News
புத்தளம் புளிச்சாக்குளம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுபத்துக்கு அமைச்சர் றிஷாத் அனுதாபம்
ஊடகப் பிரிவு புத்தளம் புளிச்சாக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஓரே குடுபத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபத்தினை அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு தெரிவித்துள்ளார். தற்போது ஜனாதிபதியுடன் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் றிஷாத் பதியுதீன் இவ் விபத்தினை கேட்டறிந்ததுடன் அங்கிருந்தே தனது அனுதாப செய்தியினை தெரிவித்துள்ளமை குறிப்பிட்த்தக்கது.
கடற்பகுதியில் கப்பல்கள் செல்லவேண்டாம்: வட கொரியா அறிவிப்பால் தென் கொரியா அலறல் -ஏவுகணை வீச திட்டமா?
தங்கள் நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கவேண்டாம் என சர்வதேச கடல் அமைப்பிற்கு வட கொரியா அறிவிப்பாணை அனுப்பியுள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது. கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணைகளை வீசுவதற்காகவே வட கொரியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தென்கொரியா அலறியுள்ளது. வரும் வியாழனன்று அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளரான அஷ்டான் கார்டர் தென் கொரியா வர உள்ள நிலையில், வட கொரியாவின் இந்த அறிவிப்பு கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளியன்று தான் பியாங்யாங்கில்…
அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய சிவில் பாதுகாப்பு படையினர் நீக்கம்
அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் சகல உறுப்பினர்களையும் அதிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான பணிப்புரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலோர பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் கடலோர பிரதேசங்களில் இன்று (06) மாலை மற்றும் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. Showers or thundershowers தென்மேற்காக 20- 30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக இக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடற்பிரதேசங்களில் அலையின் வேகம் அதிகமாக இல்லாவிட்டாலும் மழை பெய்யும் போது அழையின் வேகம்…
கஹவத்தையில் காணாமல் போன பெண்- விசேட குழு தேடுதல் பணியில்
கஹவத்த – கொடகெதன பிரதேசத்தில், காணாமல் போன பெண்ணை தேடும் பணிகள் இன்றைய தினமும் தொடரும் என காவற்துறைனர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன பெண்ணை தேடி பிரதேசத்தில், விஷேட தேடுல் நடவடிக்கைகள் முன் எடுக்கப்படுள்ளன. இதன்பொருட்டு பல காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் காவல்றையினருடன் விசேட அதிரடிப்படையினரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில், இன்றைய தினம் இராணுவத்தினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என்று காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம்…
புத்தகம் வாங்க பணம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட 9-ம் வகுப்பு மாணவன் அப்ரோஸ் ஆலம்!
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டம் கதரி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் ‘அப்ரோஸ் ஆலம்’ புத்தகம் வாங்க பணம் இல்லாமல் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவனாக இருந்தாலும், கூலித்தொழிலாளியான தந்தையால் புத்தகம் வாங்க 1500 ரூபாய் பணம் கொடுக்க முடியாததால் விரக்தியடைந்த அப்ரோஸ் ஆலம் தனக்கு தானே தீ வைத்துக் கொளுத்திக் கொண்டு இறந்து போய்விட்டான். மேற்படி தகவலை உறுதி செய்த காவல்துறை…
இதுதான் இஸ்லாம்!
சமீபத்தில் இறந்து போன சவுதி அரபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்களிடம் ஒரு புகார் செய்யப்பட்டதாம் ……..அந்த புகார் இதுதான் முஸ்லீமல்லாத பிற மதத்துக்காரர்கள் தொழுகை நேரத்தில் தெருக்களில் நின்று கொண்டு இடஞ்சல் தருகிறார்கள் இதற்கு தங்களின் ஆலோசனைப்படி புதிய சட்டம் கொண்டு வந்தால் நல்லது …..இதுதான் புகார் இதற்கு மன்னர் அப்துல்லாஹ் வின் பதில் இதோ … யார் மீதும் எந்த நிர்பந்ததமுமில்லையென்பது தான் குர்ஆனின் சொல் அதற்கேற்ப எனது நாட்டில் வாழ உழைக்க வந்த மக்களை…
அரசியல் அநாதைகளுக்கு மீண்டும் இடமளிக்காதீர்கள் – ரில்வின் சில்வா
புதிய அரசியல் பாதையை உருவாக்கும் நல்ல தருணம் தற்போது பிறந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற கூட்ட மொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: அநேக தரப்பினர் பல்வேறு கோங்களுடன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆட்சிக்கு வந்த போதிலும் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படவில்லை. அத்துடன் அரசியல் ரீதியாக அநாதைகளாக்கப்பட்டுள்ள தரப்பினர் மீண்டும் அரசியலுக்குள் பிரவே சிப்பதற்கு…
5 வருடமாக சுவற்றுக்குள் சிக்கித்தவித்த பூனைக்கு உயிர் கொடுத்த முதியவரின் பேரன்பு – வீடியோ இணைப்பு
அன்பு செலுத்துவதே அற்புதம்தான் எனினும், மனிதனுக்கு மற்ற உயிரினங்களின் மீது உண்டாகும் அன்பு ’அதீத’ அற்புதமானது. ’அங்கிள் ஆப்டோ’ என்று அழைக்கப்படும் முதியவருக்கும் ஒரு சுவற்றுக்குள் சிறைபட்டிருந்த பூனைக்குமான உறவு அப்படிப்பட்ட ஒரு அதீத அற்புதம். 2010-ம் ஆண்டு தனது பென்சன் பணத்தை வாங்கச் செல்வதற்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்த ஆப்டோ, ஒரு பூனை பசியில் கத்தும் சத்தத்தைக் கேட்டார். ஆனால் கண்ணுக்குத் தெரிந்து அங்கு ஒரு பூனையும் இல்லாததைக்…
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலி: இருவர் காயம்
புத்தளம் – புளிச்சாங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியும் லொறியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அபி பைஹினவா” ஜனாதிபதி கூறிய இரண்டு வார்த்தைகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கம் தொடர்பில் இரண்டு வார்த்தையில் கருத்து வெளியிட்டுள்ளார். “அபி பைஹினவா” என்ற இரண்டு வார்த்தைகளையே ஜனாதிபதி கூறியுள்ளார். “நாங்கள் வீழ்ச்சியடைந்துக்கொண்டிருக்கிறோம்” என்பதை பேச்சு வழக்கில் “நாம் கீழிறங்கிக்கொண்டிருக்கிறோம்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் “”நாங்கள் இறங்குவோம்”” என்று கூறுவதற்கும் இவ்வாறு அப்பி பைஹினவா” என்று சிங்கள மொழியில் கூறப்படுவதுண்டு. கடந்த வார இறுதிப்பகுதியில் இடம்பெற்ற அரசாங்கத்தின் நிறைவேற்றுசபைக் கூட்டத்தில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஊழல்கள்…
புதிய அரசாங்கத்திற்கு போதியளவு நிதி கிடைக்கின்றது: ரவி கருணாநாயக்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு போதியளவு நிதி கிடைப்பதாகவும், அந்த நிதியை ஊழலற்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஊழலற்ற புதிய நாடொன்றை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த ரவி கருணாநாயக்க, வீதி ஒன்றை அமைப்பதற்கு 10 இலட்சம் ரூபா செலவாகும் என்றால் அதற்கு 100 இலட்சம் செலவிடுவது அபிவிருத்தியல்ல எனவும் ஊழலைக்…
