Headlines

யார் முன்னிலையிலும் அரசாங்கம் மண்டியிடாது

நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற நல்லாட்சி அரசாங்கமானது யார் முன்னிலையும் மண்டியிடாது. எனினும், சகலருக்கும் காது கொடுப்பதற்கு தயாராகவே உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சாதாரண கோரிக்கைகளை யாராவது முன்வைத்தால், அவற்றுக்கு அரசாங்கம் காதுகொடுக்கும்.  எனினும், கண்டித்தோ அல்லது பயமுறுத்தியோ…

Read More

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம்

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மலேரியா நோய் தொடர்பான நிலைமை குறித்து ஆராய்ந்து இலங்கை மலேரியா நோயை ஒழித்த நாடு என்பதை உறுதிப்படுவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க இந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை வரும்…

Read More

காணி விடுவிப்பு செய்வது பற்றி ஆராயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர்…

மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி தொடர்பாக காணி விடுவிப்பு செய்வது பற்றி ஆராயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மீண்டும் எதிர்வரும் இம்மாதம் 9 ஆம்,10 ஆம் திகதிகளில் முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேச செயலகப் பிரதேச செயலகங்களுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜனாதிபதியினை ஜூலை மாதம்  சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் முசலி பிரதேச மக்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மேற்படி குழு…

Read More

‘பிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை ஒருசில நூறு வாக்குகளினால் இழந்தமைக்கு, நமது சமூகம் பல கட்சிகளுக்குப் பிரிந்து வாக்களித்ததே காரணம் எனவும், அதே தவறை இம்முறை செய்து மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வீணாக்கிவிட வேண்டாமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபைத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று மாலை…

Read More

வில்பத்து விவகாரம் – முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் பௌத்த பிக்கு (வீடியோ)

வில்பத்து விவகாரம் – சிங்கள அரசியல் பிரதிநிதியும் பௌத்த பிக்குவும் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பியுள்ளனர் (video – 01) (video – 02)  

Read More

அரசியல் அதிகாரம் இல்லாத போதும் அம்பாறை மக்களுக்கு, மக்கள் காங்கிரஸ் பெரும் பணியாற்றியுள்ளது’ – வேட்பாளர் ஹனீபா மதனி!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளில் இரண்டை மீறிவிட்டார் எனவும், அதில் தேசிய பாதுகாப்பும் ஒன்று என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியாளார் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு  குறுகிய காலத்துக்குள் அதிகமான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்தவர். எனவே, சிறுபான்மை மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு…

Read More

இன்புலுவன்சா நோய் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் நிலை

நாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்களுக்கான வைத்திய உதவிகளை வழங்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் வைத்தியசாலைகளில் இல்லையென தாதியர் சங்கம் இதன்போது சுட்டிக்காட்டியள்ளது. இதுவரையில் குறித்த நோயினால் 4 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களில் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

ஐ.எஸ் படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்- ஒபாமா அதிரடி

ஐ.எஸ் படைக்கு எதிராக, சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் நாடுகளை இணைத்து தனி இஸ்லாமிய நாடு அமைக்கும் நோக்கத்தோடு போர் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிரான நடவடிக்கைகளை நேட்டோ நாடுகளுடன் இணைந்து எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டது. இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற செனட்களின் ஆதரவு இல்லாமல், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிராக சிரியாவில் தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ஐ.எஸ்-ஸுக்கு எதிரான தாக்குதலில் அதிபர்…

Read More

கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிப் பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், மற்றும் விரிவாக்கற் கற்கைள் நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவித்தலில், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் தற்போது மீண்டும் 11.06.2016 இலிருந்து தொடர்ந்து நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் அனைவரும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த அட்டவணையின் பிரகாரம் பரீட்சைகளுக்கு சமூகம் கொடுக்குமாறு…

Read More

மக்கள் காங்கிரஸின் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தின் பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபை தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் கடந்த திங்கட்கிழமை (01) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன. அந்தவகையில், பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபையின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் தவிசாளருமான சுபஹானை ஆதரித்து கரகஸ்கட பிரதேசத்தில் கூட்டம் நடைபெற்றது. இதேவேளை, கரகஸ்கட வட்டாரத்தின் வேட்பாளரான அக்ரம் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தின்போது, மக்கள் காங்கிரஸின் கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது….

Read More

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி கலந்துகொண்டார்..

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பிரதேசத்தின் மூத்த கல்வி மான் மற்றும் பிரதேசத்தின் முதலாவது பொது வைத்திய நிபுணர் ஆகியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு அமீர் அலி பவுண்டேசனின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. அமீர் அலி பவுண்டேசனின் தலைவரும் இராஜங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம் பெற்ற…

Read More

குவைத்திலிருந்து 41,000 பேர் வௌியேற்றம்!

சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருந்த 41,000 பேரை குவைத் இதுவரை வௌியேற்றியுள்ளது. இவ்வாறு வௌியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு 26,600 பேரும் 2016 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் 14,400 பேருமாக மொத்தம் 41,000 பேர் வௌியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் வீசா காலாவதியானவர்கள், சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்கள் மற்றும் தொழிலாளர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தவர்கள்…

Read More