Headlines

ஆசிய அபிவிருத்திக்கான ஐநா பிரதி பொதுச் செயலாளர்- நிதியமைச்சர் சந்திப்பு

ஆறுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஆசிய அபிவிருத்திக்கான ஐநா பிரதி பொதுச் செயலாளர் ஹஓலியங் ஷுவிற்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) காலை இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஐநாவுடனான உறவை மேம்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்-முன்னேறுதல் மற்றும் வாய்புக்களை ஏற்படுத்தல் என்பன தொடர்பில் அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

Read More

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாதவைகள்!

நீரிழிவு பாதிக்கப்பட்டவராக நீங்கள் இருந்தால், எதை சாப்பிடுவது, எதை விடுவது என்று குழம்ப வேண்டாம். நீரிழிவு நோயாளிகள் எவற்றை சாப்பிட வேண்டும் மற்றும் எவற்றை சாப்பிடக் கூடாது என்று கீழே விரிவாக கொடுத்துள்ளோம். சாப்பிட வேண்டியவை 01. வாழ்க்கையின் அமுதம் – தண்ணீர்’. நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் உடலில் தண்ணீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில், அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் எங்கே சென்றாலும், ஒரு பாட்டில் தண்ணீரை…

Read More

பெண்ணுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”! அமெரிக்கா பெண் பத்திரிக்கையாளர் பேட்டி!

“இஸ்லாம் ஒரு உலகலாவிய மார்க்கம். அது நீதி, விட்டுக்கொடுப்பு, கண்ணியம் என்பவற்றின் பக்கம் அழைக்கின்றது” “இஸ்லாம் பற்றி நான் வாசித்த போது அது மனிதனை சிந்திக்க வைப்பதில் கவனம் செலுத்துவதால் அதiனுடைய அழைப்பு என்னைக் கவர்ந்தது” “செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பின் என்னுடைய அதிகமான நேரங்களை அனைவர் முன்னிலையிலும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதிலேயே செலவிட்டுள்ளேன்.” “ஹிஜாப் என்னை முடமாக்கவில்லை. அது என்னுடைய சிந்தனைகள் என் மூலையைச் சென்றடைவதை விட்டும் தடுக்கவில்லை” “மேற்கத்தவர்கள் பெண்ணை ஒரு பொருளாகப் பார்த்த அதேவேளை…

Read More

முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது – பொது பலசேனா

நீதி­மன்றத் தீர்ப்பை உதா­சீனம் செய்து கூர­க­லவில் பள்­ளி­வா­சலை அமைத்­த­வர்­களை கைது செய்து சட்ட நட­வ­டிக்­கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்தும் பொதுபல சேனா பெளத்த குருமார் மீதான தாக்­கு­தலை கண்­டிப்­ப­தோடு இப் பிரச்­சினை தொடர்­பாக அரசு நியா­யத்தை பெற்றுக் கொடுக்க தவ­றி­விட்­ட­தா­கவும் தெரி­வித்­தது. இது தொடர்­பாக பொதுபல சேனாவின் நிர்­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே மேலும் தகவல் தரு­கையில், கூர­கல பிர­தேசம் 2000 வரு­டங்­க­ளுக்கு மேலாக வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க பெளத்த சின்­னங்கள் காணப்­பட்ட இட­மாகும்.இதனை தொல்­பொ­ருள் திணைக்­களம் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தோடு அங்­கீ­க­ரித்­துள்­ளது….

Read More

பாவம் காதர் ஹாஜியார்!

இரண்டு மாத கால­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நான் உயி­ருடன் இருக்­கின்­றேனா அல்­லது இறந்து விட்­டேனா என்று கூட எனது கட்­சிக்­கா­ரர்கள் எவரும் கண்டு கொள்­ள­வில்லை, என்னை எட்­டியும் பார்க்­க­வில்லை என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.ஆர்.எம்.காதர் தெரி­வித்தார். கண்­டி­யி­லுள்ள அவ­ரது செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில், கடந்த 27 வரு­டங்­க­ளாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து வரு­கின்­ற­போதும் என்னை எவரும் தேடிப்­பார்க்­க­வில்லை தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்ள அதில்…

