News
19வது திருத்தம் குறித்து ஆராய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்
19வது அரசியல் யாப்புத் திருத்த யோசனை தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்துவது குறித்து ஆராய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று (09) காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது 19வது திருத்தச் சட்டம் குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவில் 19வது திருத்தம் குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்துவது…
ஞானசாரவை பற்றி கோத்தபாயவிடம், நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை – மஹிந்த ராஜபக்ச
சிறுபான்மை மக்களின் வாக்குகள் தனக்கு கிடைப்பதை தடுத்து தன்னை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரே முற்றும் முழுவதுமான சூழ்ச்சியை செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது எல்லாம் முடிந்து விட்டது எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி ஆத்திரமடைந்து கத்தியதாக கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 9ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நேரத்தில் தான் தோல்வியடைய…
நாகூர் ஈ.எம். ஹனிபா காலமானார்
தென்னிந்தியாவைச் சேர்ந்த நாகூர் ஈ.எம். ஹனிபா உடல்நலக் குறைவு காரனமாக சென்னையில் நேற்று (08) காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 90. இஸ்லாமிய கீதம் என்ற பெயரில் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்ற நாகூர் ஹனிபா, தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இன்று சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபாவின் உயிர் பிரிந்தது.
கத்தாரில் 6 கோடிக்கு மேல் ஏலம் போகும் பேன்சி கார் நம்பர்
வாகனத்திற்கு பேன்சி நம்பர் வைத்திருப்பது சமூகத்தில் தனக்கிருக்கும் அந்தஸ்தை நிரூபிக்கும் செயலாக உள்ள நிலையில், எண்ணெய் வளம்மிக்க கத்தாரில், 24 தனித்த அடையாளம் கொண்ட கார் நம்பர்களுக்காக, அரசுத் துறை ஆன்லைன் ஏலத்தை நடத்தி வருகிறது. இதில் கலந்து கொள்ளும் கத்தார் பணக்காரர்கள் மில்லியன் கணக்கில் ஏலம் கேட்பதால் இணைய ஏலம் களை கட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கிய ஏலம் இன்று இரவு வரை நடைபெறவுள்ள நிலையில். நேற்று ’377773’ என்ற பேன்சி கார் நம்பர்,…
யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் ஏற்பாட்டில் 30 வருடங்களிற்கு பின் இன்கிலாப் சஞ்சிகை
பாறுக் சிகான் யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் ஏற்பாட்டில் 30 வருடங்களிற்கு பின் இன்கிலாப் சஞ்சிகை வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதுடன் விவசாய பீட பீடாதிபதி கலாநிதி திருமதி.எஸ்.சிவசந்திரன் ,கலைப்பீட பீடாதிபதி வி.பி சிவநாதன் ,பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி.எ.அற்புதராஜ்,வணிக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் ரி.வேல்நம்பி,மருத்துவ…
அரச தொலைக்காட்சி விருது 2015 வழங்கும் நிகழ்வு
அஸ்ரப் ஏ சமத் அரச தொலைக்காட்சி விருது 2015 வழங்கும் நிகழ்வு நேற்று இரவு காலச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்தமித்த எக்கநாயக்க தலைமையில் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வை அரச கலாச்சாரத் திணைக்களம் இவ்வருட விருது வழங்கள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. நாட்டில் உள்ள 10 தொலைக்காட்சிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. தொலைக்காட்சி நாடகங்கள், விளம்பரம்ஙகள், சிறந்த நடிகை, நடிகர், சிறந்த நிகழ்ச்சிகள் சிறந்த செய்தி வாசிப்பவர்கள். சிறுவர் நிகழ்ச்சிகள்…
இலங்கையின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம்!
முனவ்வர் காதர் வரலாற்று ரீதியாக சினோ-லங்கா (Sino-Lanka) உறவு தொடர்ச்சியாகப் நீடித்து வருகின்றது. இலங்கையில் விஷேட பொருளாதார வலய முறைமையை அறிமுகப்படுத்தி அதனுள் இலங்கையின் கரையோர நகரங்களை உள்வாங்கி அவற்றின் மீது விஷேட கவனம் செலுத்தி நாட்டின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம் கொண்டுள்ளதோடு, இரு நாடுகளுக்குமிடயிலான நேரடிப் பங்குடைமையை நீடிக்கவும், விருப்பம் கொண்டுள்ளது. இதனடிப்படைகளில் இலங்கைக்கு கடன் வசதிகள் வழங்க சீனா விருப்பம் கொண்டுள்ளமையை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. அண்மையில்;; ஏற்றுமதி அபிவிருத்தி சபையில்…
எக்ஸ்போ மிலோனோ 2015′ வர்த்தக சந்தை
இத்தாலியில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மாபெரும் ‘எக்ஸ்போ மிலோனோ 2015′ வர்த்தக சந்தையில் இலங்கை கலந்துகொள்ளவதுடன் தனது சர்வதேச தரம் வாய்ந்த உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தயுள்ளது. இக்கண்காட்சியில் நூற்றுக்கும் அதிகமான இலங்கை ஏற்றுமதியாளர்கள் கலந்துக்கொண்டு தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துவர். இச்சர்வதேச சந்தையில் 20 மில்லியன் பார்வையாளர்கள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை தீர்மானம் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகம் , இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை வர்த்தக திணைக்களம் மற்றும்…
பாணந்துறை நகரசபையில் மோதல் : மூவர் காயம்
பாணந்துறை நகரசபையில் நகரசபை உறுப்பினர்களுக்கும் உழியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் நகரசபை உறுப்பினர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்திர சிகிச்சையின்போது மின்சாரம் துண்டிப்பு – நோயாளியொருவருக்கு பாதிப்பு
எம்.ஐ.அப்துல் நஸார் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவில் சத்திர சிகிச்சையொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பற்றரியின் உதவியுடன் குறித்த சத்திர சிகிச்சையினை தொடர்ந்து மேற்கொண்ட போதிலும் மேலும் 40 நிமிடங்கள் வரையிலேயே அந்த பற்றரி இயங்கக்கூடிய சக்தியை கொண்டிருந்ததாகவும் சத்திர சிகிச்சையின் பின்னர் இயந்திர சாதனங்களை இயக்குவதற்கு மின்சாரம் இல்லாமலிருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக மின் பிறப்பாக்கி மூலமோ அல்லது வேறு வகையிலோ நோயாளியின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை…
அரச மரியாதையுடன் இலங்கைக்கு கொண்டு வரப்படும் பூதவுடல்..
மறைந்த அஸ்கிரிய பீட மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12ம் திகதி அஸ்கிரிய பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகயீனமுற்றிருந்த நிலையில் சிங்கப்பூர் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் இன்று அதிகாலை காலமானார். அவரது பூதவுடலை அரச மறியாதையுடன் இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்பில் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ விசேட பிரதிநிதியாக இன்று காலை…
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்களை அணிந்திருந்த நான்கு கொள்ளையர்கள் கைது
பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் அணிந்திருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, ஹிக்கடுவ பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற கொலைச் சம்பவம் மற்றும் தெஹிவளை அத்திடிய தனியார் வங்கி கொள்ளை, பிலியந்தல, அத்துருகிரிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டோர் தலைகவசங்களை அணிந்தே கொள்ளையிட்டுள்ளனர். கடந்த வருடத்தில் மாத்திரம்…
