News
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்டநடவடிக்கை ; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
நீதிமன்ற உத்தரவை மதிக்காது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த நபர்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்ட நிலையில், அதனை மீறி பிக்குகள், அரசியல்வாதிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோத்தாபய ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு…
பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை இணைத்து ஆதரவு பெற்றோம் :ஜனாதிபதி பெருமிதம்
இலங்கையால் சர்வதேசமே இரண்டாகப் பிளந்தது.ஆனால் நாம் கடைபிடித்த பிளவுபடாத வெளிநாட்டுக் கொள்கையினூடாக பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை ஒன்றிணைத்து அவற்றின் ஆதரவை பெற்றுக் கொண்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசின் 100 நாள் திட்டம் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் விசேட உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், நான் ஜனாதிபதியாகப் பதவியேற்று 100…
19ஐ நிறைவேற்ற வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் அரசுக்கு எதிராக போராடவும் மக்கள் விடுதலை முன்னணி தயாராகி வருவதாகவும் தெரிவிக்கின்றது. ஜனாதிபதி முறைமையினை நீக்கி அதிகார பரவலாக்கம் 19ஆவது திருத்தச் சட் டம் நிறைவேற்றுவதில் இழுபறி நிலைமை எழுந்துள்ள நிலையில் அடுத்த பாராளுமன்ற அமர்வில் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனக்…
மே 1ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 5000 ரூபா மஹாபொல கொடுப்பனவு
பல்கலைக்கழக மாணவர்களுக்கான அதிகரிக்கப்பட்ட ரூபா 5000 மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண் டே மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலி திட்டங்களை முன்னெடுத்தாரென்றும் அமைச்சர் தெரிவித்தார். மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் 22ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு றோயல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள தூபி அருகில் நடைபெற்ற லலித் அத் துலத்முதலியின் நினைவு…
சுவிஸ் வங்கியில் உள்ள 92 இலங்கையர்களின் இரகசியக் கணக்குகள்.. அம்பலப்படுத்த இலங்கை வரும் சுவிஸ் நிபுணர்
இலங்கையர்களால் சுவிஸ் வங்கியில் இரகசியமாகப் பேணப்பட்டுவரும் வங்கிக் கணக்குகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் சுவிஸ் நிபுணர் க்ரெட்டா பெனர் இலங்கை வந்திருப்பதாகத் தெரியவருகிறது. சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் இலங்கை விடுத்த கோண்டுகோளுக்கு இணங்க இவர் இலங்கை வந்துள்ளார். 92 இலங்கையர்கள் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகளைப் பேணி வருவதாக சுவிஸ் வங்கி கோப்புக்களை ஆதாரங்காட்டி புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் குறித்து அரசு…
ACMC யின் முயற்சியில் கல்முனை சாஹிராக் கல்லூரிக்கு நிர்வாகக் கட்டிடமும், சம்சுலுல் வித்தியாலயத்திற்கு கேட்போர் கூடமும்
அஸ்ரப் ஏ சமத் நேற்று முன்தினம் கல்வியைமச்சர் அகிலவிராஜ் காரியவாசம் சந்திப்பின்போது அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் ஆகியோர்களினால் மேற்படி பாடசாலைகளது புதிய கட்டிடங்கள் நிர்மாணிப்பதற்கு கல்வி அமைச்சர் ஏற்றுக் கொண்டார். என வை.எல். எஸ் ஹமீட் தெரிவித்தார். கல்முனை சாஹிராக் கல்லூரி மற்றும் மருதமுனை சம்சுலுல் ஆகிய பாடசாலைகள் சமுகத்திற்கு செய்கின்ற பங்களிப்பு தொடர்பாகவும் அதே நேரம் அப்பாடசாலைகளில் நிலவுகின்ற பௌதீக வளக் குறைபாடுகள்…
ஜனாதிபதியின் விஷேட உரை
