News
அஸ்கிரிய மகாநாயக்கர் காலமானார்!
அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரக்கித தேரர் காலமானார். தேரர், சிங்கப்பூரில் தங்கியிருந்த வேளையிலேயே காலமானதாக அஸ்கிரிய பீடத்தின் தியவதன நிலமே தெரிவித்துள்ளார். சுகவீனம் காரணமாக சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வருடங்களாக சவுதியில் அடைபட்டிருந்த இலங்கைப் பெண் நாடு திரும்புகிறார்!
சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த இலங்கைப் பெண்ணொருவர் 18 வருடங்கள் அடைக்கப்பட்டிருந்து இன்று புதன்கிழமை காலை நாடு திரும்புகிறார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டில் ரியாத்திலுள்ள தூதுவராலயம் மேற்கொண்ட முயற்சியினாலேயே ஆர். பேமவதி என்ற இந்தப் பெண்ணை விடுவிக்க முடிந்துள்ளது. குறித்த பணிப்பெண் அவர் வேலைசெய்த இடத்திலிருந்தே மீட்கப்பட்டாள். 1999ல் மருதானையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒன்றின் ஊடாக பணிப்பெண்ணாகச் சென்ற குறித்த பெண் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினார். அவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை….
ஏறாவூர் தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் விஷேட பயான் நிகழ்வு எதிர் வரும் சனிக்கிழமை
எம்.ரீ.எம்.பாரிஸ் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11.04.2015ம் திகதி சனிக்கிழமை ஏறாவூர் ஆயிஷாபள்ளிவாசலில் பெண்கள் ஆன்கள் இரு சாராருக்கும் விஷேட பயான் நிகழ்சி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வில் இலங்கையின் பிரபல மார்க்க சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.அப்துல் ஹமீட் (ஷரயீ) கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இரு அமர்வுகளாக நடை பெறும் இந்நிகழ்ச்சியானது பெண்களுக்கு 4.15 மணிதொடக்கம் 5.45 மணி வரை நடை பெறும் நிகழ்வில் ” மன நிம்மதியைஇழக்கச்செய்யும் ஆடம்பர வாழ்வு” எனும் தலைப்பில் பெண்களுக்கும் மஹ்ரிப்…
கம்பளை மஹவெலி ஆற்றில் காணாமல் போன முகம்மத் மனாஸ் இன் ஜனாஸா மீட்பு
மஹாவலி கங்கையில் நீராடச்சென்று காணாமல் போன கம்பளை மரியாவத்தையை சேர்ந்த 8ஆம் வகுப்பு சிறுவன் முகம்மத் மனாஸ் இன் சடலம் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற் படையினரின் உதவியுடன் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிறுவன் நீராடிய இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை ஸாஹிரா கல்லூரி மாணவன் மனாஸ் தனது நண்பர்களுடன் நேற்று திங்கட்கிழமை நண்பகல், மஹாவலி கங்கையில் நீராடச் சென்று காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. இச்சிறுவனுடன் நீரில் மூழ்கிய…
மாயமான எம்எச்370 விமானத்தை பார்த்தோம்: குடஹுவதூ தீவுவாசிகள்
மலேசிய விமானமான எம்எச் 370 மாயமாகி ஓராண்டுக்கும் மேலான நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மிகவும் குட்டித் தீவான குடஹுவதூ தீவு வாசிகள், அன்றைய தினம் மிகவும் தாழ்வாக பறந்த மிகப்பெரிய விமானம் ஒன்றை பார்த்ததாகக் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி காணாமல் போன விமானம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், குடஹுவதூ தீவு வாசிகள், அன்றைய தினம், மிகவும் தாழ்வாக…
தாய் வெளிநாட்டில்: 6 மாத குழந்தை மர்ம மரணம்: தந்தை-சித்தி கைது!
6 மாத குழந்தை ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமானமை தொடர்பில் குழந்தையின் தந்தை மற்றும் சித்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். ஹிருணி மதுமாலி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குழந்தையின் தாய் வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் குழந்தை தாயின் தங்கையிடம் வளர்ந்து வந்துள்ளது. குழந்தை திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பின் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குழந்தையின் தொண்டையில் காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின் சந்தேகநபர்கள் கைது…
புட்டிபால் புகட்டிய பிரதமர்
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வித்தியாசமான முறையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார். நண்பர்களுடன் தனது சொந்த தொகுதியான ‘விட்னி’யில் உள்ள டீன் லேன் பண்ணைக்கு அவர் சென்றார். அங்கு அண்மையில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியுடன் அவர் வெகு நேரம் செலவிட்டார். அதைக் கையில் தூக்கி கொஞ்சியும், முத்தம் கொடுத்தும் மகிழ்ந்தார். பின்னர் அந்த செம்மறி ஆட்டுக்குட்டிக்கு புட்டிப்பாலும் புகட்டினார்.
