News
நாடாளுமன்றத்திற்கு செல்ல பசிலுக்கு மன்று அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவை, அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்குமாறு கடுவெல நீதிமன்ற நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் பசில் மற்றும் மூவர் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் பசிலை நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்குள்ள அனுமதியளிக்குமாறு சிறைச்சாலை வட்டாரங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரும்…
வெலிகடை சிறைச்சாலையில் கோட்டா?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு இன்று சமூகமளித்தார். அங்கு வாக்குமூலமொன்றை அளித்த அவர் பின்னர் அங்கிருந்து வெளியேறி , முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸவை சந்திப்பதற்கு அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்குமுன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட து. இதில் கோத்தபாயவின் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கோட்டாபயவுக்கு காலஅவகாசம்
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்படி தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிக்க 90 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கோட்டாபய கோரியதாகவும், அதற்கு ஆணைக்குழு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூல ஆவணத்தை அவசர பத்திரமாக பிரதமர் முன்வைத்ததாக அவர் கூறினார். அதன்படி விரைவில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உம்ரா செய்ய சவூதிக்கு வந்த ஒபாமாவின் பாட்டியும் மாமாவும்!
– நூருல் இப்னு ஜஹபர் அலி – அமேரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மற்றும் ஒபாமாவின் மாமா சயீத் ஒபாமா ஆகியோர் புனித உம்ராவை நிறைவேற்றுவதற்க்காக சவூதி அரேபியா வந்துள்ளனர். மேலும் மக்காவில் நடைபெற்று வரும் முஹம்மது நபி குறித்த கண்காட்சியை 2 மணி நேரம் பார்வையிட்ட சாரா உமர் கண்காட்சி மிகவும் அருமையாக இருந்ததாகவும் இஸ்லாத்தை மக்கள் மத்தியில் அதிகம் பரப்புவதற்க்கும் இஸ்லாம் குறித்த குழப்பங்களை போக்குவதற்க்கும் இது போன்ற கண்காட்சிகள்…
குறுகிய நேர விசாரனையின் பின்னர் வீடு திரும்பிய கோத்தா…!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வாக்குமூலம் வழங்க இலஞ்ச ஊழல் திணைக்களத்தை வந்து குறிகிய நேரத்தில் விசாரணைகளை முடித்துக்கொண்டு திரும்பியதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார். இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக, நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டும் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் செய்து வருவதாகவும்வ இதனால், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக உள்ள வீதி மூடப்பட்டுள்ளதுடன் போலிசார் குவிக்கபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்…
வடமாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள தபால் துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சர்
மன்னார் நிருபர் தபால்துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்கள் எதிர்வரும் மே மாதம் 10 ம் திகதி அளவில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்ய உள்ளதோடு வடமாகாண பள்ளிவாசல்கள் நிர்வாகிகள், பரிபாலனசபை தர்மகர்த்தாக்கள் மத்ரசா நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும் தபால்துறை முஸ்லிம் கலாசார அமைச்சரின் வடமாகாணத்துக்கான இணைப்பாளரும், வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைவருமான மெளலவி ஏ.எஸ்.எச்.எம். முபாரக் ரஷாதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் வாக்கு சரிவு!
மகிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலில் பெற்றிருந்த 58 லட்சம் வாக்குகள் தற்போது குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது மகிந்தராஜபக்ஷவின் 20 லட்சம் வாக்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது மக்கள் முன்னைய அரசாங்கத்தின் உண்மையான முகத்தை அறிந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பள்ளிவாசல் மாற்றம்
குருநாகலில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றி வேறு இடம்மொன்றில் அமைக்கவிருப்பதாக, அமைச்சர் நந்தமித்தர ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளது. அந்த பள்ளிவாசலுடன் இணைந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் தொல்பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிவாசலை அகற்றுமாறு சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தன. இதன் போது அந்த அமைப்புக்கு எதிராக காவற்துறையினர் தாக்குதல் நடத்தி கலைத்திருந்தனர். தற்போது…
புதிய தேர்தல் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்
புதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம்
100 நாள் திட்டத்தை முழுமையாக நாம் நிறைவேற்றியுள்ளோம்
மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் முழுமையாக நிறைவடைந்ததுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை செய்து காட்டி விட்டோம் என அரசாங்கம் தெரிவித்தது. 19ஆவது திருத்தம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அதையும் நிறைவேற்றிவிட்டு பொதுதேர்தலுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்; நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய நூறு நாட்கள் வேலைத்திட்டத்தினை முழுமையாக முடித்துவிட்டோம்.நாம் மக்களின் வாழ்வாதார…
சற்றுமுன் கோத்தாபாய இலஞ்ச ஊழல் திணைக்களத்தை வந்தடைந்தார். நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்பாட்டம். (படங்கள்)
சற்றுமுன் கோத்தாபாய ராஜபக்ச இலஞ்ச ஊழல் திணைக்களத்தை வந்தடைந்துள்ள நிலையில் இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டும் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் செய்து வருவதாக தெரிய வருகிறது. இதனால், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக உள்ள வீதி மூடப்பட்டுள்ளதுடன் போலிசார் குவிக்கபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
