News
சவுதியின் யமன் யுத்தமும் முரண்நிவர்த்தியும்
(கால ஓட்டத்துடன் ஒன்றிய ராஜதந்திரங்களும் தற்காப்புக்கான நகர்வுகளும்) எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும் அதன் உடன்பாடும் எதிர்மரையும் அந்தந்த கால ஓட்டத்தின் கருத்துவயப்பட்ட நிலையில் நின்று அணுகப்படும்போதே அதன் சாத்தியநிலை காலநிலைச் சூழலை தனக்கு சாதகமாக உருவாக்கி நிற்கும்.இது அரசியலில் மட்டுமல்ல சமூக சிவில் ராணுவ ஒழுங்கிலும் பேணப்படும் ஒன்றே. யமன் ஹூதிகளுக்கு எதிரான சவுதியின் யுத்தத்தை நோக்கும் பலர் எகிப்தில் முர்சிக்கு எதிரான சவுதியின் நிலைபாட்டில் நின்றே முரண்நிலையை நிறுவ வருகின்றனர்.ஒரு நாட்டின் இரண்டு வேறுபட்ட…
ஈரானுடனான அணு ஒப்பந்தம் வருங்கால அதிபர்களுக்கு பிரச்சினை தரக் கூடியதே!:ஒபாமா
அண்மையில் ஈரானுடன் P5+1 எனப்படும் உலகின் 6 வல்லரசு நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தமானது 13 வருடங்களில் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவின் வருங்கால அதிபர்களுக்கு நிச்சயம் பிரச்சினை அளிக்கக் கூடியதே என இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா ஊடகப் பேட்டி ஒன்றின் போது ஒத்துக் கொண்டுள்ளார். செவ்வாய்க்கிமை NPR செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியின் போது ஈரானுடன் P5+1 நாடுகள் எட்டிய ஒப்பந்தமானது இனி வரும் காலத்தில் எவ்விதத்திலும் ஈரான் ஓர் அணுவாயுதத்தைத்…
துபாய் பஸ்ஸில் பயணிப்பவர் [நோல்] கார்டு பதியாமல் இனி யாரும் கல்லத்தனம் செய்யமுடியாது!(விடியோ இணைப்பு)
துபாய் பஸ்ஸில் பயணிப்பவர் [நோல்] கார்டு பதியாமல் இனி யாரும் கல்லத்தனம் செய்யமுடியாது! வீடியோ
இனி குறட்டை பிரச்னை இனி இல்லை…! Dr.வாசிம் கான்!
குறட்டை பிரச்னை இனி இல்லை…! ”என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்களும் உண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் குறட்டைப் பிரச்னை இருந்தது. ஆனால், தற்போது வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் வர…
சந்திரிகா மேடையேறி கமரா முன்நின்று பேச, யார் அதிகாரம் வழங்கியது – ஞானசாரர் கேட்கிறார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு மேடைகளில் ஏறி கமரா முன் நின்று பேசுவதற்கான அதிகாரத்தை அவருக்கு யாரும் வழங்கவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டிற்கு எத்தனை தலைவர்கள் இருக்கின்றார்கள்? சம்பிக்க, சந்திரிகா என நாட்டிற்குள் பல தலைவர்கள் இருக்கின்றார்கள். சந்திரிகா ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கியது என்று அவர் மேலும்…
தனியார் துறையினருக்கு விரைவில் சம்பள உயர்வு: பிரதமர்
* பாலுக்கு உத்தரவாத விலை * கூடுதல் நிவாரணங்கள் விரைவில் * மே முதல் புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு ‘மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 2/3 பெரும்பான்மையுடன் 10 வருடங்களில் நிறைவேற்ற முடியாதவற்றை 88 நாட்களில் மேற்கொள்ள முடிந்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் தலை சிறந்த சாதனையாகும்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய எஞ்சிய வாக்குறுதி களையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர், மக்களுக்கு மேலும் நிவாரணங்கள்…
எதிர்க்கட்சி தலைவர் தெரிவு ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இன்னும் பயின்று கொண்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று கூடியது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினரான குமார் வெல்கம, எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பில் இன்று (நேற்று) அறிவிப்பதாக ஏற்கெனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு என்ன நடந்தது…
ஏறாவூரில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு
அப்துல்லாஹ் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு நாளை (09) வியாழக்கிழமை ஏறாவூரில் இடம்பெறவுள்ளதாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை தெரிவித்தார். ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 103 மாணவர்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் புலமைப் பரிசில் நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2012 ஆம்…
தோல்விக்கு நான் இழைத்த தவறுகளே காரணம் – மஹிந்த
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய சில தவறுகளால் தோல்வியை தழுவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மக்கள் விருப்பத்தில் தற்போது நாட்டில் ஆட்சி நடைபெறவில்லை என்றும் நிறைவேற்று சபை என்பதன் ஊடாக நாடு ஆட்சி செய்யப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுனாமி நிவாரண மோசடி – டிரான் அலஸ் வௌிநாடு செல்லத் தடை!
கடந்த சுனாமி அவல காலத்தில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவென கூறி ´ராதா´ என்ற நிறுவனத்தின் ஊடாக நிதி மோசடி செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினால் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸிற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சம்பவம் வருமாறு, கடந்த சுனாமி அவல காலத்தில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவென கூறி அப்போதைய ஜனாதிபதி அலுவலகத்தில் அனுமதி பெற்று ´ராதா´ என்ற நிறுவனம் 2006இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன தலைவராக டிரான் அலஸ் செயற்பட்டுள்ளார்….
பாகிஸ்தானில் இடம் பெற்ற வர்த்தக உடன்படிக்கை மற்றும் கலந்துரையாடல்
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன தலைமையிலான அமைச்சர்கள் பாகிஸ்தானில் இடம் பெற்ற வர்த்தக உடன்படிக்கை மற்றும் கலந்துரையாடல்களின் போது எடுக்கப்பட்ட படம். பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னுான் ஹூசைனில இஸ்லாமாபாத்தில் அளிக்கப்பட்ட விருந்துபசாரத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, றிஷாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பவூசி உட்பட ஏனையவர்களையும் படங்களில் காணலாம்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுபாய் வங்கியொன்றிடம் அடகு வைப்பு
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுபாய் வங்கியொன்றிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டுபாய் மஸ்ரேக் வங்கியில் 23079 மில்லியன் ரூபா பிணைக் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திறைசேரி பிணையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் கடனானது அடகுக் கடனுக்கு நிகரானது என தெரிவிக்கப்படுகிறது. டுபாய் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் அடகுக் கடனுக்கு நிகரானது என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2014ம் ஆண்டு நிறைவில் செலுத்தப்படாத கடன்…
