News
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் தடை!
கொழும்பில் அமைந்துள்ள லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்த கொழும்பு பிரதான நீதவான் தடை விதித்துள்ளார். பொலிஸ் தரப்பு முன்வைத்த அறிக்கை ஒன்றை அடுத்து நீதவான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு எதிராக இன்று (23) காலை 08.30 – 09.30 மணிவரை ஆணைக்குழு முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பிவிதுரு ஹெல உருமய…
ஜோதிடரை நம்பி ஜனாதிபதி தேர்தலை நடத்தியமைக்காக கவலையடைகின்றேன்-முன்னால் ஜனாதிபதி
ஜோதிடரின் பேச்சைக் கேட்டு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்தியமையையிட்டு தற்போது கவலையடைகின்றேன். தற்போது நான் ஜோதிடர்களை நம்புவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது. எனவே நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்காக விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிட்டுள்ளார். ஏ.எப்.பி. செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;அரசாங்கம் எனது குடும்பத்தினருக்கு…
பேஸ்புக் மூலமாக அச்சு அசல் தன்னைப் போலவே இருக்கும் பெண்ணைக் கண்டுபிடித்த தேவதை-வீடியோ இணைப்பு
‘ஒரே மாதிரி 7 பேர் இந்த உலகத்துல இருப்பாங்களான்னு தெரியாது. ஆனா உங்கள அப்புடியே உரிச்சு வச்சா மாதிரி ஒருத்தர் நிச்சயம் இருப்பார். அதுவும் நீங்க இருக்குற இடத்துக்கு சில மைல் தூரத்திலேயே அவர் இருப்பார்’ என்பதுதான் ஐரீஷ் நாட்டு தேவதை நியாம் நமக்கு சொல்ல வரும் செய்தி. டப்ளின்னைச் சேர்ந்த 26 வயது நியாமுக்கு தன்னைப் போலவே இந்த உலகில் யாராவாது இருக்கிறார்களா? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் வெகு நாட்களாகவே இருந்து வந்தது. அதைக்…
புதிய குலோரின் களஞ்சியசாலை அமைச்சர் றிஷாதினால் திறந்து வைப்பு (photos)
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனால் பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவனத்தின் புதிய குலோரின் களஞ்சியசாலை ஹோரன கைத்தொழில் வலத்தில் நேற்று 22/04/2015 திறந்துவைத்தார். இவ்வைபவத்தில் பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவனத்தின் தலைவர் Dr.S.L.M றமீஸ் மற்றும் ஊழியர்கள் உற்பட பலர் கலந்துகொண்டனர்.
கெஹலிய உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை….!
முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை உற்பட மூவருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றுக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தனத்துக்கு கொள்ளவனவு செய்யப்பட்ட பைப் வகை ஒன்றில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஊழல் மோசடி பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த முறைப்பாட்டின் பேரில் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலபிட்டிய இன்று இவ் அழைப்பாணையைப் பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர் தவிர அப்போது இருந்த ரூபவாகினி கூட்டுத்தாபன தலைவர் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோர் எதிர்வரும் 20 ஆம்…
நாளை பாராளுமன்றம் கலைக்கப்படுமா? நாளை இரவு 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால நாட்டு மக்களுடன் உரையாடுகிறார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (23) இரவு 9.00 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி,ஔிபரப்பு செய்யப்படவுள்ளது.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைத்தால் எந்தவொரு இலங்கை பிரஜையும் செல்ல கடமைப்பட்டுள்ளனர்
பிரதி வெளிவிவகார அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க வருமாறு ஆணையிடப்பட்டால் இந்நாட்டில் எந்தவொரு பிரஜையும் வருவதற்கு கடமைப்பட்டுள்ளனர். முடியாது என்று சொல்வதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் இல்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – இலங்கையிலுள்ள பௌத்த குருமார்கள்- கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட அனைத்து மத போதகர்கள் உட்பட…
பாராளுமன்றை கலைத்து தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய பாராளுமன்றத்தை உருவாக்கி, ஜனாதிபதி தேர்தலில் நாம் பெற்றுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளனர். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும்,…
பம்பலப்பிட்டி பெண் கொலை: இருவர் கைது
பம்பலபிட்டி சென்.பீட்டர்ஸ் கல்லூரியில் பணியாற்றிய 44 வயதான பெண் ஊழியரின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மேற்படி பாடசாலையின் காவலாளி எனவும் மற்றையவர் பாடசாலைக்கு வந்து செல்பவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். பாடசாலையின் களஞ்சிய அறையிலிந்து அந்த பெண்ணின் சடலம் ஏப்ரல் 19ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
யெமன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் சவூதி இளவரசர் ஆறுதல்!
யெமனி ல் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையில் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின. இதற்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சவுதி அரேபியா இளவரசர் பைசல் பின் காலித் மருத்துவமனைக்கு சென்று…
ஜித்தா -மக்கா -மதினா புனித நகரங்களுக்கிடையே அதிவேக ரயில் Haramain எக்ஸ்பிரஸ் தயார் நிலையில் உள்ளது!
அதிவேக ரயில் ஜித்தா மூலம் மக்கா மதீனா இணைக்கும் மற்றும் மதீனாவிற்க்கும் Rabigh சென்றடைகிறது. “ஒத்திகை 300 கி.மீ. ஒரு மணி நேரம் அடையும் ஒரு வேகத்தில் கோடை வரை தொடரும்,” சவுதி ரயில்வே அமைப்பு (SRO:) முகம்மது அல்-Suwaiket தலைவர் கூறினார். அவர் முதல் ரயில் ஏற்கனவே இரண்டு ஓடிவரும், 417 பயணிகள் மற்றும் ஒரு pantry கார் வரை இணங்கிப் 13 வண்டிகள் கொண்ட இராச்சியம் வந்து கூறினார். “இந்த ராஜ்ய வரலாற்றில் மிகப்பெரிய…
துபையில் டிராபிக் விதிகளை மீறாத 2 டிரைவர்களுக்கு புத்தம் புதிய கார்களை பரிசளித்த துபாய் போலீஸ்.!
துபாய்: கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிய இருவருக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக அளித்து பாராட்டியுள்ளது துபாய் போலீஸ். போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு புத்தம் புதிய காரை பரிசாக அளிக்கும் ஒயிட் பாயிண்ட் சிஸ்டம் என்ற திட்டத்தை துபாய் போலீசார் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனம் ஓட்டியவர்களின் பெயர்கள் ஒரு பெட்டிக்குள்…
