Headlines

இஸ்ரேலின் கொடூரச்செயல் அம்பலம்

பாலஸ்தீன சிறுவர்களை கடத்திச் சென்று மூளைச்சலவை செய்து அவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூரச் செயல் அம்பலமாகியுள்ளது. பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே சண்டை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. மிக நவீன இயந்திர துப்பாக்கி மற்றும் விமான தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேசமயம், எத்தகைய ஆயுதமுமின்றி கற்களை மட்டுமே சண்டையின் போது பாலஸ்தீனர்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 20 வரையிலான…

Read More

அனானிமஸ் – ISIS இடையிலான சைபர் யுத்தம் உச்சகட்டம்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பின் இணைய தொடர்புகளையும், கணக்குகளையும் தகர்த்தெறிவதே தங்களது முதல் நடவடிக்கை என சில தினங்களுக்கு முன் ‘அனானிமஸ்’ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். முதல்கட்ட நடவடிக்கையாக கடந்த செவ்வாய்கிழமை ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 900 பயனாளர்களை டுவிட்டரிலிருந்து துரத்தியடித்தனர். அனானிமஸ் அமைப்பினரின் இந்தத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும், இணைய உலகை எங்கள் வசமாக்குவோம் என்றும் ஐ.எஸ். அமைப்பினர் சவால் விட்டனர். இதைத்தொடர்ந்து ‘அனானிமஸ்’…

Read More

சீன கோடீஸ்வரரை செவ்வி கண்ட ஒபாமா

ஜனாதிபதிகள் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதென்றால் பொதுவாக அவர்களிடம்தான்  செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள்,  ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன கோடீஸ்வர வர்த்தகரான ஜக் மாவை செவ்வி கண்டுள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் அரசாங்க – வர்த்தக உறவுகள் தொடர்பான கலந்துரையாட லொன்றில் பங்குபற்றினார். சீனாவின் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலி பாபா நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜக் மா மற்றும்…

Read More

பிரான்ஸிற்கு இரசாயன ஆயுத தாக்குதல் அபாயம்!

பிரான்சில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மானுவல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பிரான்சில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, பயணிகள் குறித்த புள்ளி விபரங்களை அளிக்குமாறு ஐரோப்பாவிடம் பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ். களின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் முன்எப்போதும் இல்லாத…

Read More

நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா? (வீடியோ)

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திய போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார். பாரீஸ் மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரை கட்டியணைத்தனர். பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள். இறுதியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய அந்த இளைஞர் ”நான் ஒரு இஸ்லாமியன், ஆனால் நான் தீவிரவாதி இல்லை. நான்…

Read More

ரஷ்ய விமானத்தை தகர்ப்பதற்கு ISIS வைத்த வெடி குண்டு!

– கலையரசன் – எகிப்து, சினாய் பாலைவனத்தில் வீழ்ந்த ரஷ்ய விமானத்தை தகர்ப்பதற்கு, ISIS பயன்படுத்திய வெடி குண்டு இதுதானாம்.  இந்தத் தகவலை, ISIS இயக்கத்தின் உத்தியோகபூர்வ இணைய சஞ்சிகையான Dabiq வெளியிட்டுள்ளது. அவர்கள் முதலில் ஒரு மேற்கத்திய விமானத்தை தகர்ப்பதற்கு திட்டமிட்டதாகவும் பின்னர் மனம் மாறி, ரஷ்ய விமானத்தை இலக்கு வைத்ததாகவும்   குறிப்பிட்டுள்ளார்கள்.

Read More

முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பாரிஸ் பெரிய பள்ளிவாசல்

பிரான்ஸின் தலை­நகர் பாரிஸில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் பாரிஸ் பெரிய பள்­ளி­வாசல் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை பாரிய ஆர்ப்­பாட்டப் பேரணி ஒன்­றுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது. எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையை தொடர்ந்து இடம்­பெ­ற­வுள்ள இவ் ஆர்ப்­பாட்­டத்தில் முஸ்­லிம்கள் ஒரு­போதும் பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­வர்கள் அல்ல என்­பதை உல­குக்கு எடுத்­துக்­காட்டும் பொருட்டு பாரிஸில் வசிக்கும் சகல முஸ்­லிம்­க­ளையும் ஒன்­று­தி­ர­ளு­மாறு பள்ளிவாசல் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Read More

இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவை கைது செய்ய ஸ்பைன் நீதிமன்றம் உத்தரவு …!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்யுமாறு, ஸ்பானிஷ் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது! இந்தத் தகவலை எந்தவொரு மேற்கத்திய ஊடகமும் தெரிவிக்கவில்லை!  2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, காஸா நோக்கி சென்று கொண்டிருந்த Freedom Flotilla என்ற கப்பலை வழிமறித்த, இஸ்ரேலிய படையினர் அதன் மீது தாக்குதல் நடாத்தினார்கள். அது தொடர்பான வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி Jose de la Mata, பெஞ்சமின் நெத்தன்யாகு உட்பட ஆறு இஸ்ரேலிய அரச…

Read More

பாரீஸில் மீண்டுமொரு தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பலி (Breaking news)

பாரீஸில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கி சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்து ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதிகள் 8 பேரும் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் அண்டை நாடான பெல்ஜியத்தில் உள்ள தீவிரவாதிகளின் உதவியுடன் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று…

Read More

வால் நட்சத்திரத்தில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி

நமது சூரியக் குடும்பத்தின் ஒரு முனையில் பனி படர்ந்த 67பி/சுர்யூமோவ்-கெரசிமென்கோ என்ற வால்நட்சத்திரத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியிருந்த ரொசெட்டா விண்கலம் கடந்த ஆண்டு படம்பிடித்தது. அதில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி இருப்பதாக வேற்று கிரகவாசிகளை நம்புவோர் கருத்து தெரிவித்துள்ளனர். எகிப்தின் பிரமிடுகள் வேற்று கிரகவாசிகளின் கண்காணிப்பில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என பலரும் நம்பி வருகின்றனர். ஆகவே, வால் நட்சத்திரத்தில் உள்ள இந்த மாபெரும் கல்சவப்பெட்டி வேற்று கிரகவாசிகளுக்கானதாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது…

Read More

இஸ்லாத்தை விமர்சிப்பதற்காக புனையப்பட்ட பொய் அம்பலமானது

பிரான்ஸில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்திற்கும், இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும். ஆயினும் அந்த வன்முறை வெறியாட்டத்தை இஸ்லாத்தோடு முடியவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் இஸ்லாமிய விரோதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றுதான் பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய ஒரு குற்றவாளி குர்ஆனை கையில் சுமந்து கொண்டு நிற்பது போன்று சித்தரிக்கப்பட்ட ஒரு புகைபடம், அந்த புகைப்படம் இஸ்லாமிய விரோதிகளால் சமூக வலைதளங்களில் வெளியிடபட்ட சில நிமிடங்களிலேயே அந்த படம்…

Read More

ஆஸ்திரேலியாவில் முதல் முஸ்லிம் அரசியல் கட்சி உதயம்

– அலுவலக நிருபர் – ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியொன்று உதயமாகியுள்ளது. இந்த கட்சியின் அன்குரார்பன நிகழ்வு அண்மையில் சிட்னி நகரில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் ஸ்தாபகர் திரு.முஹம்மத்  “எமது கட்சி ஆஸ்திரேலியாவிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் குரலாகவும் ஒலிக்கும், எதிர்வரும் செனட்   தேர்தலில் களமிறங்க விரும்புகிறது” – எனவும் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் அதிக கட்சிகள் முஸ்லிம் விரோத போக்கை கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.

Read More