Headlines

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராகும் வடகொரியா




அமெரிக்காவுடன் போரிடுவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு இராணுவ வீரர்களுக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைநகர் பியாங்யாங்கில் உள்ள போர் நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தை நேற்று திறந்து வைத்து அவர் உரையாற்றினார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போருக்கு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாறு கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளார்.

தேசத்தை மீண்டும்ஒன்றிணைக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வரும் நிலையில், ஒட்டுமொத்த இராணுவமும் சித்தாந்தப்படியும், அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் முழுமையாக ஆயுத்தமாக இருக்க வேண்டும். கடினமான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவை பகைத்துக் கொண்டு, அதன் எதிரி நாடான தென் கொரியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. தென் கொரியாவில் அமெரிக்காவை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளனர்.

தென் கொரியாவைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் இராணுவ வீரர்களுடன் சேர்ந்து, வரும் 3-ம் திகதி அமெரிக்க வீரர்கள் 8 வார கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் போருக்கு ஆயத்தமாக இருக்குமாறு இராணுவ வீரர்களுக்கு வட கொரிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *