News
அலாஸ்காவில் நடுவானில் மோதிக் கொண்ட இரு விமானங்கள்!:இரு பைலட்டுக்களும் உயிர் தப்பினர்
வட அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் நேற்று சனிக்கிழமை இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டுள்ளன. அலாஸ்காவின் மிக அதிக சனத்தொகையைக் கொண்ட அங்கோராகே (Anchorage) என்ற நகருக்கு வடக்கே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தின் போது பாரஷூட் மூலம் விமானத்தில் இருந்து வெளியேறிய இரு பைலட்டுக்களில் ஒருவருக்கு மோசமான காயங்களும் மற்றையவருக்கு சாதாரண காயங்களும் ஏற்பட்டுள்ளன. இத்தகவல் அலாஸ்காவின் பொதுமக்கள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் காயமடைந்த இரு பைலட்டுக்களும் பிராந்திய…
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்காக 35 லட்சம் ரூபாவை செலவிட்ட மீரிகம பிரதேச சபை
பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு வேட்பாளரின் பிரச்சாரத்திற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 35 லட்சம் ரூபாவிற்கு மஹிந்தவின் உருவப் படத்தை அச்சிட்டு அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். உரிய விலை மனுக் கோரல் விதிமுறைகள் பின்பற்றப்படாது அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம் எனவும் பொது நிர்வாக…
இசிப்பத்தான கல்லூரியில் முஸ்லிம் மாணவன் மீது தாக்குதல் ; ஊடகங்களுக்கு அறிவிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை
அஸ்ரப் ஏ சமத் -இசிப்பத்தான கல்லூரியின் உயர்தரம் கல்விகற்கும் முஸ்லிம் மாணவனுக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பழையமாணவர் ஒருவர் அறைந்து காது வெடித்துள்ளது – குஸ்னி ஹக் – கல்கிசை இவர் கொழும்பு 5 இசிப்பத்தான கல்லூரியில் தரம் 1 இல் இருந்து தமிழ் மொழி முலம் கல்வி கற்று தற்பொழுது க.பொ.த. உயர்தரத்தில்; வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வருகின்றார். இம்; மாணவனுக்கு இக் கல்லூரியில் சிங்கள மொழி முலம் கல்வி பயின்ற பழைய மாணவர் ஒருவர்…
தலவாக்கலை இளைஞனின் சடலம் மீட்பு
-ஜி.கே.கிஷாந்தன்- பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் குதித்து காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை நகரில் நேற்று பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்த பொலிஸார் 20 வயதான மாரிமுத்து மனோஜ் எனும் இளைஞர் பாபுள் வெற்றிலையை வைத்திருந்ததாக கூறி கைது செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் குறித்த இளைஞன் பொலிஸாரிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளான். எனினும் குறித்த இளைஞனை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இதனை அவதானித்த இளைஞன் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் நேற்று பி.ப…
என்னை சேர் என கூப்பிட வேண்டாம் – ஜனாதிபதி மைத்திரி
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பங்கேற்ற முதலாவது நேர் காணல் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இளைஞர் யுவதிகள் முக்கியமான ஒத்துழைப்பை வழங்கினர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கினர். மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் எதிர்பார்ப்புடன் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும். 100 நாள் திட்டத்தை முன்னெடுப்பது அவ்வளவு சுலமான காரியமல்ல….
கோத்தா வளர்த்த யானைக்குட்டிகள் பின்னவல சரணாலயத்திடம் ஒப்படைப்பு
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தான் வளர்த்து வந்த யானைக்குட்டிகள் இரண்டையும் மீள ஒப்படைத்து விட்டதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இந்த இரண்டு யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த இரண்டு யானைக்குட்டிகளையும் கோத்தபாய ராஜபக்ச சட்ட ரீதியாகவே வளர்த்து வந்துள்ளார். எனினும் இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் தன்னிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்….
