News
2015 உலகில் சிறந்த விடுதிகளில் இலங்கை விடுதி
சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது. wherecoolthingshappen.com என்ற சுற்றுலா பயணிகளுக்கிடையில் பிரபல இணையத்தளமான இப்பட்டியலை வெளியிட்டிருந்தன. இலங்கையின் சிறந்த விடுதியான 98 Acres என்ற விடுதியினை குறித்த இணையத்தளம் பெயரிட்டிருந்தன.
அராஜக நாடுகளுக்கு – அல்லாஹ்வின் தீர்ப்பு தாமதமா..?
– முஹம்மது மஸாஹிம் – பற்றியெறிகிறது மியன்மார், பதறுகின்றது இதயம், பிரார்த்திக்கின்றன கைகள், இன்னும் பார்த்துக் கொண்டா இருக்கின்றான் படைத்தவன்..? எங்கே அவனை நம்பி கலிமாச் சொன்ன மக்களைக் காப்பாற்ற, இன்னும் அவன் அழிவை ஆரம்பிக்கவில்லை..? கண்ணெதிரே இவர்களுக்கு காட்டவேண்டுமல்லவா..? இன்று அதிகமான மக்களின் உள்ளத்திலுள்ள கேள்விதான் இது. ஆம்.. எம்மைப் படைத்த இறைவனை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள். அவனது சூப்பர் படைகளுக்கு முன்னாள், உங்கள் உலக கூட்டுப்படைகள் தூசிப் படைகளே.. உங்களிடம் தரைப்படை உள்ளதா..?…
கொலை வெறியை நிறுத்து” இலங்கையிலுள்ள பர்மா தூதரகத்தை முற்றுகையிட அழைப்பு..!
“கொலை வெறியை நிறுத்து” இலங்கையிலுள்ள பௌத்து தூதரகத்தை முற்றுழைகையிட அழைப்பு..! ஜூம்ஆத் தொழுகைக்காக தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டுக்குழு ஐக்கிய சமாதான முன்னணி
ரோஹிங்க்யா முஸ்லிம்கள் குறித்து குவைத் நாட்டில் கலந்தாய்வு:
அபுஷெய்க் முஹம்மத் குவைத் நாட்டில் 42 வது வெளியுறவு அமைச்சர்களுக்கான கருத்தரங்கம்(OIC) இஸ்லாமிய ஒத்துழைப்பு சபையால் நடத்தப் பெற்றது அதன் முக்கிய அம்சமாக இரண்டுநாள் கருத்து அரங்கம் நடை பெற்றது . மேற்கே ஆப்ரிகா கண்டத்தில் மாலி நாடு முதல் கிழக்கே ஆசிய கண்டத்தில் பர்மா வரை உள்ள நாடுகளான பாலஸ்தீனம், சிரியா, ஏமன், லிபியா, பர்மா போன்ற நாடுகளில் சீர்கெட்ட நிலை , அவலநிலையை பற்றிய பேச்சுவார்த்தை நடை பெற்றது .
பர்மா முஸ்லிம்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளவர்களின் கவனத்திற்கு!
தாஹா 1. இதன்போது, தயவு செய்து, புத்த மதத்தை இழிவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். புத்த மதத்துக்கும் இந்த வன்முறைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 2. இலங்கையிலுள்ள எந்த பிக்குகளையோ அல்லது பௌத்த அமைப்புகளையோ கண்டிக்க வேண்டாம். இது பிரச்சினையை திசை திருப்பும், தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கும். 3. மியன்மார் முஸ்லிம்கள் சம்பந்தமாக முகப்புத்தகத்தில் உலா வரும் அநேக படங்கள் இந்த வன்முறையுடன் கிஞ்சித்தும் தொடர்பற்றவை; பூகம்பத்தினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்களின் படங்கள் அவை. இதுபோன்ற…
”வித்தியா விவகார விசேட நீதிமன்றம்” ஞானசாரரின் கூற்றுக்கு, ராஜித்தவின் பதில்
வடக்கில் மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண சம்பவமாக கணிக்க முடியாது. மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதிவு செய்து சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது. எனவே இதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கவேண்டியது அவசியமாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். முதலில் இந்தியாவில் இவ்வாறு திட்டமிட்ட வியாபாரமாக இந்த செயற்பாட்டை மேற்கொண்டனர். தற்போது இலங்கைக்கும் வந்துள்ளனர். இதனை சாதாரண விடயமாக கருதவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க…
20 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் அடுத்த வாரத்தில்!
