Headlines

“இஸ்ரேலின் எந்த ஈனச்செயல்களும் முஸ்லிம்களின் ஈமானை அழித்துவிடாது; இறுதி வெற்றியும் எமக்கே”

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலேயே, முஸ்லிம்கள் இம்முறை புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாகவும் நெருக்கடிகள் நீங்கி, நிம்மதி ஏற்பட இந்நாளில் பிரார்த்திக்கும்படியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “முஸ்லிம்களுக்கு எதிரான ஸியோனிஸவாதிகளின் அத்துமீறல்கள் எல்லைமீறியுள்ளன. காஸாவில் ஈவிரக்கமின்றி இனவழிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இஸ்ரேலிய அரசு,…

Read More

செங்கல் உற்பத்தியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை பகுதியில், செங்கல் உற்பத்தியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், செங்கல் உற்பத்தியில் ஈடுபடும்…

Read More

ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் – சரத் பொன்சேகா

எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக இந்த நிகழ்வு இடம்பெற்றது. 10 அமைப்பாளர்கள் இதன் போது தெரிவு செய்யப்பட்டனர்.

Read More

ACMC நிந்தவூர் கட்சிக் காரியாலயம் திறந்து வைப்பு

கட்சியென்றால் மார்க்கம் போல் நினைக்கின்றனர்.கட்சியினை வைத்து தொழில் செய்கின்றனர்.மக்களுக்கு உதவாத கட்சி அதனை விட்டுவாருங்கள் என்றால் ஏதோ மதத்தினை விட்டுவருவதால் பிரயத்தனம் செய்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் முஹம்மத் சிசானின் கட்சி அலுவலகத்தினை நிந்தவூரில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகத்தின் விளைவு அவர் ஆட்சியில்…

Read More

சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கை பாராட்டுக்குரியவை

அவுஸ்திரேலியா சட்டவிரோத குடியேற்றத்தற்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலிய அரசு பாராட்டியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி தலைமையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அரசின் சர்வதேச மற்றும் வர்த்தக அலுவல்கள் திணைக்களத்தின் குடியகல்வு தொடர்பான உயர்ஸ்தானிகர்  எண்ட்ரூ கொலோன்சின்விஸ்கி உட்பட அதிகாரிகள் நீதிமன்ற அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை சந்தித்தபோதே இப்பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன்  இதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை…

Read More

மஹிந்த அரசு  நோன்பு காலங்களில் கிறீஸ் பூதங்களை ஏவி முஸ்லிம்களை அச்சுறுத்தியது!

‘கடந்த நோன்பு காலங்களில் மஹிந்த அரசாங்கம் கிறீஸ் பூதங்களை ஏவி விட்டு முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை சீர்குலைத்து அச்சுறுத்தியதை எவரும் மறந்து விட முடியாது’ என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார இணைப்பு செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்துள்ளார். ‘மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்காக வீதிகளில் இறங்கி மண்டியிடுவதானது அவருடைய பதவி மோகத்தையே காட்டுகிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சாய்ந்தமருதில் பேரிச்சம்பழம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More

யாழ் முஸ்லிம்கள் தொடர்பில் எழுத்துமூல ஆவணம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளேன் – றிப்கான் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு வாக்களித்த தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு சமமான முறையில் தமது பணிகளை ஆற்றுவதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் தமது நன்றியினை தெரிவிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளதுடன்,அதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச வேண்டும் என்ற கோறிக்கையினையும் முன் வைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ் விஜயம் செய்தமை தொடர்பிலும்,அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்…

Read More

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – மஹிந்த

மரணித்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களது குடும்பங்களை கட்டியெழுப்ப முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. யுமான மஹிந்த ராஜபக்ச நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றநாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றகையிலேயே மஹிந்த ராஜபக்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1958ல் நாட்டில்…

Read More

சிறிதுகாலம் பொறுத்திருங்கள் – ரவி கருணாநாயக்க

நல்லாட்சியை  வழங்கிய மக்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள் நீங்கள் எதிர்பார்த்த  வசந்த காலம் வரும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கபட்டது. இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன்போது பேசுகையிலேயே நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க மேற்கண்டவாறு…

Read More

1959 இல் பண்டாரநாயக்காவை படுகொலை செய்தது போன்று, மைத்திரியை படுகொலைசெய்ய முயற்சி – ராஜித சேனாரத்ன

-எம்.ஏ. எம். நிலாம்- ஜனாதிபதியின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக  நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, அன்று 1959 பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டது போன்றதொரு முயற்சி இன்றும் காணப்படுவதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடப்பாட்டை மக்கள் கொண்டிருப்பதாக தெரிவித்தார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக சில சக்திகள் ஜனாதிபதி…

Read More

கடுகண்ணாவ மண் சரிவு: தாயும் மகனும் ஜனாஸாவாக மீட்பு

கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 வயதுடைய சிறுவனின் சடலமும் தாயொருவரின் சடலமும் இவ்வாறு மீட்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஏனைய நால்வரையும் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 06 பேர் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போயிருந்தனர்.

Read More

“ஞானசாரர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?” –  அமைச்சர் றிஷாத் கேள்வி

சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் மோத விடும் வகையில் அப்பட்டமான விஷக் கருத்துக்களைப் பரப்பியும் அல்லாஹ்வை மோசமாக கேவலப்படுத்தியும் வருகின்ற ஞானசார தேரருக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் நாங்கள் முறைப்பாடு செய்துள்ள போதும் இற்றைவரை அவர் ஏன் கைது செய்யப்படாமல் இருக்கின்றார் என பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, ’வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என முஸ்லிம்களாகிய…

Read More