Headlines

உலகப்போர் மூளும்: ரஷ்யா எச்சரிக்கை

சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். களின் பதுங்குமிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனால், அமைதி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, வான்வழி தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி சமீபத்தில் அறிவுறுத்தி…

Read More

பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாட தடை

பிப்ரவரி 14–ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது சம்பந்தமாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:– காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி…

Read More

பாகிஸ்தான் அணு ஆயுதம் குவிப்பு: அமெரிக்கா கவலை

பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு இயக்குனர் வின்சென்ட் ஸ்டீவார்ட், அந்த நாட்டின் செனட் சபை ஆயுத பணிகள் குழுவிடம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தனது அணு ஆயுத பாதுகாப்பை பாகிஸ்தான் மேம்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தனது அணு ஆயுத குவிப்பு நடவடிக்கைகளுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளது என்பதை பாகிஸ்தான் உணர்ந்து இருக்கிறது” என்றார். மேலும் அவர், “பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் தொடர்ந்து அதிகரித்து…

Read More

நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்

நேபாளி காங்கிரஸ் கட்சி தலைவரும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் இன்று (9) காலமானார். அவருக்கு வயது 79. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டு சுமார் 16 ஆண்டுகாலம் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். விமான கடத்தல் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறைகளில் 3 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த இவர், கடந்த 10-2-2014 அன்று நேபாள நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். நேபாளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம்…

Read More

மியான்மரின் அடுத்த அதிபர் யார்?

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் ஜனாதிபதியாக தெயின் சீன் பதவி வகித்து வருகிறார். இங்கு கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக உரிமை கோரி போராடி வந்தவரும், நோபல் பரிசு பெற்ற பெண்மணியுமான ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மியான்மரில் 1962-ம் ஆண்டுக்கு பின்பு ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல்…

Read More

வெள்ளை மாளிகையிலும் வை-பை என்றால் பிரச்சினை தான்

உலகின் நாட்டாமையாக வலம் வரும் அமெரிக்காவின் அதிகாரத்தை பறைசாற்றும் இடங்களில் ஒன்று வெள்ளை மாளிகை. ஆனால்  அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் வை-பை சரியாக இல்லை என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒபாமா அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் “வெள்ளை மாளிகையிலேயே பல இடங்களில் வை-பை இணைப்பு கிடைப்பது இல்லை. பழமையான கட்டிடமான வெள்ளை மாளிகையில் ஏராளமான பகுதிகளில் சுத்தமாக வை-பை வேலை செய்வதில்லை.”  என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இணையத்…

Read More

7 வயது சிறுவனுக்கும் 6 வயது சிறுமிக்கும் திருமணம்; பாகிஸ்தானில் 6 பேர் கைது

பாகிஸ்­தானில் 7 வயது சிறு­வ­னுக்கும் 6 வயது சிறு­மிக்கும் திரு­மணம் நடத்தி வைத்த குற்றச்­சாட்டில் ஆறு பேரை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மேற்­படி சிறார்­களின் பெற்றோர் மற்றும் திரு­மண வைப­வத்தின்  சாட்­சி­க­ளான 6 பேரும் பாகிஸ்தானின் கிழக்குப் பகு­தியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டனர் என சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­யான  சைஃபுல்லா கான் தெரி­வித்­துள்ளார். இவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்டால் 6 மாத சிறைத்­தண்­டனை மற்றும் 50,000 பாகிஸ்தான் ரூபா அப­ராதம் விதிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பாகிஸ்­தானில்…

Read More

நெல்சன் மண்டேலாவின் பேரன் இஸ்லாத்தை தழுவினார்!

