Headlines

மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா

பரபரப்புடன் 232 தொகுதிகளில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகிறது. இதுவரை 220 தொகுதிகளின் நிலவரம் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆளும் அதிமுகா 139 தொகுதிகளை வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது.

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கை: டொனால்டு டிரம்ப் மீது ஒபாமா தாக்கு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் பேசும்போது, தான் ஜனாதிபதியானால் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவது தடை செய்யப்படும் எனவும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் எனவும் கூறியிருந்தார். டிரம்பின் இந்த கருத்து அப்போதே சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் அமெரிக்காவின் ரட்கர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஒபாமா பேசுகையில்,…

Read More

மின்னல் தாக்கத்தில் 65 பேர் பலி

பங்களதேஷில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, 65 பேர் பலியாகியுள்ளனனர் என்று பங்களாதேஷ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்நாட்டில், மிகவும் பின்தங்கிய வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் சி.என்.என் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம்

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. அதன் அதிபராக  நிகோலஸ் மதுரோ பதவி வகிக்கிறார். சர்வதேச அளவில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெனிசுலாவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாட்டால் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் நிறுவனங்களில் நீண்ட கியூ வரிசையில் நிற்கின்றனர். இதனால் அதிபர் மதுரோ மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே…

Read More

லண்டன் மேயர் சாதிக் கான் செயல்படுத்திய அபார திட்டம்

லண்டன் மேயராக பதவியேற்ற பின்னர் சாதிக் கான் செயல்படுத்திய அபார திட்டம் பிரித்தானிய தலைநகரான லண்டனிற்கு மேயராக பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் சாதிக் கான் அபாரமான திட்டம் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். லண்டன் நகரில் இயங்கி வரும் Hopper பேருந்துகளில் பயணிக்க ஒரு சிறப்பு கட்டண திட்டத்தை சாதிக் கான் அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது, இந்த பேருந்துகளில் தொடர்ந்து ஒரு மணி நேரம் பயணம் செய்ய குறைந்தளவு 1.50 பவுண்ட் கட்டணம் உள்ள பயணிச்சீட்டு மட்டும் போதுமானது ஆகும்….

Read More

உகண்டாவில் சகல சமூக வலைதளங்களையும் அந்நாட்டு அரசு முடக்கியது

உகண்டா நாட்டில் பேஸ்புக் ,டுவிட்டர் , வட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சகல சமூக வலைதளங்கள் மற்றும் தொலைதொடர்பு மென்பொருள்கள் என அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வாதிகார ஆட்சியாளர் ஆண்ட உகண்டாவில் இம்முறை பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அந்த நாட்டு ஜனாதிபதி முசவெனி வெற்றிபெற்றபோதும் அங்கு நீதியான தேர்தல் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. பெப்ரவரி தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற முசவேனி இன்று (13) பதவியேற்கும் நிலையில்…

Read More

இன்று சர்வதேச தாதியர் தினம்!

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மே 12 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூறும் பொருட்டு இத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்வாண்டுக்கான தாதியர் தினம் “மாற்றத்திற்கான மாபொரும் சக்தி தாதியர்களே – அவர்கள் தமது விரிவான திறனினூடாக ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துகிறார்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச தாதியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965…

Read More

ஹிரோ­ஷிமா நக­ருக்­குச் செல்லும் ஒபா­மா

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா  ஜப்­பானின் ஹிரோ­ஷிமா நக­ருக்கு இம்­ மாதம் இறு­தியில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­ள­வுள்ளார். அமெரிக்காவின் அணு­குண்டால் பாதிக்­கப்­பட்ட ஹிரோ­ஷிமா நகருக்கு இதுவரை அமெ­ரிக்க ஜனா­தி­பதிகள் யாரும் செல்லவில்லை. இந்­நி­லையில் இம்­மாதம்  27ஆம் திகதி ஜி-7 உச்சி மாநாட்­டுக்­காக ஜப்பான் செல்­ல­வுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, ஹிரோ­ஷிமா நக­ரத்­துக்கும் செல்லவுள்ளார். பத­வியில் இருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒருவர் அந் ­ந­க­ரத்­துக்கு செல்­வது இதுவே முதல்முறை என்­பதால், அவ­ரது இந்த சுற்­றுப் ப­யணம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமையும்…

Read More

வங்காளதேசத்தில் வன்முறை

வங்காளதேசத்தில் போர்க்குற்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மோதியுர் ரஹ்மான்(73) டாக்கா சிறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டார். இஸ்லாமிய தலைவர் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து ஜமாட் மற்றும் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் சிட்டாங்காங் நகரில் மோதிக் கொண்டனர். கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரஹ்மான் நிஜாமின் ஆதரவாளர்களை களைக்க ரப்பர் தோட்டாக்களை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர்…

Read More

கலிபோர்னியாவில் புதிய சட்டம் : ஆண் பெண் இருபாலரும் ஒரே கழிவறை

அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

Read More

அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்க வடகொரியாவின் ஆளும்கட்சி ஒப்புதல்

அணு ஆயுதங்களை மேம்படுத்துவதிலும், அதிகமாக தயாரிப்பதிலும் முன்னுரிமை அளிக்க வடகொரியா நாட்டு ஆளுங்கட்சியின் செயற்குழு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-னுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை…

Read More

லண்டனின் நகர மேயராக முதல் இஸ்லாமியர்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானைச் சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.லண்டனில் முஸ்லிம் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்படுகின்றனமை இதுவே முதல் முறையாகும். பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் லண்டன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பிரபல கோடீஸ்வரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஸக் கோல்ட் ஸ்மித் போட்டியிட்டார்….

Read More