News
கண்டி மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாத்து கௌரவித்தனர்- லக்ஷ்மன் கிரியெல்
அஸ்ரப் ஏ சமத் சிறுபான்மையினரை பாதுகாப்பதே ஐக்கிய தேசிய கட்சியினரின் கொள்கை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் கண்டி யை ஆட்சி செய்த சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாத்து வந்தனர். ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம்களை அவர்கள் இனச்சுத்திகரிப்பு செய்ய முயற்சித்தனர் அப்போது ஸ்ரீ ராஜ சிங்க மன்னர் முஸ்லிம்களை அவர்களை கிழக்கிலும் அக்குரனையிலும்…
(தொடரும் வில்பத்து சர்ச்சை )….மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்ற நீதி மன்றம் செல்வோம் …! சிங்களே ஜாதிக பெரமுன
வில்பத்து வன பிரதேசத்தில் முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியமர்த்தியுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மீது சிங்களே ஜாதிக பெரமுன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவில் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை செய்திருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த அமைப்பு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு திணைக்களத்தில் சாட்சி வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளது. அதன் பின்னர் இவ்விடயம் தொடரப்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிங்களே ஜாதிக பெரமுன அமைப்பின் தலைவர் மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் வன பாதுகாப்பு…
சுவிஸ் அரசு இலங்கையில் முதலீடுகளை செய்வது எமது நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் – அமைச்சர் றிஷாத் பதியுதீன்
– இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் – இலங்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு சுவிஸ் நாடு தயாராகவுள்ளதாகவும், அதற்கு இலங்கையின் முதலீட்டு தளம் சிறந்ததாக காணப்படுவதாக சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெனிஸ் வோர்கர் நெவில் கூன் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் கூறினார். இலங்கைக்கு வருகைதந்துள்ள சுவிஸ் நாட்டின் உயர் மட்ட குழுவினருக்கும், அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம் பெற்ற வர்த்தக மேம்பாடு தொடர்பிலான கலந்துரையாடலின் போது இதனை அவர் சுட்டிக்காட்டினார்….
வருங்கால கணவர்களைப் பற்றிய தகவல்களை அறியும் உரிமை வேண்டும்: சவுதியில் இளம்பெண்கள் போர்க்கொடி!
சவுதியில் திருமணத்திற்கு முன்னதாகவே ஆண்களைப் பற்றிய முழுவிவரங்களும் சொல்லப்பட வேண்டும் என்று பெண்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். திருமணத்துக்கு பின்னர் தங்களது கணவரின் இளமைக்கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை கேள்விப்படும் சில பெண்கள் விவாகரத்துக்கு செல்வதால் சவுதியில் தற்போது விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில் திருமணத்துக்கு முன்னதாகவே தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் உரிமை வேண்டும் என சவுதியில் உள்ள இளம்பெண்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதற்கு சவுதி…
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்கான அனுமதி அமைச்சர் றிஷாத் பதியுதீனால் வழங்கி வைப்பு
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதியினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வழங்கியுள்ளதாக அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரிவில் கோமரசங்குளம் பூங்கா அமைத்தல், 31 இலட்சத்து 20ஆயிரம் ரூபாவும், தோணிக்கல் குட்செட் வீதி முதலாம் ஒழுங்கை இணைப்பு வீதி கல்லிட்டு தாரிடல் 1கோடி 30 இலட்சம், நெளுக்குளம் இந்து மயானத்தில் மடம் அமைத்து ஏரியூட்டும் மேடை அமைப்பதற்கு 7 இலட்சத்து…
இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டம்: களுத்துறை,காலி மற்றும் மாத்தறைமாவட்டஇளம் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்
