News
சவூதி மன்னரின் விஷேட ஆலோசகர் – பிரதியமைச்சர் அமீர் அலி சந்திப்பு
அஸ்ரப் ஏ சமத் சவூதி அரேபியாவின் ரோயல் – மன்னரின் விஷேட ஆலோசகர் கலாநிதி பாயிஸ் அல் ஆப்டின் நேற்று வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலியை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார். இச் சந்திப்பின்போது கிழக்கு மாகணத்தின் வீடமைப்புத்திட்டங்கள் மற்றும் நிர்மானத்துறை பற்றியும் பிரதியமைச்சர் சவூதி மன்னரின் ஆலோசகருடன் கலந்துரையாடினார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் வெளிநாடு செல்ல தடை
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதிக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வர்த்தக நடவடிக்கை ஒன்றுக்காக தமது கட்சிக்காரரான சேனாதிபதி நைஜீரியா செல்ல வேண்டியுள்ளதால் அவருக்கு அனுமதி அளிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கேட்டுக் கொண்ட போதிலும் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. காலி துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் காரணமாகவே இவருக்கு வெளிநாடு செல்ல…
பதில் பிரதம நீதியரசராக சந்ரா ஏக்நாயக்க நியமனம்
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் சந்ரா ஏக்நாயக்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தற்போது வெளிநாடு சென்றுள்ளதை அடுத்தே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று மாலை பதில் பிரதம நீதியரசாரக சந்ரா ஏக்நாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் இந்த அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக அத்தநாயக்க மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் தொழிற்சாலை வேண்டாம் – பிக்குகள் சத்தியாக்கிரகம்
ஆராச்சிக்கட்டுப் பகுதியில் தொழிற்சாலை நிர்மானிக்க வேண்டாம் என கோரி பௌத்த பிக்குகள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இன்றும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைக்குட்பட்ட புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் ஆனைவிழுந்தாவப் பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ள வீட்டுக் கூரைத் தகடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தடுத்து நிறுத்துமாறுக் கோரி தொழிற்சாலைக்கு முன்பாக இன்று ஒன்பதாவது நாளாக சத்தியாகிரகப் போரட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட பொது மக்கள் ஈடுபட்டிருப்பட்டுள்ளனர். (vk)
மோடியின் வருகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 86 பேர் விடுதலை
கடந்த மாதம் 26ம் திகதி இலங்கை எல்லையைத் தாண்டி மீன் பிடித்தனர் என்று தமிழக மீனவர்கள் 86 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் முல்லைத் தீவு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாளில் ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழக சிறைகளில் இருந்த 12 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவுப்…
அமைச்சர் றிஷாத் – இலங்கைக்கான எஸ்டோனியா தூதுவர் சந்திப்பு
செய்திப் பிரிவு இலங்கைக்கான எஸ்டோனியா தூதுவருடனான சந்திப்பின்போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஐனாதிபதி தேர்தலுக்குப்பிறகு நாட்டிலுள்ள பொருளாதார முன்னேற்றம் அதிகமான வெளிநாட்டு முதலீட்டார்களின் முதலீடுசெய்வதற்கான ஆர்வம் மற்றும் 100 வேலைத்திட்டமும் அதன் அடைவுகள்,போன்ற முக்கிய விடயங்களை தூதுவருக்கு விளக்கினார். எஸ்டோனியா முதலீட்டார்களையும் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாகவும், தொடர்ந்து இலங்கையுடன் உறவைப்பேணுவதாகவும் தூதுவர் அமைச்சரிடம் தெரித்தார். இச்சந்திப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவரும் கலந்துக் கொண்டார்.
இவரை கண்டுபிடிக்க உதவுங்கள்
அபூ பயாஸ் மட்டக்களப்பு மாவட்ட,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரி வீதி,ஏறாவூர் -3A ஐ சேர்ந்த சம்மூன் குட்டி முஹம்மது ரஷீத் (வயது -29) என்பவர் சென்ற திங்கள் கிழமையிலிருந்து (09-03-2015) காணாமல் போயுள்ளார். ஏறாவுரிலிருந்து கொழும்புக்கு அரிசி ஏற்றிச் செல்லும் லொறியில் நடத்துனராக (கோளயா”) சென்ற இவர் கொழும்பிலுள்ள கடையில் திங்களன்று காலை அரிசி இறக்கிவிட்டு அருகிலுள்ள ஹோட்டலில் தேநீர் குடிக்க சென்ற இவர் திரும்பி வரவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நான்கு நாட்களாக தேடியும் இவரை…
குவைத்தில் உயிரிழந்த இலங்கை பெண்: சடலத்தை கொண்டுவர நடவடிக்கை
ஜவ்பர்கான் குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) எனும் யுவதியே குவைத் நாட்டில் உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி கடந்த நான்கு மாதத்திற்கு முதல் குவைத் நாட்டிற்கு சென்றிருந்தார். இந்த யுவதியை காத்தான்குடியைச் சேர்ந்த உப முகவர் ஒருவரின் ஊடாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் குவைத்துக்கு…
அஜித் ரோஹன OUT – றூவான் குணசேகர IN
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கொழும்பு – வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் றூவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
கோட்டா கைது? மைத்திரி நாடு திரும்பியதும் இறுதித் தீர்மானம்!
-Gtn- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய நிறைவேற்றுப் பேரவையில் நேற்றைய 11-03-2015 தினம் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகள் தொடர்பில் நேற்றைய தினம் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன் போது அவன்ட் கார்ட் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளாரிடம் விரிவாக விசாரணை நடாத்தவும், அதற்காக அவரை கைது செய்து…
தமது இனத்தவர்களுக்கும் தொழில்வாய்ப்பை பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் ஹக்கீமிடம் ஆதிவாசி தலைவர் கோரிக்கை
முகம்மட் பஹாத் ஹெனானிகல ஆதிவாசிகளின் மறைந்த தலைவர் ஊறுவரிகே வன்னிலஅத்தோவின் புதல்வர்நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (11) பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து தமது இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருமாறு விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். ஆதிவாசிகளின் குடியிருப்புகள் உள்ள பிரதேசங்களில் அவர்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், வேடுவர் தலைவர் கேட்டுக்கொண்டபடி, ஆதிவாசிகளில் படித்தவர்களுக்கு தமது அமைச்சின் கீழுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு…
