Headlines

அகதி வாழ்வில் 29 வருடங்கள் ; மீள்குடியேற்றம் நிறைவேற்றமடைய பிரார்த்திக்கின்றேன்:  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 

வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து, இழந்து போன நமது சமூகத்தின் உரிமைகளை  பெற்றுக்கொடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னை முழுமையாக தொடர்ந்தும் அர்ப்பணிக்குமென  அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வடபுல அகதிகள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் (31) 29 வருடங்கள் நிறைவடையும் நிலையில், இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வரும் மக்கள் துரிதகதியில் மீள்குடியேறவும், மீள்குடியமர்ந்து இன்னும் அடிப்படை வசதிகள் நிறைவுபெறாத வகையில்…

Read More

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராகும் வடகொரியா

அமெரிக்காவுடன் போரிடுவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு இராணுவ வீரர்களுக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைநகர் பியாங்யாங்கில் உள்ள போர் நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தை நேற்று திறந்து வைத்து அவர் உரையாற்றினார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாறு கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளார். தேசத்தை மீண்டும்ஒன்றிணைக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வரும் நிலையில், ஒட்டுமொத்த இராணுவமும் சித்தாந்தப்படியும்,…

Read More

 யாழில் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று வெள்ளிக்கிழமை (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தைச் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கின்றார்.

Read More

கனடா -இலங்கை வர்த்தக உறவுகள் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டும் – கனடா உயர் ஸ்தானிகர்

கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் மேலும் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஷேர்லி வைற் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக செயற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடந்த வாரம் முன்னோடியான ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் ‘கனடாவுக்கான ஏற்றுமதி’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற அமர்வொன்றின் போதே இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீனுடன் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை கனடா-இலங்கை இடையேயான இருதரப்பு வர்த்தக கடந்த சில ஆண்டுகளாக…

Read More

மியன்மார் தேர்தலில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!

அமைதிக்கான நோபல் விருது வென்ற ஆங் சான் சுகியி தலைமையிலான மியன்மாரின் பிரதான எதிர்க்கட்சி வரும் நம்பரில் நடைபெறும் பொதுத் தேர்தலில் திட்டமிட்டு முஸ்லிம் வேட்பாளர்களை புறக்கணித்திருப்பதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சுகியி தனது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியில் முஸ்லிம்களை தவிர்க்குமாறு அறிவுருத்தி இருப்ப தாக அந்த சிரேஷ்ட உறுப்பினர், பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் கடு ம்போக்கு பௌத்த தேசியவாதிக ளின் முஸ்லிம்…

Read More

எதிர்கால கட்டட நிர்மாணம் அனுமதி பெறப்படுவது கட்டாயம்

இனிவரும் காலங்களில் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களைஅமைக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அனுமதி கட்டாயம் பெறப்படவேண்டும் என்றுகொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இயற்கை அனர்த்தங்களின்போது அதிக பாதிப்புக்கான ஏதுக்களை குறைக்கும் நோக்கிலேயேஇந்த கொள்கை அமுல்செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போதைக்கு 10 மாவட்டங்களில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது. எனினும் அதனை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தவும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. நாடாளாவிய ரீதியில் தற்போது வருடம் ஒன்றுக்கு ஒருலட்சம் வீடுகள் வரை தேசிய கட்டிl ஆராய்ச்சி…

Read More

போலி அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட யானைகள் மீட்பு

போலி அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட 39 யானைகளை இதுவரை வன ஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. ருவன்வெல்ல – அம்திரிகல பிரதேச வீடொன்றிலிருந்து யானை குட்டி ஒன்றை நேற்றிரவு மீட்டதாக வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்ட யானைக் குட்டியை உடவலவை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், போலி ஆவணங்களுடன் வளர்க்கப்பட்டு வரும் மேலும் 6 யானைகளை மீட்தற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டவிரோதமாக பராமறிக்கப்பட்டு வரும் யானைகளை மீட்பதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரும்,…

Read More

இஸ்ரேலுக்கு எதிரான போட்டி – பலஸ்தீன கொடியை ஏந்திய, ஸ்காட்லாந்து ரசிகர்கள்

கிளாஸ்கோ செல்டிக் அணி மற்றும் இஸ்ரேலின் ஹபோயல் பீர் சேவா அணிகளுக்கு இடையேயான காலபந்து போட்டியில் ஃபலஸ்தீன் கொடியை ஏந்தி ஸ்காட்லாந்து கால்பந்து ரசிகர்கள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டி துவங்கும் முன்பு ஃபாலஸ்தீனிய ஆதரவாளர்கள் ஃபலஸ்தீன் கொடியினையும் அந்-நக்பா (பேரழிவு) குறித்த செய்திகள் அடங்கிய நோடீஸ்களையும் விநியோகம் செய்துள்ளனர். நக்பா என்பது 1948 இல் நிகழ்ந்த இஸ்ரேல் உருவாவதற்கு காரணமாகவும் லட்சக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற…

Read More

உலகின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம்! – CNN

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாம் உள்ளதாக அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. 1.6 பில்லியனிலிருந்து 2.76 பில்லியனாக வரும் 2050 க்குள் உலக இஸ்லாமியரின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வறிக்கையை வெளியிட்டது இஸ்லாமிய நிறுவனம் அல்ல. இஸ்லாத்தை அழிக்க பல திட்டங்களை தீட்டி வரும் அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்படும் சிஎன்என் நிறுவனம் இந்த கணிப்பை வெளியிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 234 நாடகளில் இந்த ஆய்வு…

Read More

சீமெந்தின் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

சீமெந்தின் விலையானது 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று (1) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் சேவைகள் அதிகார சபை வழங்கியுள்ளது. இதற்கமைய 870 ரூபாவாக காணப்பட்ட சீமெந்து ஒரு மூட்டையின் விலை 930 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 வகையான சீமெந்து நிறுவனங்களின் சீமெந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்கியுள்ளன

நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்கியுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கறுப்பு கொடிகளை ஏற்றுவதற்காக முயற்சிக்கும் தரப்பினர் இனவாதத்தை தூண்டும் நோக்கில் அவ்வாறு செய்கின்றனர். அமைச்சுப் பதவிகளை எதிர்நோக்கும் சிலரும் இவ்வாறு இனவாதத்தை தூண்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளியிட விரும்பவில்லை.இனவாத தரப்புக்கள் சிங்களத்தையும், பௌத்தத்தையும் பாதுகாக்கும் முனைப்புக்களில் ஈடுபடவில்லை எனவும், நாட்டை மீளவும் யுத்தம் நோக்கி நகர்த்துவதே அவர்களின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளர். அரசியல்வாதிகளே…

Read More