News
அரங்கச் செயற்றிடத்தில் 15ஆயிரம் பேர் பங்கேற்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் அகிம்சை, சகிப்புத்தன்மை மற்றும் பல்வகைமை பற்றிய கருத்துக்களை மக்கள் மயப்படுத்திய இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அறிவிக்கின்து. இம்முறை சுமார் 15 ஆயிரம் பேர் இலங்கை மக்கள் அரங்கத்தில் இடம்பெற்ற அளிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டுள்ளனர். மக்கள் அரங்கத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட அமிக்சை பற்றிய சிந்தனைகள் சுமார் 30ஆயிரம் பேரிடம் சென்றிருப்பதை இறுதிக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாக ஊடக மன்றம் மேலும் தெரிவிக்கின்றது. கிழக்கு, மத்திய மற்றும்…
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரையில் தேசிய அரசாங்கத்தை முன்னெடுக்க வேண்டும்-அத்துரலியே ரத்ன தேரர்
நூறு நாட்கள் வேலைத்திட்டம் என்பது தேசிய அரசாங்கத்திற்கான பிரசாரமே தவிர கோட்பாடு அல்ல. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்ப டும் வரையில் தேசிய அரசாங்கத்தினை கொண்டு செல்ல வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவரும் தூய்மைக்கான நாளை அமைப்பின் தலைவருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுவதே தேசிய அரசின் பலம் எனவும் சுட்டிக்காட்டினார். சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று…
அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து பொலிஸ் துறையை மீளப் பெறுங்கள்-நிமல் சிறிபால டி. சில்வா
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின்றி சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தன்னிச்சையாக பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துவருகிறார். எனவே, அவரிடம் இருந்து பொலிஸ் துறையை மீளப்பெறுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். கிறிஸ்தவ விவகாரம் மற்றும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சைக் கொடுத்துவிட்டு பொலிஸ்துறையை மீளப்பெறுமாறு மீளப்பெறுமாறு கோருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்…
நீர்கொழும்பு – வத்தளை பகுதி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் எங்கே?
இக்பால் அலி நீர்கொழும்பு மற்றும் வத்தளை நகர பகுதியில் பலகைக் கொட்டில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழும் மக்களுக்கு நகர அபிவிருத்தி அமைச்சினால் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்மாணித்துத் தருமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் இந்த மக்களுடைய வீடற்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து போராட்ட முன்னெடுப்புக்களை மேற் கொள்ளப் போவதாகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி றஹீம் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தடை செயய்யப்பட்ட சுனாமி எல்லைப்…
90களில் இருந்து பிசினஸ் செய்து வந்தவர் சிக்கினான்.. நீர்கொழும்பில் 400 இலட்சம் ரூபா ஹெரோயினுடன் சிக்கிய தந்தையும் மகனும்
ஐந்து கிலோகிராம் ஹெரோய்னுடன் பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் சந்தேகநபரின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சில தினங்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பிரதிபலனாக நேற்று (10) இந்த போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியில் தங்க நகை விற்பனை நிலையமொன்றிற்குள் இருந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது…
இலங்கையில் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊர்களில் புகைத்தலை தடை செய்யவும்
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிவாக உள்ள ஊர்களில், முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் புகைத்தல் உற்பத்திப்பொருட்களையும் அதன் விற்பனையையும் நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றுமாறு மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர் படையணி வேண்டுகோள் விடுத்துள்ளது. காத்தான்குடி நகரசபை மேற்கொண்ட நடவடிக்கை போல ஏன் மற்றைய ஊர்களிலும் மேற்கொள்ள முடியவில்லை என்று கேள்வியெழுப்பியிருக்கும் இப்படையணி உள்ளுராட்சி சபைகளுக்கு தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் அதனை விற்கக்கூடாது என்ற சட்டத்தினை நிறைவேற்ற முடியும் ஆனால் பெரும்பாலான சபைகளின் தலைவர்களே இப்பழக்கத்திற்கு…
பெரும்பான்மை இன சிறுவனின் செவிப்புலனுக்கு உதவிய முஸ்லிம்.. மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஐ.டி.என் செய்தி
அம்பலாங்கொடை பட்டபொல பிரதேசத்தைச் சேர்ந்த குலரத்ன ஆகாஸ் என்ற ஐந்து வயது செவிப்புலனற்ற சிறுவனின் காதில் பொருத்தப்பட்டிருந்த பெறுமதிமிக்க செவிப்புலனை அறியும் கருவி கடந்த 5ம் திகதி கொழும்பு கடற்கடை பிரதேசத்தில் வைத்து களவாடப்பட்டது. இது குறித்த செய்தியை ஐ.ரி.என், வசந்தம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. இதை பார்த்த முன்னாள் ஐ.ரி.என்.பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான இக்கருவியை அச்சிறுவனுக்கு பெற்றுக்கொடுக்க முன்வந்ததுடன் நேற்று (11) ஐ.ரி.என்.தொலைக்காட்சி நிறுவனத்தில்…
புலிக் கொடிகளுடன் தம்மை எதிர்த்தவர்களை நோக்கி, கையசைத்த ஜனாதிபதி மைத்திரி
(பட உதவி – ஜனாதிபதி ஊடகப் பிரிவு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கையசைப்பதை படத்தில் காணலாம்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம்: இலண்டனில் மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதித் தேர்தலில் மாற்றமொன்றை எதிர்பார்த்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இலண்டனில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டிருந்தார். அங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “வறுமையை ஒழித்து சுபீட்சம் மிகு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கை களையப்படும். பயம்,…
அமைச்சர் றிஷாத் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார். இலங்கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவின் பிரதமர் ஒருவர் 28 வருடங்களுக்கு பின்னர் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகின்றமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகின்றது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது பல்வேறு முக்கியமான விடயங்கள் இடம்பெறவுள்ளதுடன் பல உடன்படிக்கைகளும் இரண்டு நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ளன. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில்…
மொத்த சனத்தொகையில் நான்கு சதவீத இலங்கையர்களை கொண்ட கட்டார் நாட்டிற்கு Free visa வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
Safwan Basheer கடாரின் மொத்த சனத்தொகையில் நான்கு சதவீதம் இலங்கையர்கள். இலங்கையிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் free visa வில் கட்டாருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். Qatar Free Visa என்பது இதுதான். அந்த வீசாவில் மூன்றுமாதம் கடாரில் சட்டபூர்வமாக வாழமுடியும். அந்த மூன்று மாத காலத்துக்குள் ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு அந்த நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். கடாரின் அதிகமான நிறுவனங்கள் இரண்டு அல்லது, ஐந்து வருடத்துக்கு ஒரு தொழிலாளியோடு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. கடார் தொழில்…
பிலிப்பைன்ஸ் இளவரசி மாரியா YMMA தலைமையகத்தில்
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு இளவரசி மாரியா ஆமோர் பல தலைவர்கள்,அமைப்புக்களுடனான சந்திப்புக்கள் நடைபெறவுள்ள நிலையில் இன்று சரத் போன்சேக்கா,அமைச்சர் ரோசிசேனாநாயக்க இவர்களை சந்தித்ததோடு ACYMMA தலைமையகத்திற்கு விஜயம் செய்து YMMA YWMA உத்தியோகத்தர்கள் உடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கோண்டார்.
