News
பாலைவன நிலத்தில் கிடைத்த வெற்றி… கத்தார் தலைநகர் தோஹாவில் நெல் அறுவடைக்குத் தயார்.
அபூ சுமைய்யா கேரள விவசாய ஆர்வலர்களால் Al Dosari Park shahaniya வில் சிறிய நிலப் பரப்பில் முதலாவதாக செய்யப் பட்ட நெற் பயிர் செய்கை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நெற் பயிர் செய்கை நீர் வளமுள்ள நிலத்திலே (water rich soil ) செய்கை பண்ணப் படுவது வழக்கம் இவர்கள் பாலைவன நிலத்தில் வெற்றிகரமாக நெற் பயிர் செய்து வெற்றி கண்டிருகின்றார்கள்.
12 ஆயிரம் கால்பந்து ரசிகர்களுக்கு கப்பலில் அடைக்கலம் தருகிறது கட்டார்
வரும் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமாக நடத்த கத்தார் அரசு ஏற்பாடுகளை இப்போதிருந்தே ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இந்த போட்டியை காணவரும் ரசிகர்களுக்காக மிதக்கும் ஓட்டல்களை அமைக்க பலரும் ஐடியா கொடுத்த போது முதலில் அதை நிராகரித்து விட்ட கத்தார் அரசு இப்போது மீண்டும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, போட்டியை காணவரும் 12 ஆயிரம் கால்பந்து ரசிகர்களுக்கும் மிதக்கும் பிரம்மாண்ட கப்பல்களில் அடைக்கலம் அளிக்க…
அமெரிக்காவில் கைத்துப்பாக்கியால் கம்ப்யூட்டரை சுட்டுக் கொன்ற மனிதன்
விசித்திரங்களின் தாய் நாடான அமெரிக்காவில் மற்றுமொரு விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலரடோ மாநிலத்தில் கைதுப்பாக்கியால் கம்ப்யூட்டரை சுட்டுக் கொன்ற மனிதனை(?) போலீசார் பிடித்து வைத்துள்ளனர். கொலரடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறையால் ‘கம்ப்யூட்டரைக் கொலை செய்த மனிதன்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த திங்கள் அன்று கொலரடோ நகர்ப்புற எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லூகாஸ்(37) என்ற நபரைப் பிடித்து…
புள்ளிவிபரத்திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு!
யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரசிங்க மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோர் இணைந்து புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவு இயங்கிய கட்டடத்திலேயே புள்ளி விபரத் திணைக்களத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய கட்டடத் திறப்பு விழாவின் பின்னர் புள்ளி விபரத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் …
சிறுவர்களை பாதுகாக்க கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்!
திருமலை அரசாங்க அதிபர் திருகோணமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் 21.04.2014 மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. சிறுவர்களின் நலன்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதுடன் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் சகலரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார நேற்று (21) தெரிவித்தார். அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற திருமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்திலலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்…
தொழிற்சந்தையும் கல்வி கண்காட்சியும்!
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு நடத்தும் தொழிற் சந்தையும் கல்விக் கண்காட்சியும் 2015 ஆம் ஆண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இத் தொழிற்சந்தையில் தொழில் மற்றும் தொழிற்பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள் தங்களது சுய விபரக் கோவையுடன் இத் தொழிற்சந்தையில் கலந்து கொள்ளுமாறு…
தாமரை கோபுரம் இந்தியாவை கண்காணிக்கும் திட்டம் அல்ல – சீனா மறுப்பு
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தியை சீனா நிராகரித்துள்ளது. இது ஒரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என தாமரை கோபுரத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பாஸ்கர் ராய் என்ற ஆய்வாளர், இலங்கையில் தாமரை கோபுரத் திட்டத்தை நிறைவு செய்ய இடமளித்தால் அது இந்து சமுத்திரத்திற்கு ஆபத்தாக அமையும் என்றும்…
லலித் வீரதுங்கவிடம் நிதி மோசடி பிரிவு விசாரணை
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லலித் வீரதுங்க மீது நிதி மோசடி குற்றச்சாட்டில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்து லலித் வீரதுங்கவிடம் விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு கார்கள் மூலம் தகவல் அனுப்பி சாதனை
விண்வெளி ஆய்வு மையத்திலிருக்கும் விண்வெளி வீரரான தந்தை ஒருவருக்கு அவரது 13 வயது மகள் Stephanie அன்பான தகவலொன்றை அனுப்பினார். இதற்காக தொடர்பு சாதனங்கள் எதையும் அவர் பயன்படுத்தவில்லை. அப்படியாயின் எவ்வாறு இது சாத்தியமானது? Steph love’s you! என்ற தகவலை அனுப்பிட 11 கார்கள் உதவின. 11 Hyundai Genesis கார்கள் மற்றும் காரோட்டும் சாகச வீரர்களைக்கொண்டு செயற்பட்டதுடன், இதுவரை பூமியில் வரையப்பட்ட மிகப்பெரிய குறியீடு என்ற கின்னஸ் சாதனையையும் நிகழ்த்துவதற்கு Hyundai நிறுவனம் அனுசரனையாளராக இருந்துள்ளது.
பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாப்பதற்கான இடமாக பயன்படுத்தாதீர்கள்: ரணிலின் இன்றைய சுப்பர் பேச்சு (வீடியோ இணைப்பு)
பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாப்பதற்கான இடமாக பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். நாட்டில் மோசடி குறைந்துள்ளதால் பத்து வருடங்களின் பின் முதற் தடவையாக வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த இடமளிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) கோஷமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது….
மஹிந்த ஒன்றும் கடவுள் இல்லை: சம்பிக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடவுள் இல்லை என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்கு வரைவழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு, எவ்வித தேவையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். எந்த தவறும் செய்திருக்காவிடில், ஆணைக்குழுவுக்கு ஆஜராவதற்கு எவ்வித தயக்கமோ, பயமோ ஏற்படவேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயற்படும் ஆணைக்குழுவுக்கு எதிராகவும் அதற்கு இடையூறு விளைவிக்கும்…
தலைவர் றிஷாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது -சுபைர்
அரசாங்கத்தின் நுாறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் இந்த அரசாங்கத்தினை அமைப்பதற்கு தம்மையே அர்ப்பணம் செய்த தலைவர் றிசாத் பதியுதீன் என்றும் கூறினார். புதிய அரசாங்கத்தின் 100 வது நாள் தொடர்பில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தமதுரையில்…