இறைவனின் மாபெரும் கிருபையினால் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா அவர்கள் சில தினங்களுக்கு முன் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்ட காலக்கட்டத்தில் மண்ட்லா மண்டேலாவின் தாத்தா நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவராவார். தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இன அழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வு என்பதை…

Read More

ஷிகா வைரஸ்: சர்வதேச அளவில் அவசர நிலை பிரகடனம்

ஷிகா வைரஸ் வேக­மாகப் பரவி வரும் நிலையில் சர்­வ­தேச அளவில் உலக சுகா­தார அமைப்பு அவ­சர நிலையை பிர­க­ட­னப்­படுத்­தி­யுள்­ளது . தென் அமெ­ரிக்க நாடு­களில் வேக­மாகப் பரவி வரும் ஷிகா வைரஸ் பிற நாடு­க­ளுக்கும் மெது­வாக பரவி வரு­கி­றது. மேற்கு ஆபி­ரிக்­காவில் எபோலா வைரஸ் பர­வி­ய­போது நட­வடிக்கை எடுக்க தாம­த­மா­கி­யதை அந்த அமைப்பு ஒப்புக் கொண்டுள்­ளது. இது குறித்து உலக சுகா­தார அமைப்பின் இயக்­குநர் மார்­கரெட் சான், ஷிகா வைரஸால் உலகின் பிற பகு­தி­க­ளுக்கும் அச்சுறுத்தல் ஏற்­பட்­டுள்­ளது….

Read More

நடுவானில் பறந்த விமானத்தில் சண்டையிட்ட விமானப் பணிப்பெண்கள்

அமெ­ரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லி­ருந்து மின்­னே­பொலிஸ் பிராந்­தி­யத்­துக்கு பய­ணத்தை மேற்­கொண்ட டெல்ற்றா எயார்லைன்ஸ் விமா­ன­மொன்றில் இரு விமானப் பணிப்­பெண்கள் ஒரு­வ­ருடன் ஒருவர் சண்­டையில் ஈடு­பட்­டதால் அந்த விமானம் திசை­மாற்­றப்­பட்டு அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் சால்ட் லேக் நகரில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி விமானம் 37,000 அடி உய­ரத்தில் நடு­வானில் பறந்த வேளை அந்த விமா­னத்­தி­லி­ருந்த இரு பணிப்­பெண்­க­ளி­டையே கடும் வாய்த் தர்க்கம் ஏற்­பட்­டது. இந்­நி­லையில் அந்த இரு பணிப்­பெண்­களும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் கைமுஷ்­டியால் குத்தி கட்டிப் பிடித்து சண்­டை­யிட ஆரம்­பித்­துள்­ளனர்….

Read More

படகு மூழ்கி 24 உயிர்கள் பலி

துருக்கியிலிருந்து கிரீஸ் நோக்கி 45 பேருடன் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று ஏஜியன் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக கிரேக்கத்தின் கடலோர பாதுகாப்பு படைபிரிவினர் தெரிவித்துள்ளனர். கடலில் மூழ்கி உயிரிழந்த 24 பேரது உடல்கள் கிரீஸுக்குச் சொந்தமான சாமோஸ் தீவில் கரையொதுங்கியதையடுத்து, விபத்தில் காணமல் போன 11 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

டென்மார்க்கின் அகதிகள் சட்டத்துக்கு ஐ.நா. கண்டனம்

டென்­மார்க்­கிற்குச் செல்லும் அக­தி­களின் எண்­ணிக்­கையைக் குறைக்கும் நோக்கில், அந்­நாட்டு நாடா­ளு­மன்றம் சர்ச்­சைக்­கு­ரிய சட்டம் ஒன்றை ஏற்­றுக்­கொள்ள எடுத்த முடி­வுக்கு, ஐ.நா. கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. அக­தி­களின் சில உடை­மை­களைக் கைப்­பற்ற அதி­கா­ரி­க­ளுக்கு அந்தச் சட்­டத்தின் கீழ் அதி­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அக­தி­களின் 1,500 டொலர்­க­ளுக்கு மேற்­பட்ட சொத்­துக்­களை பறி­முதல் செய்ய வழி செய்யும் இந்தச் சட்டம், அக­தி­களின் உற­வி­னர்கள் டென்மார்க் வரு­வ­தையும் கடி­ன­மாக்­க­வுள்­ளது. அக­தி­களால் நாட்­டிற்கு ஏற்­படும் செலவை ஈடு­கட்ட, அந்த நட­வ­டிக்கை உதவும் என்று டென்மார்க் கூறு­கி­றது. இத­னி­டையே ஐ.நா….

Read More