Read More

திறந்து வைக்கப்பட்டது அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல்

-எம்.ஐ.சம்சுதீன்- குத்புனா அப்துல் வாஹித் இப்னு அப்துல் வஹாப் காதிரியத்துல் ஐதுருறுசி அவர்களின் ஆலோசனையில் உருவான இப்பள்ளிவாசல் அவரது முஹிய்மீய்ன்களால் அழகிய தோற்றத்துடன் மீள் நிர்மாணிக்கப்பட்டு அதன் திறப்புவிழாவும் முதல் ஜும்ஆ பிரசங்க நிகழ்வும் கடந்த 2015-04-01 ல் இடம்பெற்றது. அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் அல் ஹாஜ் எம்.எம்.அப்துல் ஜப்பார் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சங்கைக்குரிய அஷ்ஷேய்ஹ் அஸ்செய்யிது அப்துல் மஜீத் (மக்கத்தார் வாப்பா) கத்திரிய்யி ஜிஸ்திய்யி, நக்சபந்தி அவர்கள்…

Read More

எதிர்க்கட்சி தலைவர் யார் ? சபாநாயகர் இன்று அறிவிப்பார்

எதிர்க்கட்சித் தலைவர் யார் ? என்பது தொடர்பிலான இறுதியும் உறுதியுமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27 உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவா அல்லது தினேஷ் குணவர்த்தனவா அல்லது இரா. சம்பந்தனா? என்ற சர்ச்சை அரசியலில் தலைதூக்கியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் சுதந்திரக் கட்சியினர் இணைந்து…

Read More

மைத்திரியின் பாகிஸ்தான் விஜயம்; போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட முக்கியமான ஆறு ஒப்பந்தங்கள் இலங்கைக்கும்- பாகிஸ்தானுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு அவருக்கு பூரண அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருதரப்பு உறவுகள் தொடர்பிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, போதைப்பொருள், சுவாசக்கட்டமைப்பிற்குக் கேடு விளைவிக்கும், அவற்றை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் மூலப்பொருட்கள் போன்றவற்றை…

Read More

பூட்டான் பிரதமர் இலங்கை வருகிறார்

மூன்று நாள் விஜயமாக அவர், எதிர்வரும் வியாழக்கிழமையன்று இலங்கை வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை வரும் பூட்டான் பிரதமர், இலங்கை ஜனாதிபதி, பிரதமர் உட்பட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடவுள்ளார்.

Read More

ஊழல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி உண்மையை உலகுக்கு கொண்டுவருவோம்; மனம் திறந்தார் உபவேந்தர் இஸ்மாயில்

-நேர்காணல் முஹம்மத் அஷ்ரப்- தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசையை 16000வது இடத்தில் இருந்து 8000வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளோம். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை செய்து காட்டியவரும் சம்மாந்துறையை மையப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுபவருமான, கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். 01. கல்வி, அபிவிருத்தி மற்றும் அரசியல் விடயங்களில் தற்காலத்தில் இப்பிராந்தியத்தில் அதிகம் பேசப்படும் உங்களைப்பற்றியும் உங்களது கல்வி நிலை பற்றியும் கூறுங்கள் பதில்:- அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் பிறந்த நான், சம்மாந்துறை…

Read More

19வது திருத்தம் வருமா? வராதா? முடிவு சபாநாயகர் கையில்

19வது திருத்தச் சட்ட மூல ஆவணம் தொடர்பாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவுக்கு வந்துள்ளது. மனு விசாரணையின் தீர்ப்பு இரகசியமாக சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த சட்டமூல ஆவணத்திற்கு எதிராக 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்றைய இறுதி விசாரணையில் சட்ட மா அதிபர் கருத்து முன்வைத்துள்ளார். இந்த சட்டமூலம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படாமல் பாராளுமன்றில் மூன்று இரண்டு பெரும்பான்மை பெற்று…

Read More

இலங்கையின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம்!

வரலாற்று ரீதியாக சினோ-லங்கா உறவு தொடர்ச்சியாகப் நீடித்து வருகின்றது. இலங்கையில் விஷேட பொருளாதார வலய முறைமையை அறிமுகப்படுத்தி அதனுள் இலங்கையின் கரையோர நகரங்களை உள்வாங்கி அவற்றின் மீது விஷேட கவனம் செலுத்தி நாட்டின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம் கொண்டுள்ளதோடு, இரு நாடுகளுக்குமிடயிலான நேரடிப் பங்குடைமையை நீடிக்கவும், விருப்பம் கொண்டுள்ளது. இதனடிப்படைகளில் இலங்கைக்கு கடன் வசதிகள் வழங்க சீனா விருப்பம் கொண்டுள்ளமையை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. அண்மையில்;; ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இலங்கைக்கான இலங்கைக்கான சீன…

Read More