News
2500 ஆண்டு பழமையான மனித மூளை கண்டுபிடிப்பு
2500 ஆண்டு பழமையான மனித மூளை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் கடந்த 2008–ம் ஆண்டில் போர்க் பகுதியில் சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. அதில் மூளை பத்திரமாக இருந்தது. இந்த மூளையை 34 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு மேற்க்கொண்டு வருகிறது. அந்த மண்டை ஒடு தாடையுடனும், முதுகெலும்பு ஒட்டிய நிலையிலும் உள்ளது. சமீபத்தில் கிடைத்த தகவல்படி அந்த மண்டை ஓட்டுக்குள் இருக்கும் மூளை 2500 ஆண்டுகளுக்கு…
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கான தடை தற்காலிகமாக நீக்கம்
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பொது அமைதி, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். அது தொடர்பில் கருத்துக்களை வழங்குவதற்கு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டதை தொடர்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவத்தார். எதிர்வரும் 21 ஆம் திகதியில் இருந்து முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடரும் பெண் ஊடகவியலாளர்கள் மீதான பாலியல் தொல்லை
இலங்கை ஊடகத்துறையில் பணியாற்றுகின்ற 29 வீதமான பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீல்ரூக்சி ஹந்துன்நெத்தி என்ற ஊடகவியலாளர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 45 பெண்களில் 13 பெண்கள் (28.8மூ) தாம் வேலைத்தளங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். ஆனால் இவ்வாறான தொல்லைகள் குறித்து இதுவரை எதுவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என்றும், தமது எதிர்காலம் கருதி முறைப்பாடுகளை பதிவுசெய்ய பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதில்லை என்றும்…
அஸ்ஸலாமு அலைக்கும். சென்ற மாதத்திற்கான சம்பளம் இன்னும் கிடக்க வில்லை. இது சம்பந்தமாக உங்களிடம் கதைக்குமாறு இன்று தெரிவித்தார்
சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரமணிய சாமி தமது கருத்துக்களை அறிக்கையாக சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டித்து வழங்கியுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் தாமும் சில கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணிய சாமி, 18ம் திகதிக்குள் கருத்துக்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்….
4 வயது சிறுமியை தாக்கிய தாய் கைது
க.கிஷாந்தன் நோர்வூட் – போற்றி தோட்டத்தில் 4 வயது சிறுமி ஒருவரை தாய் அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மேற்படி தாயினால் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளதாக குறித்த சிறுமியின் தாத்தா தெரிவித்துள்ளார். அதன்பின் நோர்வூட் பொலிஸாருக்கு சிறுமியின் தாத்தா செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து…
ஜெனரல் சரத் பொன்சேகா நிரபராதி: நீதிமன்றம்
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரால் சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளராக இருந்த முன்னாள் கப்டன் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பிரசார பணிகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்தியதாக இவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவில் நாயை கொடுமைப்படுத்தியவர்களுக்கு 5 வருட சிறை
இரண்டு சவுதி இளைஞர்களுக்கு வேலை எதுவும் இல்லாததால் நேரத்தைப் போக்க தங்கள் வீட்டு நான்கு சக்கர வாகனத்தில் ஏறி ஒரு நாயை விரட்டிக் கொண்டு சென்றுள்ளனர். விரட்டியதோடு அல்லாமல் 10க்கும் மேற்பட்ட முறை அந்த நாயை வாகனத்தில் மோதவிட்டு அது வலியில் குலைப்பதை ரசித்துள்ளனர். முடிவில் அந்த நாய் இறக்கும் வரை தொல்லைபடுத்தியிருக்கின்றனர். ஒருவன் காரை ஓட்ட மற்றொருவன் தனது மொபைலில் அதனை படமாக பிடித்துள்ளான். படமாக எடுத்ததோடு மட்டுமல்லாது அதனை இணைய தளத்திலும் பரவ விட்டுள்ளான்….
மூடப்படுகிறது மத்தள விமான நிலையம்
மத்தள மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தின் பயணிகள் சேவைகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படவுள்ளது என்று தெரியவருகின்றது. கடந்த இரு மாதங்களில் இரு பயணிகளே இந்த விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். விமான நிலையப் பராமரிப்புக்காக மாதாந்தம் 250 மில்லியன் ரூபா செலவிடப் படுகின்றது.
முஸ்லிம் பெண்கள் இறுக்கமான ஆடையணிவதை நிறுத்தவும் – மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் படையணி
இன்று இலங்கையின் தலைநகர் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் நடைபாதைகளிலும், மோட்டார் வண்டிகளிலும், பார்க்களிலும், பீச்களிலும் எமது முஸ்லிம்களின் ஆடைகளை கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை அனைவருக்கும் வந்திருக்கும். அதனை சொல்வதிலும் தடுப்பதிலும் பிற்போக்கு தனத்தை கையாண்டு கொண்டிருக்கும் எமது சகோதர சகோதரிகளுக்கு அன்பான மடல். மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு என்று வெறுமனே அரசியல் பேசுவதற்காக அமைக்கப்பட்ட படையணி அல்ல இது, மாறாக பாவங்களை சொல்லால் அல்லது கையால் தடுப்பதற்காக முன்வந்த ஒரு படையணி என்பதை…
விலை குறைப்பு செய்யாத வியாபாரிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – அமைச்சர் றிஷாத் பணிப்புரை (photos)
இர்ஷாத் றஹ்மத்துல்லா வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்ட விலைக் குறைப்பு நிவாரணம் மக்களை சென்றடைவது தொடர்பில் கண்டறியும் வகையில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் சதொச கூட்டுறவு தொகுதிக்கு திடீர் விஜயமொன்றினை இன்று (2015.03.09) மேற்கொண்டார். மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சகிதம் இங்கு விஜயம் செய்த அமைச்சர் களஞ்சியசாஉயணலையின் தற்போதைய நிலையினை பார்வைியட்டதுடன்,களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டதுடன்,அதனை உரிய முறையில் பாதுகாப்பாக வைக்குமாறு பணியாளர்களுக்கு பணிப்புரை…
வேன் மோதியதில் சிறுமி பலி- வேனைத் தீயிட்டுக் கொழுத்திய பொதுமக்கள்
செய்திப் பிரிவு நேற்று மாலை சுமார் 6 மணியளவில் குருநாகலில் இருந்து வந்த வேன் மோதி பாடசாலை மாணவி ஒருவர் பலியாகியுள்ளார். குருநாகலில் இருந்து வந்த வானுடன் குறித்த சிறுமி மோதியதில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாவடிவேம்பைச் சேர்ந்த சிவயோகன் யசோதா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார். இந்தவிபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் வாகனத்தை தீயிட்டு கொழுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
சர்வதேச சட்டத்தை மதிக்காத இஸ்ரேல் ராணுவம்: யூனிசெப் அறிக்கை….!
பாலஸ்தீனத்திடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட தீவிரவாத நாடான இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என்று யூனிசெப் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக யூனிசெப் வெளியிட்ட அறிக்கையில்…. தடுப்புக்காவல், கண்காணிப்புகள் மற்றும் பரிந்துரைகள் என்ற பெயரில் பாலஸ்தீன குழந்தைகளை நடத்துவதில் இஸ்ரேல் ராணுவத்தினர் சர்வேதேச சட்டங்களை மீறுகின்றது என்று அறிக்கையில் கூறியுள்ளது. 162 குழந்தைகள் கண்களால் கட்டப்பட்டும், 189 குழந்தைகளின் கைகள் இறுக கட்டப்பட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கின்றனர். கைது, சிறை அறை மாற்றம், விசாரணை மற்றும் தடுப்புக்காவலின்…