இருபதாம் திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் அடுத்த வாரம் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இன்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – 20 ஆம் திருத்தச்சட்டத்தை முன்வைப்பது தொடர்பில் எமக்கு 15 ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் பாராளுமன்றத்திலுள்ள…
இலவச வைஃபை வலயங்களை அதிகரிக்க நடவடிக்கை
மேலும் சில பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், திஸ்ஸமகாராம பஸ் தரிப்பிடத்திலும் இலவச வைஃபை வலயம் நிறுவப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முகவர் நிறுவன வேலைத்திட்டத்தின் முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக களுத்துறை மற்றும் பாணந்துறை ரயில் நிலையங்களிலும் விரைவில் இலவச வைஃபை வலயங்களை ஏற்படுத்துவதற்கு…
அசின் விராதுவை பின்தொடரும் ஞானசார பிக்கு
இஸ்ஸதீன் றிழ்வான் மின்மார் நாட்டின் 969 என்ற இனவாத அமைப்பின் தலைவர் அசின் விராதுவை இலங்கையின் இனவாத அமைப்பான பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் அச்சொட்டாக பின்பற்றுவதை அவரின் நடத்தைகள் படம்பிடித்துக்காட்டுகின்றன. பெளத்த மதத்தையும் மக்களையும் பாதுகாக்கவென அமைக்கப்பட்ட பொதுபலசேன என்ற அமைப்பு இதுவரைக்கும் பெளத்தர்களூக்கோ அல்லது பெள மதத்திற்கோ இதுவரையும் எதனையும் செய்யவில்லை. இலைங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் மற்றும் கிரிஸ்தவ மக்களுக்கெதிரான சதிகளே தொடர்கின்றன, அதன் வெளிப்பாடே அளுத்கம நகரை தீ…
வாசுதேவ நாணயக்காரவை கண்டிக்கும் அஸ்கிரிய மஹாநாயக்கர்
அஸ்கிரிய மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், அண்மையில் பாராளுமன்றத்தில் வாசுதேவ நடத்து கொண்ட விதம் ஒரு போதும் அனுமதிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் நாட்டுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுடைய குழந்தைகள் தான் நாட்டில் எதிர்கால பிரதமர், ஜனாதிபதிகள் எனவே நாம் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது, பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை…
குவைத்தில் காலியை சேர்ந்த முகம்மத் அக்ரம் வபாத்
-குவைத்தில் இருந்து அஸாம் – குவைத்தில் பாரத லங்கா இலங்கை உணவகத்தில் பணிபுரிந்த முகம்மத் அக்ரம் என்ற காலி பிரதேசத்தை சேர்ந்த சகோதரர் மாரடைப்பு காரணமாக காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று 28/05/015 அஷர் தொழுகையின் பின் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும், யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக ஆமீன்……. தகவல் :MR.F .NASEER LANKA HOTEL FARWANAIYA CONTACT :69335656
ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பர்மா பிரஜைகள் – மலேசியா முன்னால் பிரதமர் மகாதீர் முஹம்மத் அதிரடி!
– அபுசெய்க் முஹம்மத் – 1.பர்மா அரசு ரோஹிங்க்யா குறித்து விலகி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை ..அதேவேளையில் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற பர்மா அரசு நடவடிக்கை எடுக்கின்றது.. 2.ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பர்மிய நாட்டின் ஒரு அங்கத்தினராக 800 வருடங்களுக்கும் மேலாக இருந்து இருக்கின்றார்கள். 3.முன்னர் மியான்மாரின் போதும் பின்னர் பர்மாவாக மாறிய போதும் அவர்கள் பிரஜைகளாக கருதப்பட்டார்கள். 4.பர்மா அரசு ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களை தன் சக பிரஜைகளாக ஏற்றுகொள்ள வேண்டும் . 5.பௌத்தர்கள் ஆதிக்கம் மிகுந்த…
