News
கைதி மாரடைப்பால் மரணம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் மாரடைப்பு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான தேவதாஸ் குணசீலன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
ஜனாதிபதியை சந்திக்க முயற்சித்த கெலும் மெக்ரோய்
பிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினை சர்ச்சைக்குரிய சனல் – 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான கெலும் மெக்ரோய் சந்திக்க முயற்சித்துள்ளார். இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் அடங்கிய ‘நோ பயர் சோன்’ திரைப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காகவே அவரை சந்திக்க இவர் முயற்சித்துள்ளார். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை கணக்கிலெடுக்காமல் சிரித்துகொண்டே காரில் ஏறிவிட்டார். அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வழங்குவதற்கு முயன்றார். அமைச்சர்…
போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும்!- மஹிந்த ராஜபக்ச
யாபஹூவ ரஜமஹா விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆசீர்வாத போதிபூஜையில் பங்கேற்கக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது. போதி பூஜையின் ஊடாக நாட்டுக்கும் படைவீரர்களுக்கும் நல்லாசி வேண்டுகின்றோம். ஆட்சியாளர்களின் மனங்களிலிருந்து குரோதம்ää பொறாமைää பழிவாங்கும் எண்ணங்கள் இல்லாமல் போக வேண்டும் என வேண்டுகின்றோம். தொழில்களிலிருந்து நீக்கப்படும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மீளவும் தொழில் வழங்க இந்த ஆட்சியாளர்களுக்கு மனம் வர வேண்டும். எமக்கு வாக்களித்த 58 லட்ச மக்களின் நலன்களுக்காக…
இஸ்ரேலில் அடுத்த மாதம் தேர்தல்- யூதர்களின் வாக்குறுதிகள்
Abusheik Muhammed வரும் மார்ச் 17ம் தேதி இஸ்ரேலில்(ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தின்) அதிபர் தேர்தல் நடக்க உள்ளது, இதில் அடுத்தது எந்த கட்சி ஜெயித்தாலும் பாலஸ்தினர்களுக்கு பிரச்சனை தொடரும். யூதர்களின் வாக்குறுதிகளை பார்ப்போம். 1. ஜெருசலம் நகரம்(பாலஸ்தின தலைநகர் மஸ்ஜித் அல்அக்ஸா உள்ள பகுதி) இஸ்ரேலுடன் இணைக்கப்படும். 2. பாலஸ்தின பகுதிகள் இன்னும் அதிகமாக ஆக்கிரமிக்கப்படும். 3. யூதர்களுக்கு ஆதரவாக அதிகமாக சட்டம் ஏற்றப்படும். 4. பாலஸ்தின நாட்டை முழுமையாக அபகரிக்கப்பட்டு இஸ்ரேலாக மாற்றப்படும் என இஸ்ரேலில் உள்ள யூத…
எதிர்வரும் 45 நாட்களுக்குள் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்; அமைச்சர் கருஜயசூரிய
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்பு சுயாதீன ஆணைக்குழு அமைத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். சப்ரகமுவ மாகாண சபையின் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சா் ஜோசப் மைக்கல் பேரேரா – மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
அஷ்ரப் .ஏ. சமத் மீன்பிடி த்துறை உள்நாட்டு அமைச்சா் ஜோசப் மைக்கல் பேரேரா, மீனவா்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா். இச் சந்திப்பில் மீனவா்கள் சட்டவிரோத மீன்பிடிப்பதற்கான வலைகள் மற்றும் மீன் சந்தைப்படுத்தல், அவா்களுக்கான உதவித்திட்டங்கள் பற்றி ஆராய்வதற்கு தமது அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்றை நியமித்துள்ளாா். சட்டவிரோத வலைகள், இயந்திரங்கள் பாவிப்பதால் கடடல் அழிவு சிறு மீனவா்கள் பாதிப்பு பற்றியும் இங்கு விரிவாக ஆரயப்பட்டது.
றிபாத் நண்பர்கள் ஒன்றிய ஏற்பாட்டில் சம்மாந்துறையில் ஜனாசா குளிப்பாட்டல் பயிற்சி
மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார். சம்மாந்துறையில் பல்வேறுபட்ட சமூக நலப்பணிகளை செய்து வரும் றிபாத் நண்பர்கள் ஒன்றிய சமூக சேவைகள் அமைப்பினரால் அண்மையில் (2015-03-08) சம்மாந்துறையில் பெண்களுக்கான ஜனாசா குளிப்பாட்டல் மற்றும் கபனிடுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டன. முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய மிக உயரிய பயிற்சியான இவ் ஜனாசா குளிப்பாட்டல் பயிற்சிக்கு சுமார் 750க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், அஷ்ஷேக்:…
பிரதமர் ரணிலில் அதிரடி கருத்துக்கு இலங்கை மீனவர்கள் வரவேற்பு
இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லைமீறி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் தவறில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்தானது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்வதையும், தமது கடல் வளத்தை அழிப்பதையும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்கள் தொடர்பில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள…
ஆற்றில் விழுந்த கார் 14 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்பு
அமெரிக்காவில் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் தலைகுப்புற விழுந்த காரிலிருந்து 14 மணி நேரத்துக்குப் பிறகு பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. எனினும், இந்த விபத்தில் அந்தக் குழந்தையின் தாய் உயிரிழந்தார்.அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. லின் குரூஸ்பெக் (25) என்ற பெண், தனது 18 மாதக் குழந்தை லில்லியுடன் சால்ட் லேக் நகருக்கு 80 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்பானிஷ் ஃபோர்க் நகர ஆற்றுப்பாலம் வழியாக வெள்ளிக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தார். பாலத்தை அந்தக் கார் கடந்தபோது…
கோத்தாவுக்கு நீதிமன்றத்தடை
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 4 பேர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு காலி நீதிமன்றம் தடை விதித்து கடவுச் சீட்டையும் முடக்கியது. குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. காலித் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவன்ற் கார்டே தனியார் கோத்தாவுக்கு நிறுவனத்தின் இந்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு முடியும்…
ISIS உடன் இணையச் சென்ற அவுஸ்திரேலிய சிறுவர்கள் விமான நிலையத்தில் தடுக்கப் பட்டனர்!
ISIS போராளிக் குழுவோடு இணைவதற்காக புறப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இரு பருவ வயதுச் சிறுவர்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். 16 மற்றும் 17 வயதுச் சகோதரர்களான இவர்கள் இருவரும் பயணிகள் பரிசோதனைப் பிரிவைக் (customs) கடக்க முயன்ற போது சந்தேகத்தின் பேரில் தடுக்கப் பட்டதாக அவுஸ்திரேலிய குடியகழ்வுத் துறை அமைச்சர் பீட்டர் டுட்டொன் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளார். இந்த சகோதரர்கள் பரிசோதிக்கப் பட்ட போது ஒரு பயண மூட்டையுடன்…
இலங்கை பெண்ணுக்கு 3 வருட சிறை
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிறந்த குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் தண்டனை காலம் முடிந்த பின் பெண்ணை நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்லப்பட்ட குழந்தையின் உறவினர்களுக்கு நட்டஈடு (blood money) வழங்குமாறு பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிறந்த குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் திணித்து குப்பை பெட்டியில் வீசியதாக பெண்ணின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
