News
எபோலா வைரஸ் பரவலை தடுக்குமுகமாக 100 மில்லியன் டொலர் செலவில் நிதியம்!
மேற்கு ஆபிரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் எதிர்வரும் காலத்தில் எபோலா நோய் பரவலைத் தடுக்கும் முகமாக 100 மில்லியன் டொலர்கள் செலவில் அவரச நிதியம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அவசர நிதியம் இனிவரும் காலங்களில் உடனடியாக எபோலா நோயை எதிர்த்து சமாளிப்பதற்கு உதவும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் தெரிவித்துள்ளார்.உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்த கூட்டமொன்று நேற்று (18) திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…
சில அடிப்படைவாத பிரிவுகள் முன்வைக்கும் போலிக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சேறு பூசல்களை நம்ப வேண்டாம்
நாட்டில் யுத்தம் முடிவுற்று 6 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் புதிய ஆட்சியின் நோக்கத்தின் அடிப்படையில் அபிவிருத்தியும் நல்லிணக்க முயற்சியும் சரிநிகராக பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படவும் தீவிரவாதிகள் தலைதூக்கவும் இடமளிக்கப்படாது என்றும் தேசிய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் முப்படையினரும் பாதுகாப்பு சபையில் வழங்கப்படும் ஆலோசனைக்கு அமைய திரம்பட செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நாட்டில் உள்ள சில அடிப்படைவாத பிரிவுகள் முன்வைக்கும் போலிக் குற்றச்சாட்டுக்கள் மற்றும்…
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா பெயரில் வீதி!
கொழும்பு ஆனந்த மாவத்தையையும், கெட்டவலமுல்ல ஒழுங்கையையும் இணைக்கும் வீதிக்கு இன்று 19 ஆம் திகதி “பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாவத்தை” எனப் பெயரிடப்படவுள்ளது. கொழும்பு மாநகர சபை உட்பட பல அரச நிறுவனங்கள் இப்பணியில் பங்கேற்கவுள்ளன. இது தொடர்பான வைபவம் அமைச்சர் கரு ஜயசூரிய தலைமையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பங்களிப்புடன் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோட்பாட்டுக்கு இணங்க, இராணுவத்தை வீரத்துடன் வழி நடத்தியமையைக் கெளரவித்து இந்த பெயர்…
20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் ?
எம்.ஐ.அப்துல் நஸார் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு வருவதாக சட்ட வரைஞர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜீ.எஸ்.அருண ஷhந்த டி சில்வா தெரிவித்தார். முதற் பிரதி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் அது சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்படவுள்ளது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவினை சத்தமேதுமின்றி செய்து முடித்த பெருமையும் சட்ட வரைஞர் திணைக்களத்தையே சாரும். அரச கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் கொள்கைககளை சட்ட வரைவுகளாக மாற்றுவது எமது திணைக்களமாகுமட எனவும்…
சிகரெட்டால் ஏற்படும் உடல்நல கேடுகளை இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களும் விளைவிக்கும்: அதிர்ச்சி தகவல்
புகைப்பழக்கத்தை குறைக்க பயன்படுவதாக கூறி விற்கப்படும் இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சிகரெட் ஏற்படுத்தும் அதே உடல்நல கேடுகளை விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் தொராசிக் சொசைட்டியின் சார்பாக அலபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேனியல் சல்லிவன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இ-சிகரெட்டில் உள்ள எரிக்கும் இயந்திரம், அதன் வெளியிடும் பகுதி மற்றும் அதில் பயன்படுத்தப்படும் நீராவி வடிவிலான நிகோடின் ஆகியவை சேர்ந்து, சாதாரண சிகரெட்கள் ஏற்படுத்தும் அதே அளவிலான உடல் நல கேடுகளை விளைவிக்கும்…
ஹைபிரட் டெலிமெயில் வருகிறது
ஹைபிரட் எனும் பெயரில் புதிய டெலிமெயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக கூடுதலான டெலிமெயில் அனுப்பமுடியும் என்று தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார். இந்த வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
க.பொ.த. (உ/த) 2014: மீள் திருத்த முடிவுகள் வெளியீடு
அபூ ஷஹ்மா கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகளின்படி மீள் திருத்தத்திற்கு விண்ணப்பித்த 66,000 பேருக்கான முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் முடிவுகளை பார்வையிடலாம்.
சாலை விபத்தில் ஒருவர் பலி – பொத்துவிலில் சம்பவம்
சம்சுல் ஹுதா பொத்துவில் அறுகம்மை உல்லைப் பகுதியில் (19) இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றுக்கொன்று முந்திக் கொள்ள முற்பட்ட வேலையிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த பொத்துவில் – 05 சவாலை உல்லைப் பகுதியைச் சேரந்த முகம்மட் ஹனீபா அப்துல் றஹீம் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் மோட்டார் சைக்கிள் வந்த நபர் பலத்த…
மரண தண்டனை நிறைவேற்ற 8 பணியிடங்கள்: சஊதி விளம்பரம்
சஊதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றும் வேலைக்கு எட்டு பேரை நியமிக்க இணையத்தில் விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. சஊதி அரசின் சிவில் சேவைகள் அமைச்சின் இணைய தளத்தில் வெளிவந்திருக்கும் விளம்பரத்தில், இந்த வேலையைச் செய்ய சஊதி அரேபியப் பிரஜைகள் மட்டுமே தகுதியானவர்கள் என்றும், பட்டப்படிப்பு தேவையில்லை என்றும் இந்த வேலையைப் பெறுவதற்கு எந்த வித தேர்வு வழிமுறை ஊடாகவும் போகவேண்டியதில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. சஊதி அரேபியாவில் மரண தண்டனையை நிறைவேற்றுபவர்கள், கொலை, பாலியல் வல்லுறவு மற்றும் போதைப் பொருட்களை…
இன்டர்நெட் சென்டரில் குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் வீடியோகேம் விளையாட சென்ற சீனப்பெண்
இன்டர்நெட் சென்டரில் பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சியான்சி மாகாணத்தின் தலைநகரான நன்சாங் நகரில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு வந்துள்ளார். அங்கு பொழுதை போக்குவதற்காக கம்ப்யூட்டரில் வீடியோகேம் விளையாடத் தொடங்கிய அவர், சற்று நேரத்தில் பிரசவ வலி ஏற்படவே சத்தம் போட்டுள்ளார். (அப்போதுதான் அங்கிருந்தவர்கள் அவர் நிறைமாத…
மூழ்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள், நடுக்கடலில் எஞ்சிய சாப்பாட்டுக்கான சண்டையில் 100 பேர் வபாத், இஸ்லாமிய நாடுகள் வேடிக்கை பார்ப்பு
கடலில் நிர்க்கதியான புகலிடப் படகில் இருப்பவர்களுக்கிடையே எஞ்சிய உணவுக்காக ஏற்பட்ட சண்டையில் 100 பேர் வரை உயிரிழந்ததாக மூழ்கும் படகொன்றில் இருந்து உயிர் தப்பிய சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்கும் படகில் இருந்து மீட்கப்பட்ட மூவர், படகில் இருந்த பலரும் கத்தியால் குத்தப்பட்டோ, தூக்கில் தொங்கவிடப் பட்டோ அல்லது கடலில் வீசி எறியப் பட்டோ கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளனர். மியன்மார், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சுமார் 700 புகலிடக் கோரிக்கை யாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷிய…
மிஸ்டு காலா… பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்
இரவு உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் ரிங் வந்து கட் ஆகிறதா.அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன்ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள். ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும். 2-வது நாளில் அதே… நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும்…
