News
இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாகவே எமது ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கான இவ்விஜயம் அமைந்தது -அமைச்சர் றிஷாட்
சார்க் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகும். இந்நிலையில் இலங்கை- பாகிஸ்தான் நாடுகளுக்குமிடையில் உள்ள இராஜதந்திர உறவுகள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாகவே எமது ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கான இவ்விஜயம் அமைந்தது. . ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோக பூர்வ சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 05ம் திகதி ஆரம்பித்தார். அவருடன் சென்றவர் என்றவகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இப்பயணம் குறித்து கொழும்பில் வைத்து…
ஒரு மணித்தியாலம் மட்டுமே உறங்குவேன்! சம்பள பணமும் வழங்கப்படுவதில்லை!- 18 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய பெண் தெரிவிப்பு
பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன் என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவதி தெரிவித்தார். சவூதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் 18 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த ஆர். பிரேமவதி என்னும் இலங்கை பணிப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பிரேமவதிக்கு 18 வருட காலத்திற்கும் கிடைக்க வேண்டிய சம்பள பணமாக 18 லட்சம் ரூபா காசோலையினை அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று வெளிநாட்டு…
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிய பிரிவுகளை நீக்கத் தயார்: அரசாங்கம்
19ஆவது திருத்த சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ள பிரிவுகளை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 19ஆவது திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே பிரதமர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார். குழுநிலை விவாதத்தின் போது, அவற்றை அரசாங்கம் நீக்கிகொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
’19ஆவது திருத்தத்தில் சிலவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்’
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 19ஆவது திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் அறிவித்தார்.
19ஆவது திருத்தம் 20ஆம் திகதி சமர்பிக்கப்படும்
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
யெமனிலிருந்து இலங்கையர்கள் மீட்டெடுப்பு!
யெமனில் உள்ள இலங்கையர்கள் 54 பேர் அரசாங்கத்தின் உதவியுடன் அங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். யெமனில் தற்போது கிளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்குள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பணி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் 3 இலங்கையர்கள் இந்தியாவுக்கும் 03 இலங்கையர்கள் இந்தோனேஷியாவுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 06 ஆம் திகதி ஏனைய 43 இலங்கையர்கள் சீன வாகனத்தின் உதவியுடன் டிஜிபௌரி இடத்திற்கும் மீட்டெடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் 5 இலங்கையர்கள் யெமனிலிருந்து ஓமானுக்கு சென்றனர்…
பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இன்று முதல் இலவச Wi-Fi வசதி
அரசாங்கத்தின் இலவச இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் இலவச Wi-Fi வசதி இன்று (09) பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கை தொலைதொடர்புகளை சீரமைக்கும் ஆணைக்குழுவின் தலைமையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 100 MB இணையதள வசதியை மாதாந்தம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு
ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து சுருங்கிவிட்டது. உடலை அசைக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல்…
‘போதைப் பொருளுக்கு எதிரான யுத்தத்தில் 176 பள்ளிவாயல்கள் இணைகிறது’. சிங்கள மொழி ஊடகங்களும் வரவேற்பு.
தேசிய போதை கட்டுபாட்டு சபை மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சங்கம் மற்றும் அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஆர்பாட்டம் ஒன்றை நாளை கொழுப்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாள் மலை நான்கு மணி தொடக்கம் ஆறு மணிவரை நடத்தவுள்ளது அறிந்ததே.. இது தொடர்பில் இந்த நடவடிக்கையை வரவேற்று சிங்கள மொழிப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய லங்காதீப பத்திரிகளில், போதைப்…
போர் முனையிலும் தொழுகையை மறக்காதசவூதி இராணுவ வீரர்கள்!
சவுதி அரேபியாவின் தெர்கு எல்லைகள் தான் ஏமனோடு இணைந்திருக்கிறது. அங்கு தர்போது போர் சூழல் நிலவுகிறது போர் சூழலுக்கு இடையேயும் தொழுகை நேரம் வரும் போது இராணுவ வீரர்கள் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக தொழுகையை நிறைவு செய்து விடுகின்றனர்
அஸ்கிரிய மகாநாயக்கர் மறைவு: அமைச்சர் றிஷாத் அனுதாபம்
அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரகித்த தேரர் சிங்கப்பூரில் தங்கியிருந்த வேளை காலமாகியுள்ளார். அஸ்கிரிய பீடத்தின்தியவதன நிலமே இத்தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மறைந்த அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரகித்த தேரர் சுகயீனம்காரணமாக சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே காலமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன் இவர்கடந்த ஒரு மாதகாலமாக உடல்நிலை சீராகயில்லாததால் குறித்த இவ்வைத்தியசாலையிலேயே தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்ததாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் சமய சுதந்திரத்தை…
நான் இணக்க அரசியலையே விரும்புகிறேன் ;அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் சிறப்புப் பேட்டி
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் நான்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜெமீல் உங்களைச் சந்தித்து பேசிய விடயங்கைள கூற முடியுமா? ரிஷாத் பதியுதீன்:- ஆம், அவர் என்னைச் சந்தித்தார். கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலவராக செயற்பட்டார். அதன் பின்னர் இரண்டரை வருடங்கள் திருகோணமலையைச் சேர்ந்த நஜீப் ஏ. மஜீத் கிழக்கு முதல்வராக இருந்தார். இப்போது எனக்கு தருவதாக கூறிய எமது தலைவர் என்னை ஏமாற்றி விட்டார்….
