி தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று காலை  இக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி தலைவர்களுக்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச நேற்று குறிப்பிட்டிருந்தார். இக் கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி கலந்துகொள்ளவுள்ள நிலையில் தங்கள் கருத்தை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய…

Read More