Headlines

இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்: 70 பலஸ்தீனர்கள் காயம்!

பழைய ஜெருசலேம் நகரப் பகுதிக்குள் பாலஸ்தீனியர்கள் செல்லமுடியாதபடி இஸ்ரேல் தடை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் இரண்டு நாட்களுக்கு அமலில் இருக்கும். அங்கு குடியிருக்காத பாலஸ்தீனியர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.  பலஸ்தீனர்களுக்கு எதிராக, இஸ்ரேலிய பாதுகாப்பு படை மற்றும் யூத குடியிருப்பாளர்கள் நடாத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணிநேரத்தில் 70 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

அகமதுவை ஃபேஸ்புக் அலுலகத்துக்கு அழைக்கும் FACEBOOK மார்க்!

இடது: மாணவர் அகமது | வலது: மார்க் ஸக்கர்பெர்க் | கோப்புப் படங்கள் கடந்த சில தினங்களாக சிறுவன் அகமது குறித்த செய்திகள் பரவலாக பேசப்படுகின்றன. அமெரிக்காவில் வசிக்கிறார் சிறுவன் அகமது. இவர் கைக்கடிகாரம் ஒன்றை தானே செய்து அதை பள்ளிக்கு எடுத்துச் சென்றததற்காக போலீஸாரால் கைவிலங்கிடப்பட்டவர். எல்லாம் ‘பெயர்க்காரணம்’ என சமூகவலைத்தளங்களில் பலர் கொந்தளித்துக் கொண்டிருக்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் ரத்தினச் சுருக்கமாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டு தனது ஸ்டேட்டஸை நிரூபித்துள்ளார். இதோ அந்த…

Read More

அகமத் முகமதுவின், தன்னம்பிக்கை வார்த்தைகள்..!

விளைவுகளை பற்றி கவலைப்படாமல் நமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வெடிகுண்டு தயாரித்ததாக தவறுதலாக கைது செய்யப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளான். அமெரிக்காவை சேர்ந்த அகமத் முகமது என்ற சிறுவன் தான் செய்த கடிகாரத்தை ஆசிரியரிடம் காண்பிப்பதற்காக பள்ளிக்கு எடுத்து சென்றுள்ளான். ஆனால் அதை வெடிகுண்டு என்று நினைத்த பள்ளி நிர்வாகம் பொலிசுக்கு தகவல் அளித்தது. இதையடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு பின்னர் உண்மை தெரிந்ததும் விடுவிக்கப்பட்டான். இந்நிலையில் அகமத் முகமதுக்கு ஏராளமான மக்கள் தங்கள் ஆதரவை…

Read More

சிரியாவிலிருந்து வெளியேறிவரும் அகதிகள் மீது, ஹங்கேரி பொலிஸார் தாக்குதல்

ஹங்கேரி பொலிஸார் குடியேறிகள் மீது கண் ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீச்சியடித்தது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீது இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். ஹங்கேரி-செர்பிய எல்லையில் இருக்கும் ஹொர்கோஸ்-ரொஸ்கே கடவையில் நேற்று முன்தினம் இந்த மோதல் ஏற்பட்டது.  இதன் போது ஆத்திரமடைந்த நுற்றுக்கணக்கானவர்கள் ஹங்கேரி எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பி வேலியை அகற்ற முயன்றுள் ளனர். இந்த பதற்றத்தில் இரு…

Read More

“நான் என்றும் அகமதுக்கு ஆதரவாக நிற்பேன்” – ஒபாமா

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான்…

Read More

முஸ்லிம் என்பதால் கைதுசெய்யப்பட்ட 14 வயது மாணவன்

அமெரிக்காவில் டெக்ஸாஸ் இர்விங்கில் வசிக்கும் அகமது முகமது.. 14 வயதுச் சிறுவன். அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். எலெக்ட்ரானிப் பொருட்களை புதிது புதிதாக வடிவமைப்பது அவனுடைய பொழுது போக்கு. கடந்த திங்கள் கிழமையன்று தான் லேட்டஸ்டாக வடிவமைத்த எலெக்ட்ரானிக்ஸ் கடிகாரம் ஒன்றை பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறான் அகமது. அவனது வகுப்பாசிரியரிடம் சென்று காட்டியவுடன், “நன்றாக இருக்கிறது. ஆனால் வேறு யாரிடமும் இதைக் காட்ட வேண்டாம்” என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு…

Read More

ஜிம்பாப்வே நாடாளுமன்றத்தில் தவறான உரை: அதிபர் உடல்நிலை பற்றி எதிர்க்கட்சிகள் சந்தேகம்

நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் புதிய கூட்ட தொடரில் துவக்க உரை நிகழ்த்திய  ஜிம்பாவே நாட்டு அதிபர் ராபர் முகாபே, ஒரு மாதத்திற்கு முன்பு படித்த உரையை மீண்டும் படித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. அதிபர் ராபர் முகாபே தான் வாசிக்க வேண்டிய உரைக்குப் பதிலாக வேறு தவறான பழைய உரையை படிக்க ஆரம்பித்ததும், தொலைக்காட்சியின் நேரடி ஒலிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அவர் வாசித்த உரையானது கடந்த மாதம் ஆற்றிய உரையாகும்.  அதிபரின் செயலகத்தில் நடந்த குழப்பத்தின் காரணமாகவே தவறு…

Read More

பின்லேடன் தம்பி கட்டுமான நிறுவனத்துக்கு தடை – சவூதி அரேபிய மன்னர் உத்தரவு

சவூதி அரேபியாவின் புனித மக்காவில் கடந்த 12-ந்தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. அதில், கட்டிடம் இடிந்து அங்கு மழைக்கு ஒதுங்கிய யாத்திரீகர்கள் உள்பட 107 பேர் பலியானார்கள். 400 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தோருக்கு  சவூதி  அரேபிய மன்னர் சல்மான் நஷ்டஈடு அறிவித்து உள்ளார். மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெறும் விரிவாக்க கட்டுமான பணியில் `தி  சவூதி  பின்லாடின் குரூப்’ ஈடுபட்டுள்ளது. இது அல்கொய்தா தலைவர்…

Read More

ஆஸி.பிரதமர் அபாட் அவுட் : புதிய பிரதமராக டர்ன்புல்

அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைமை போட்டியில் தோல்வியடைந்த டோனி அப்போட் பிரதமர் பதவியை இழந்த தோடு அந்நாட்டுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இழுபறி நீடித்த லிபரல் கட்சியின் தலைமைக்காக நேற்று நடத்தப்பட்ட அவசர வாக்கெடுப்பில்அப்போட் அந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை உறுப்பினரான மல்கம் டர்ன்புல்லிடம் தோல்வியடைந்தார். ஏற்கனவே மோசமான கருத்துக் கணிப்பை பெற்றிருந்த அப்போட் கட்சி உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பில் 44 வாக்குகளையே வெல்ல முடிந்தது. டர்ன்புல் 54 வாக்குகளை வென்று…

Read More

இன பேதத்தால் அமெரிக்காவில் நிகழும் கொடுமைகள்!

அமெரிக்காவில் சில மாதங்கள் முன்பு, தனது தாய்மொழியில் தனது மகனிடம் பேசிய ஸ்பானிஷ் பெண்ணை பொது இடத்தில் வைத்து வசைபாடிய ஆங்கிலேயப் பாட்டி நினைவிருக்கலாம்! இதன் தொடர்ச்சியாக, நியூயார்க் நகரில் பேங்க்கில் பணிபுரியும் கருப்பின பெண் ஒருவர், சாலைவிதியை முறையாக கடைபிடிக்காத காரணத்தால், போலீசார் கொண்டுசென்ற தனது பி.எம்.டபிள்யூ. காரை மீட்கச் சென்ற இடத்தில் பைத்தியம் என அடையாளம் காணப்பட்டு மனநல மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். மனநல மருத்துவமனையில் அவருக்கு ஒரு வாரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் கருப்பினப்…

Read More

ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்ணுக்கு பணி வழங்க மறுத்த அமெரிக்க நிறுவனம்

சாமன்தா, இவர் அமெரிக்காவை சார்ந்த ஒரு இஸ்லாமிய சகோதிரி. இவர் தனது 17 ஆவது வயதில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் வேலைக்காக விண்ணப்பத்தார். அவர் விண்ணபித்த வேலைக்கு உரிய அனைத்து தகுதியும் அவரிம் இருந்தும், அவர் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்ணாக இருந்தார் என்பதற்காக அவருக்கு அந்த வேலை வாய்ப்பை அந்த நிறுவனம் நிராகரித்தது. இதனை எதிர்த்து சாமன்தாவின் சார்பில் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று நீதிமன்றத்தின் வாசலை தட்டியது. பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு வழக்கின்…

Read More

இஸ்ரேலிய காவல்துறை- பாலஸ்தீன இளைஞர்கள் மோதல்

ஜெருசலேத்தில் உள்ள அல்-அக்ஸா வளாகத்தில் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலிய காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். யூதர்களின் புத்தாண்டு பிறப்பதற்கு சில மணிநேரம் முன்னதாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைந்த இஸ்ரேலிய காவல்துறையினர் அங்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாலஸ்தீன தரப்பினர் கூறுகின்றனர். கிழக்கு ஜெருசலேத்தில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதலின்போதே இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது. இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைதி நிலவுவதாக கூறப்படுகின்றது. எனினும் ‘பழைய நகரம்’ பகுதியில்…

Read More