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய அரசாங்கம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பு கோட்டைப்பகுதியிலும் படையினரின் நடவடிக்கைகளுக்காக காணிகள், கட்டடங்கள் கையடகப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் இன்று அவை திருப்பிக் கொடுக்கப்படுகின்றன. எனவே இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வண்ணம் சில அரசியல்வாதிகள், விடுதலைப்புலிகள் குறித்த கருத்துக்கள் உட்பட்ட பொய்களை ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளும் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். சிங்கள மக்களை…
இரு நாட்கள் மாவட்டச் செயலாளர்களது மீளாய்வுச் செயலமர்வு
ASHRAFF SAMAD புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இரு நாட்கள் மாவட்டச் செயலாளர்களது மீளாய்வுச் செயலமர்வு ஒன்றை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று கொழும்பில் ஆரம்;பதித்து வைக்கபட்டது. இச் செயலமர்வு நேற்றும் இன்றும் இரு நாட்கள் நாட்டில் உள்ள சகல மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்கின்றனர். இன்று இச் செயல்மர்வினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜேசப் மைக்கல் பெரேரா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும்…
படை பட்டாளங்களுடன் வந்து நான் செயற்பட விரும்பவில்லை -ஜனாதிபதி
ஏ.எஸ்.எம்.ஜாவித் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்கும் முதலாவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் ஏற்பாட்டில் இன்று (23) மாலை கொழும்பு விகாரமகா திறந்த வெளியரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவின் தலைமையில் இடம் பெற்றது. இதன்போது அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்த, நிமால் சிறிபாலடி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, அத்ரலிய ரத்னதேரர், மற்றும் சோபித தேரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்….
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்: வாழைச்சேனையில் சம்பவம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்டகாலமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் அடங்கிய குழுவினரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (22) காலை 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை, மீறாவேடை, கிண்ணயடி, மாஞ்சோலை, கறுவாக்கேணி போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்று வந்ததையடுத்து வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகேயின் ஆலோசனையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.திப்புட்டுமுனயின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி…
அல்-ஜசீரா டி.விக்கு இந்தியஅரசு தடை!
இந்தியாவின் தவறான வரைபடத்தை அல் ஜசீரா சேனல் கட்டியதாக குற்றம் சாட்டப் பட்டே அல் ஜசீரா டிவிக்கு இந்திய அரசு 5 நாள் தடையை விதித்துள்ளது. இதனால், அல் ஜசீரா டிவி இந்தியாவில் தற்போது தெரியவில்லை. அல் ஜசீரா டிவி சானல் ஒளிபரப்பாகும் எண்ணில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறையின் உத்தரவுப்படி இந்த சேனல், ஏப்ரல் 22ம் தேதி 00.01 மணியிலிருந்து 2015, ஏப்ரல் 27ம் தேதி 00.01 வரை ஒளிபரப்பப்பட மாட்டாது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது….
இத்தாலியில் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல்
எதிர்வரும் 3/5/2015 அன்று மிலானோ நகரில், வியா கொஸ்ஸன்ஸா 2 என்ற முகவரியில் அங்குரார்ப்பணம் செய்யபட உள்ளது. இலங்கை முஸ்லிம்களின் நீண்டகால கனவாக இருந்தது.அல்லாஹ்வின் உதவியுடன் இது நிறைவு பெறுகிறது, மாஷாஅல்லாஹ். இதுவே இத்தாலியில் துவங்கப்படும முதல் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஆகும். இம்முயற்சில் பல சகோதரர்களின் அயரா முயற்ச்சியுடன்,குறிப்பாக தலைவர்,செயலாலர் உட்பட நிர்வாக்க்குழுவினர் அல்லாவுக்காக பாராட்டப்பட வேண்டியவர்கள். சகோதரர்கள் இம்முயற்சியில் ஒற்றுமையாக முன்னேற உங்கள் அணைவரினதும் துஆவை எதிர்பார்க்கிறோம்.