எனக்கென்று விமானம் வாங்கும் பணத்தை மக்களுக்கு பயன்படுத்துங்கள்; மைத்திரி
ஜனாதிபதி மட்டும் பயன்படுத்துவதற்கு என உத்தியோகபூர்வமாக விமானம் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டு அந்தப் பணத்தை மக்களின் நலன்புரிக்காக செலவு செய்யுங்கள் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு மட்டும் பயன்படுத்துவதற்கு என உத்தியோக பூர்வ விமானம் அடுத்த மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருக்கின்றது.இந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 16மில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இந்த விமானம் கொண்டுவரப்படவிருந்தது. இதன் இலங்கை பெறுமதி 208கோடி ரூபாவாகும். இதற்காக திறைச்சேரியின் ஊடாகவே பணம் செலுத்தப்படவிருந்தது. எனினும், பிரதமர் ரணில்…
ரஷ்ய அதிபர் புதின் மகளின் ரகசியத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட எதிர்கட்சி தலைவர்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினின் மகள் குறித்த ரகசியத்தை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரது மகள்கள் எகடெரினா(28) மற்றும் மரியா(29) ஆகியோர் பொதுமக்கள் பார்வையில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன படித்துள்ளார்கள், தற்போது எங்கே, என்ன செய்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் அலெக்சீ நவல்னி வியாழக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எகடெரினா பற்றிய ரகசியத்தை…
நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளேன்: சஜித் பிரேமதாச
செவ்சிறிபாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எனது எந்த ஒரு ஒப்பந்தமும் ஒளிவு மறைவுமின்றி விளம்பரப்படுத்தப்படும். எனது அமைச்சின் கீழ் உள்ள அதிகார சபைகள், நிறுவனங்களில் ஒருபோதும் எனது கட்சிக்காரர், சொந்தக்காரர் மற்றும் தோ்தலில் உதவி செய்தவர்களை பணிப்பாளர் சபையில் நியமிக்கப் போவதில்லை. ஒவ்வொரு துறையிலும் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்களையே தேடுகின்றேன். எனது அமைச்சினை நடைபெற்றுள்ள லஞ்சம், நிதி மோசடிகளை சர்வதேச கணக்காய்வாளர் கம்பனி ஆய்வு செய்து வருகின்றது. அதன் பின்…
ஒபாமாவின் மனைவி ஏன் முக்காடு போடல? வெள்ளை மாளிகை விளக்கம்
சவுதி பயணத்தின் போது ஒபாமாவின் மனைவி மிஷேல் முக்காடு போடாததற்கு வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.சமீபத்தில் சவுதிக்கு ஒபாமாவுடன் பயணம் மேற்கொண்ட அவரது மனைவி மிஷேலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அவர் முக்காடு அணியாததால் சவுதியில் சில அதிகாரிகள் அவருடன் கைகுலுக்க மறுத்து, ஒபாமாவை மட்டும் கைக்குலுக்கி சென்றனர்.இச்செயல் மிஷேலை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. மேலும் மிஷேலின் உருவத்தை சவுதி தொலைக்காட்சியில் மங்கலாக்கி ஒளிப்பரப்பட்டது. ஆனால் இதற்கு தாங்கள் பொறுப்பில்லை என அந்நாட்டு தொலைக்காட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளது….
ஜெனீவாவில் புதிய பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பிக்கும்
ஜெனீவாவில் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த மற்றொரு பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இது தொடர்பாகவும் ஆராய்வார் எனவும் தெரியவந்திருக்கின்றது. 2013, 2014 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் அடுத்த கட்டமாகவே இந்தப் பிரேரணை அமைந்திருக்கும் எனவும்,…
இரட்டை கோபுர தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்ப்பில்லை: இஸ்றவேலர்களின் குருநாதர் ஸ்டீபன் அதிரடி!
அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் வரலாற்றில் மறக்கமுடியாத தாக்குதலாகும். இந்த தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதன் பழி முஸ்லிம்கள் மீது சுமாத்தப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு போரையே அமெரிக்க நடத்தி முடித்திருக்கிறது. ஆனால், இந்த தாக்குதல் யூதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்ற உண்மையை ஒரு யூதகுருவே சில தினங்களுக்கு முன் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். பிரிட்டனை சார்ந்த ஸ்டீபன் ஸீஸர் என்ற அந்த யூத குரு செப்டம்பர் 11 தாக்குதல் முழுக்க முழுக்க…
