News
இத்தாலிய கிராமத்தை மூடிய 8 அடி உயர பனி
இத்தாலிய கிராமமொன்றில் ஒரே நாளில் 100 அங்குல (சுமார் 8 அடி) உயரத்திற்கு பனிப்பொழிவு இடம்பெற்றுள் ளது. ரோம் நகரின் கிழக்கே சுமார் 125 மைல் தொலைவிலுள்ள கப்ரகொதா கிராமத்தில் இடம்பெற்ற இந்த பனிப்பொழிவானது தனியொரு நாளில் இடம்பெற்ற அதிகளவான பனிப்பொழிவு என்ற உலக சாதனையை படைத்துள்ளது. மேற்படி பனிப்பொழிவையடுத்து மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு பனிக் குவியலினூடாக சுரங்கப்பாதைகளை தோண்ட நேர்ந்துள்ளது. இந்தப் பனிப்பொழிவு 1921 ஆம் ஆண்டு அமெரிக்க கொலராடோ மாநிலத்தில் சில்வர் லேக்…
யோசித்தவுடன் இணைத்து பேசப்பட்ட இலகுரக விமானம் விமானப்படை நூதனசாலைக்கு கையளிப்பு
யோசித்தவுடன் இணைத்து பேசப்பட்ட இலகுரக விமானம் விமானப்படை நூதனசாலைக்கு கையளிக்கப்பட்டது. இரத்மலானையில் உள்ள விமானப்படையின் நூதனசாலைக்கு அதனை அதன் உரிமையாளர் ரோய் விஜேவர்த்தன கையளித்தார். இந்த விமானத்தை வித்தியாஜோதி கலாநிதி ரோய் விஜேவர்தனவே தயாரித்தார். இந்தநிலையில் அதனை அவர் சிங்கள திரைப்பட இயக்குநர் சந்திரன் ரட்ணத்துக்கு வழங்கினார். பின்னர் அது யோசித்தவுக்கு வழங்கப்பட்டது. இந்த விமானத்தை விமானப்படையின் நூதனசாலைக்கு வழங்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவும் மத்தியஸ்தம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
86 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை
எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 86பேரும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். இலங்கையின் எல்லையினைத் தாண்டி மீன்பிடித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடற்படையினரால் கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும், இன்று இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில் நல்லெண்ண அடிப்படையில் குறித்த 86 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு…
ஜெயக்குமாரி விடுதலை; அமெரிக்கா வரவேற்பு
ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசு விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார். மேலும் ஜெயக்குமாரியின் விடுதலையானது சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வா ஆச்சிரமத்திலும் தங்க…
நேபாள நாட்டவருக்கு, இலங்கையில் மரண தண்டனை
நேபாள நாட்டுப் பிரஜை ஒருவருக்கு கண்டி நீதிமன்றம் இன்று 12-03-2015 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹெரொயின் போதைப் போருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 63 வயதுடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நோபாளம் – லலித்புர பட்டான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி குறித்த நபர் தனது உடம்பினுள் சுமார் 80 கிராம் அளவு ஹெரோயின் வைத்திருந்த நிலையில் கண்டியில் வைத்து கைது…
பாணந்துறையில் பெண்களின் மண்டையோடுகளும் எலும்புகளும் மீட்பு
பாணந்துறை தெற்கு பகுதி வீடொன்றில் இருந்து உயிரிழந்த இரண்டு சகோதரிகளுடையது என சந்தேகிக்கப்படும் மண்டையோடுகளும் மனித எலும்புக்கூடுகளும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வயோதிபப் பெண்களான இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் குறித்த தமது சகோதரிகள் வாழ்ந்த வீட்டுக்கு வந்து பார்த்த போது சகோதரிகளின் மண்டையோடுகளும் மனித எலும்புக்கூடுகளும் காணப்பட்டதாக பெண்களின் சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தநிலையில் மரண விசாரணை இடம்பெறும் வரை சம்பவ இடத்தில் பொலிஸ்…
சிரியா மக்களை உலகம் கைவிட்டு விட்டது: பான் கி-மூன் வேதனை
உள்நாட்டு போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பெரும் உள்நாட்டு போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நான்கு ஆண்டுகளையும் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழையவிருக்கம் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மில்லியனுக்கு…
மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக முன்றலில் இந்த வரவேற்பு வைபவம் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நரேந்திர மோடியை வரவேற்றார். இந்திய பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன், மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இந்த உத்தியோகபூர்வ வைபவத்தின் பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
வட்டியில்லா வங்கிமுறை ஒன்றின் அவசியம்
பக்கீர் எம் இஸ்ஹாக் B.A கமியூனிசம் தோற்றுப்போனது. முதலாளித்துவம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. இஸ்லாம் ஒன்றே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமூகத்தில் இருந்து குறைக்க முடியும். அதனால்தான் இஸ்லாம் சக்காத் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. ஆனால் இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் இங்கு கவலை தரும் விடயம். வாழ்க்கையை ஒரு மரதன் ஓட்டத்திற்கு ஒப்பிட முடியும். இங்கு விரும்பியவர்களல்லாம் அப்போட்டியில் கலந்து தன்னால் இயன்றளவு ஓடலாம். ஆனால் இங்கு 3 பேருக்கு 1ம் 2ம் 3ம்…
BBS ஒரு நிராகரிக்கப்பட்ட அமைப்பு: ஜனாதிபதி
இதன் போது இலங்கை முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தின் பின் சந்தோசமாக இருப்பதாக தான் அறிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அந்த சந்தோசம் நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் அவசியம் குறித்தும் விளக்கியதோடு ஜனாதிபதி பிரதிநிதிகள் குழுவில் அவரோடு பயணித்து குறித்த சந்திப்பின் விசேட அதிதியாக இணைந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் நட்பு பற்றியும் அவரிடம் அறிவுரை பெறுவது பற்றி நகைச்சுவையாகவும் அளவளாவியிருந்தார். சர்வதேச உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதில் குறிப்பாக ஐக்கிய…
அமைச்சர் றிஷாத் பதியுத்தீனுடனான அரசியல் காழ்ப்புணர்சியின் வெளிப்பாடே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு – ஹில்மி மகரூப்
கிண்ணியா ஜிப்ரி மதிப்புக்குறிய அமைச்சர் றிசாட் பதியுத்தீன் இலங்கை முஸ்லீம்களின் அதி சிறந்த அரசியல் தலைவர்களின் ஒருவர் அவர் ஏனைய தலைவர்களின் நன் மதிப்பையும் நம்பிக்கையும் வென்றவர். எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவராக இருந்து ஒரு சிறந்த தலைமைத்துவ நெறியாலுகையினால் உலகிலுள்ள 500 தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் நமது இலங்கை மண்ணுக்கும் தமிழ் பேசும் சமூகத்திக்கும் பெருமை தேடித்தந்தவர் இவ்வாராண ஒரு தலைவர் மீது ஊழல் குற்றச் சாட்டு சுமத்துவது என்பது மிகவும்…
மோடி இலங்கையை வந்தடைந்தார்
அஸ்ரப் ஏ சமத் இந்திய பிரதமர் மோடி இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இன்று காலிமுகத்திடலில் மகத்தாண வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில்; வைத்து இந்தியப் பிரதமரை வரவேற்றார். இவரின் வருகைக்காக கொழும்பில் மட்டும் 5000 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இந்திய இலங்கை தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் விஷேட உரை நிகழ்த்த உள்ளார் அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவை…
