Headlines

ஐ.நாவில் ஒபாமாவின் இறுதித் தருணம்!

அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவையும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குப்பற்றிய தலைவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தின் போதே இவர்கள் சந்தித்துக்கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் தற்போது இடம் பெற்றுவரும் மாற்றங்கள் குறித்தும் ஒபாமா தனது வாழ்த்துக்களை நேற்றை தினம் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்திருந்தார். ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத் தொடரில் அமெரிக்காவின்…

Read More

பிலிப்பைன்சில் போதை பொருள் கடத்தல்காரர்களை முற்றிலும் சுட்டுக்கொல்ல உத்தரவு: அதிபர் அதிரடி

பிலிப்பைன்சில் இன்னும் 6 மாதத்தில் கடத்தல்காரர்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல அதிபர் உத்தரவிட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ டுடெர்ட் பதவி வகிக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் அவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு இவர் மேயர் ஆக பதவி வகித்தார். இவர் அதிபராக பதவி ஏற்றவுடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். முன்னதாக போதை பொருள் கடத்தல்காரர்களை எதிர்த்து பொது மக்கள் போராட வேண்டும்….

Read More

ஜேர்­ம­னில் நடந்த தேர்­தலில் ஏஞ்­சலா மேர்­கலின் கட்சிக்கு வர­லாற்று தோல்வி

ஜேர்­ம­னியின் பெர்­லின் நடை­பெற்ற தேர்­தலில் ஜேர்­ம­னிய சான்சலர் ஏஞ்­சலா மேர்­கலின் கிறிஸ்­தவ ஜன­நா­யக கூட்­டணி வர­லாற்று  தோல்­வி­யடைந்­துள்­ளது. ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்­சலா மேர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணியானது, 17.6 சத­வீத ஆத­ர­வையே பெர்லின் தேர்­தலில் பெற்­றுள்­ளது. இத­னி­டையே வலது சாரி குடியேறிகள் எதிர்ப்பு கட்சியான எ.எவ்.டி 14 ச­த­வீ­த மக்களின் ஆதரவை வென்றிருக்கிறது. இதனால், பெர்லின் உட்பட மொத்தமுள்ள 16 பிராந்திய நாடாளுமன்றங்களில் 10இல் அதற்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. பொது தேர்தல்களுக்கு ஓராண்டுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட குடியேறிகளை…

Read More

பெண்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்: ஒபாமா பளீர் பேட்டி

ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து  குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் மோதுகிறார். தனது ஆட்சியின்கீழ் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின்…

Read More

நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு: 25 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நியூஜெர்சியில் குழாய் குண்டு வெடித்து சில மணித்தியாலங்களிலேயே, மேற்குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும், எந்தவொரு காயங்களும், உயிருக்கு ஆபத்தானதாய் அமையவில்லை என நியுயோர்க் நகர தீயணைப்புத் திணைகளம் தெரிவித்துள்ளது. வெடிப்புக்கான காரணம் தெளிவில்லாதபோதும், குப்பைக்கூடையிலிருந்தே வெடிப்பு நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத…

Read More

ஹிலாரியின் பாதுகாவலர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டும் ஹிலாரி கிளிண்டனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும் என அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே மீதான பிடி வாரன்ட்டை ஸ்வீடன் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் வெளியிட்டது. இதையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, லண்டன் நகரில் உள்ள ஈக்வேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையில், கடந்த 2010-ம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில் ஒரு இளம்பெண்ணை கற்பழித்ததாக ஜுலியன் அசாஞ்சே மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார் லண்டனில் தங்கியுள்ள அசாஞ்சே-வுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த பிடி வாரன்ட்டை ரத்து…

Read More

பலுசிஸ்தான் தலைவர்களுக்கு அரசியல் புகலிடம் அளிக்க இந்தியா முடிவு?

பாகிஸ்தானில் இருந்து விடுதலை கேட்டு போராடி வரும் பலுசிஸ்தான் தலைவர்களுக்கு அரசியல் புகலிடம் அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   பலுசிஸ்தான் தலைவர்கள் முறைப்படி அரசியல் புகலிடம் கேட்டு விண்ணப்பித்தால் ஒரு சில வாரங்களில் அவர்களுக்கு முறைப்படி புகலிடம் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. பலுசிஸ்தானின் முதன்மை தலைவராக விளங்கும் பிரமாகத் புக்டி, இந்த முடிவை வரலாற்று சிறப்பு மிக்கது என்று வரவேற்றுள்ளார். கடைசியாக கடந்த 1959 ஆம் ஆண்டு தலாய் லாமாவிற்கு இந்தியா…

Read More

துருக்கி நாட்டில் இங்கிலாந்து, ஜெர்மனி தூதரகங்களுக்கு எதிராக சதி: 4 பேர் கைது

துருக்கி நாட்டில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி தூதரகங்களுக்கு எதிராக சதி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அவர்களுக்கும், எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இல்லை என துருக்கி அரசின் ‘அனடோலு ஏஜென்சி’ கூறுகிறது. அந்த தூதரகங்களுக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான உளவு தகவலை அடுத்தே போலீசார் நடவடிக்கையில் இறங்கியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் அங்காராவிலும், ஒருவர் இஸ்தான்புல் நகரிலும் கைதாகினர். இதற்கிடையே அங்காராவில் உள்ள…

Read More

2070 இல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்!

2050-ல் இந்தியாவிலும், 2070-ல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்! 2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என்றும், 2070ல் உலக அளவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்றும் ‘ஆய்வு’ முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள ப்யூ (Pew) ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் ‘உலக மதங்களின் எதிர்காலம்’ என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த…

Read More

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.5½ லட்சம் கோடி ஆயுத உதவி

இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா ஏராளமான ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதையும் மீறி தொடர்ந்து அமெரிக்கா ஆயுத உதவி செய்கிறது. தற்போது ரூ.5 ½ லட்சம் கோடிக்கு ஆயுத உதவி செய்ய உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதில் இரு நாட்டு மந்திரிகளும் கையெழுத்திடுகின்றனர். இந்த ஆயுதங்களை 10 ஆண்டுகளுக்கு அமெரிக்கா சப்ளை செய்யும். அமெரிக்கா இதுவரை தொடர்ந்து ஆயுத உதவி செய்து வந்தாலும்…

Read More

அந்தமானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

அந்தமானில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். அந்தமான்- நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவானதாக டெல்லியில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது அதிகாலையில் மக்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து வெளியே ஓடினார்கள். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் இல்லை என்று…

Read More