News
யாழ் முஸ்லீம்களின் வரலாற்றுப் பார்வை -நூல் வெளியீடு
அஸ்ரப் ஏ சமத் வெளியீட்டு வைபவத்திற்கு வருகை தந்திருந்த 457 பேருக்கும் இந் நூல் முற்றாக இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. யாழ் முஸ்லீம்களது கல்வி, பண்பாடு இலக்கிய பங்களிப்பு தொழில் அரசியல் அவர்கள் சந்தித்த அனர்த்தங்கள். இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் சிதறுண்டு வாழும் நிலை, மீளவும் யாழ் செல்ல முடியுமா? என்னும்; ஏக்கம். 21ஆம் நூற்றாண்டு ஆரம்ப கால யர்ப்பாணத்து முஸ்லீம்களின் நிலை முதலானவை தொடாபான வரலாற்றுப் பார்வையை இன்றுள்ள யாழ் முஸ்லீம்களும் எதிர்கால சந்ததியினரும்…
மஹிந்தவுக்கு முற்றிலும் மாறான விதத்தில் சிறிசேன – டேவிட் கேமரூன்
அஸ்ரப் ஏ சமத் இலங்கையில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற விடயத்தை பிரிட்டன் ஒருபோதும் மறக்காது. அதேபோன்று செப்ரெம்பரில் ஐ.நாடுகள் விசாரணை அறிக்கை வெளியாகி விவாதிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாகவுள்ளோம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவை நேற்றுச் சந்தித்த பிரிட்டனின் டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதியுள்ளசெய்தியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைக்கு 2013 இல் பயணம் செய்த தருணத்திலிருந்து…
இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம்
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்களை விட 10 எண்ணிக்கை அதிகமாகும். இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். இந்த விளக்கப்படம் 9 நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து விளக்குகிறது. 1980 ஆம் ஆண்டுகளில் 65 ஆயிரமாக உச்சத்தை அடைந்து இருந்த அணு ஆயுதங்கள் பிறகு 10…
ரஞ்சன் ராமநாயக்க, விமல் வீரவன்சவுக்கு சவால்!
கால்நடை அபிவிருத்தித்துறை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளார். இது தொடர்பான அழைப்பை அவர் தமது முகநூலில் பிரசுரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கண்டிக்கூட்டத்தில் 10ஆயிரம் பேர் பங்கேற்றால்; தூக்கிட்டு கொல்வதாக தாம் சவால் விடுத்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய கண்டிக்கூட்டத்தில் 10ஆயிரம் பேர் பங்கேற்றமையால் தாம் தற்கொலை செய்துக்கொள்ளவேண்டும் என்றும் விமல் வீரவன்ச கூறி வருவதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். எனினும் தாம் ஒருபோதும்…
இலங்கையில் நல்லிணக்கம், ஒத்துழைப்பு ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பம்
கடந்த தேர்தலுக்குப் பின் இலங்கையில் ஜனநாயகம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வரலாற்று வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேசத்தின் ஆதரவுடன் இலங்கை மக்கள் நன்மை அடையக்ககூடிய அளவு சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் ஜெப்ரி பெல்ட்மென் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தனது இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில்…
Lanka’s ICT exports to cross $1b this year’: Rishad
Impressed by Lankan ICT sector: JISA’s Yamamoto Coming up, 2 Lankan ICT visits to Tokyo: JETRO’s Obama 2014 Lanka’s ICT exports at $815 m The visiting Japanese IT experts delegation with Industry and Commerce Minister Rishad Bathiudeen, EDB Chairman and CEO Bandula Egodage and JETRO Colombo Resident Representative Kazuhiko Obama Sri Lanka’s high-tech exports are…
இனி சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை கிடையாது – ரவி
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் வழங்கப்படாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். இது குறித்து ´சவுத் சைனா மார்னிங் போஸ்ட்´ என்ற ஹாங்காங் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனத்திடம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த எந்த பதிவுகளோ, சாத்திய ஆய்வு குறித்த அறிக்கைகளோ, அரசாங்கம் அங்கீகாரம் அளித்தமைக்கான ஆவணங்களோ இல்லை. இவற்றை அவர்கள் செய்யத் தவறியதால் தான், ஏதாவது…
சீனா – அமெரிக்கா பனிப்போரில் இலங்கை சிக்கியுள்ளது; சம்பிக்க ரணவக்க
”இந்தியாவை பொறுத்தவரை அந்த நாடு இலங்கையின் வடக்கு, கிழக்கை மாத்திரம் பார்க்காமல் முழு இலங்கையையும் பார்க்க வேண்டும். மேலும் சீனாவுடன் எவ்வாறான கொள்கையுடன் இலங்கை செயற்படவேண்டும் என்று இந்தியா கூற முடியாது” என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணங்களை பார்க்கும் போது அது இலங்கையில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எனினும் இந்த விடயங்களில் இந்தியா இலங்கையின் அனைத்து பகுதிகளையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்று ரணவக்க குறிப்பிட்டார்….
இலங்கையின் இனப்பதற்றத்தை உடைக்க அமெரிக்கா உதவும்!
இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் இனப்பதற்றத்தை இல்லாதொழிக்கவும் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் அமெரிக்கா உதவி செய்யும் என்று, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிராந்திய விவகார பணிப்பாளர் நெய்ல் ரோமாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த முன்னெடுப்புக்கள், ஏதேச்சதிகார அரசாங்கத்தை வீழ்த்திய புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இனப்பதற்றத்தை தவிர்க்க புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்று நெய்ல் ரோமாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது எலிசபெத் மகாராணியாருடன் இன்று சந்திப்பு
பொதுநலவாய தின நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கு மகாராணியார் இன்று உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பிரித்தானிய பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்புக்களின்போது இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தர்மஸ்ரீ பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார். தனது விஜயத்தின்போது ஜனாதிபதி…
ஆற்றில் மூழ்கிய காரிலிருந்து 14 மணி நேரம் கழித்து மீண்ட கைக்குழந்தை : இறந்த தாயின் குரல் கேட்டதால் போலீசார் பீதி
சில தினங்களுக்கு முன் ஆற்றில் முழ்கிய காரிலிருந்து கைக்குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்து போன தாயின் குரலைக் கேட்டதால் போலீசார் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் உத்தா கவுண்டியில் உள்ள ஸ்பிரிங்வில்லி அருகே கடந்த வெள்ளி இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ஒருவர் சத்தம் வந்த திசையில் சென்று பார்த்தார். எதுவும் தென்படாத நிலையில் தனது வீட்டிற்கு வந்து விட்டார். மறு நாள் மதியம் அதே பகுதியில் உள்ள…
விண்ணில் பாயத் தயாராகும் சீனாவின் லாங் மார்ச் 6
ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது சீனா. நிலவுக்குச் சென்று அங்கிருந்து திரும்புவம் விண்கலத்தை வடிவமைத்து வரும் சீனா, வரும் 2020-ம் ஆண்டுக்குள் தனது சொந்த ஆய்வகத்தை விண்வெளியில் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக கூடுதல் எடை சுமந்து செல்லும் நவீன ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறது. லாங் மார்ச் என்ற பெயரில் தொடர் ஏவுகலங்களை உருவாக்கி வரும் சீனா, இந்த ஆண்டு இறுதியில் லாங் மார்ச் 6 ஏவுகலத்தை விண்வெளியில் ஏவத் தயாராக உள்ளது….