எம்.ரீ.எம்.பாரிஸ் இனங்களுக்கிடையிலானபுரிந்துணர்வு,உரையாடல்,வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கு,சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவிழுமியங்களை மக்கள் மயப்படுத்துவதே இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும். மக்கள் அரங்கநாடகச் செயற்றிட்டத்தின் முதலாம் கட்டம் கடந்தவருடம் மிகவெற்றிகரமாக கிழக்குமாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டது. தேசியமொழிகள் மற்றும் சமூகஒருமைப்பாட்டுஅமைச்சு மற்றும் கிழக்குமாகாணகல்வி அமைச்சு ஆகியன இதற்கு அணுசரனை வழங்கின. இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இதனை அமுல்படுத்தியது. இதன் இரண்டாவது கட்டம் திருகோணமலை,பொலன்னறுவைமற்றும் கண்டி ஆகியமாவட்டங்களில் கடந்தமாதம் நிறைவூபெற்றது. கிழக்கு,மத்திய மற்றும் வடமத்திய மாகாண கல்வியமைச்சுமற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியன…
ஸ்பெயின் நாட்டின் வான்வெளியில் அணிவகுத்து சென்ற வினோத பொருட்களை படம் பிடித்த போட்டோகிராபர்
Aboosali mohamed sulfikar வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களைப்போல் இருப்பார்களா இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் (யுஎப்ஓ) அமைப்பு ஆய்வாளர்கள் அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல்களை வெளியிடுவது உண்டு. சமீபத்தில் லியோனார்டோ…
தீ விபத்தில் வீட்டை பறிகொடுத்து, தெருவில் எலுமிச்சை பழச்சாறு விற்று நிதி திரட்டும் 10 வயது அமெரிக்க சிறுமி
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டம்ப்பா பகுதியில் வசித்த ஒரு தம்பதியரின் வீடு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் எரிந்து, நாசமடைந்து தரைமட்டமானது. புதிய வீடு கட்டித்தர முன்வந்த ஒப்பந்தக்காரரும் வீட்டின் உரிமையாளரால் பேசிய தொகையை வழங்க இயலாத நிலையில், வீட்டு வேலையை இழுத்தடித்துக் கொண்டே வந்தார். தங்களது குடும்பத்தின் பொருளாதார நிலையை கண்டு வேதனைப்பட்ட 10 வயது சிறுமியான அலிஸா டி லெ சாலா, சாலையோரம் எலுமிச்சைப் பழச்சாறு விற்று நிதி…
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 30.05.2015 சனிக்கிழமை இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா என்பது அரபியர்களின் நாடு மட்டுமல்ல உலக முஸ்லிம்களின் நாடு உலக முஸ்லிம்கள் அனைவரும் என் உடன்பிறவா சகோதரர்கள் சவுதி மன்னர் சல்மான் உருக்கம்
மெளலவி செய்யது அலி ஃபைஜி இரு தினங்களுக்கு முன்பு ரியாத் யாமாமா மாளிகையில் அரபுநாடுகளின் பராளமன்ற கூட்டமைப்பின் தலைவரை வரவேற்று சவுதி மன்னர் சல்மான் ஆற்றிய உரை உலக முஸ்லிம்களின் உள்ளத்தை தொடுவதாக அமைந்தது சவுதி அரேபியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என் மீது ஏராளமானன பொறுப்புக்கள் இருக்கிறது அந்த பொறுப்புகளில் முக்கியமானதும் முதன்மையானதும் நமது அகீதாவை (கொள்கை) பாது காப்பதாகும் அதர்க்காக என்னவெல்லாம் என்னால் செய்ய முடியுமோ அவைகள் அனைத்தையும் இறையருளால் நான் செய்வேன் சவுதி…
மகிந்தவின் ஆட்சியில் சிறுபான்மையினரின் வர்த்தகம் நசுக்கப்பட்டது – ரவி கருநாயக்க
அஸ்ரப் ஏ சமத் நிதி அமைச்சர் ரவி கருநாயக்க கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பில் சிறுபான்மை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிறுவனங்களை புதிதாக ஆரம்பிக்கவோ, அல்லது வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் முதலிடவோ மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அதற்குரிய சர்ந்தாப்பங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் திட்டமிட்டு சிறுபான்மையினரின் வர்த்தக நிறுவனங்களை எவ்வாறு மூடவைக்காலாம், அல்லது நஸ்டமாக்கலாம், பற்றவைக்கலாம் பாரிய வரிகளை அவர்கள் மேல் சுமத்தி வர்த்தகர்களை ஒழித்துக் கட்டுவார்கள். அல்லது சட்டவிரோத வியாபார நிறுவனம், என்ற ரீதியில்…
றிஷாதை அழிக்க சதி; அம்பலத்திற்கு வரும் ஆதாரங்கள்
எ.எச்.எம்.பூமுதீன் முஸ்லிம் சமுகத்தை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலமிழக்கச் செய்யும் சதித்திட்டங்கள் மகிந்த ஆட்சியுடன் முற்றுப் பெறாது இன்று வரை தொடர்வது முஸ்லிம் சமுகத்தினர் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் தோற்றிவித்துள்ளது. 2012ல் பொதுபலசேனாவின் அராஜகத்துடன் ஆரம்பித்த முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் அட்டூளியங்களும் 2015ல் சிங்கள ராவயவின் மூலம் மேலும் வலுப்பெற்றுவருகின்றது. பொதுபலசேனாவாகட்டும் அல்லது சிங்கள ராவய ஆகட்டும் இவர்களின் ஒரே குறிக்கோள் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக அழிப்பதும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை இல்லாது…