அவசரம் அவசரமாக நிறைவேற்ற முற்படுவதே பிரச்சினைக்கு காரணம்
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற முற்படுவதே பிரச்சினைகளுக்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.19வது திருத்தத்தை அவசரமாகக் கொண்டு வருவது உசிதமல்ல என தெரிவித்த அமைச்சர், கலந்துரையாடல்களுக்கு வாய்ப்பளித்து இரு தரப்பினரதும் கருத்துக்கள் பெறப்படுவது முக்கியமெனவும் இவ்விடயத்தில் அவசரமாக முடிவெடுப்பது உகந்ததல்ல என்றும் தெரிவித்தார். 19வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சித்து வருகின்ற நிலையில் ‘ஹெல உறுமய’ கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் 19வது…
மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக துணிச்சலுடன் மீள்குடியேறிய மக்கள் புதுக்குடியிறுப்பு மக்கள் – அமைச்சர் றிஷாத்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக துணிச்சலுடன் மீள்குடியேற்றத்தை சந்தித்த மக்கள் புதுக்குடியிறுப்பு மக்கள் என பாராட்டு தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணித் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் சில நாட்கள் அரசியல் பதவி இல்லைாமல் இருந்ததால் இந்த மக்களுக்கு கிடைக்கவிருந்த வீடமைப்பு திட்டத்தினையும் திருப்பி அனுப்பிய சம்பவத்தையும் காணமுடிந்ததாகவும் கூறினார். மன்னார் மாவட்டத்தில் புதுக்குடியிறுப்பு கிராமத்தில் இடம் பெற்ற அல்-ஹாபிழ் பட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு…
பாடசாலை மாணவன் விபத்தில் பலி
அப்துல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் தமிழ் மகா வித்தியாலயத்தின் வாயிற் கதவின் முன்னால் செவ்வாயன்று (o7.04.2015) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலைச் சிறுவன் பலியானதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். கிரான்குளம் தமிழ் வித்தியாலயத்தில் 2 ஆம் ஆண்டு கற்கும் கிரான்குளம் கிராமத்தைச் சேர்ந்த கே. மதுதர்ஷன் (வயது 6) என்ற சிறுவனே மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவராகும். சடலம் தற்போது ஆரையம்பதி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளைச்…
பிரதம அமைச்சரின் உலக சுகாதார தின வாழ்த்துச் செய்தி
உணவுப் பாதுகாப்பு மீதான உலகத்தின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கும் இந்த ஆண்டில் இலங்கையில் முதல் முறையாக அதற்கென பிரத்தியேகமான அமைச்சொன்றை நிறுவி இலங்கை மக்களின் உணவுப் பாதுகாப்புக்காக நடவடிக்கை மேற்கொண்டமையானது இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெற்றியாகும் என உலக சுகாதார தினத்தை முன்னிட்டு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பானது அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பைப் போன்றே முக்கிய விடயமாகும் பாதுகாப்பற்ற உணவு காரணமாக உலகில்…
யேமனில் சிக்கியிருந்த 39 இலங்கையர்களை மீட்க சீனா உதவி
கிளர்ச்சியிடம் பெற்றுவரும் யேமனில் சிக்கியிருந்த 38 இலங்கையர்கள் சீன தூதரகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இலங்கையர்கள் சீன யுத்தக்கப்பலினூடாக இவர்கள் பஹ்ரேனுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதேவேளை, கிளர்ச்சி இடம்பெறும் பகுதிகளில் இருந்து காப்பாற்றப்பட்ட 8 இலங்கையர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்க ஒத்துழைப்பு வழங்குவதாக பஹ்ரேன் அரசாங்கம் இலங்கைக்கு அறிவித்துள்ளது. கிளர்ச்சி இடம்பெற்று வரும் யேமன் தலைநகர் சனாவில் 40 இலங்கையர்களும் ஹொடிடா பகுதியில் 11 இலங்கையர்களும் சிக்கியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. யேமன்…
