News
தத்தளிக்கும் ரோஹிஞ்சா மக்கள் கரையேறுவார்களா?
மத ரீதியான மோதல்களால் மலேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் புகலிடம் கோரி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் மியன்மார், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் என்பது தெரியவந்துள்ளது. மியன்மார், அரக்கான் மாநிலத்தின் ரோஹிஞ்சாவில் வங்காள மொழி பேசுகின்ற பல இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள், தமது சொந்த இடங்களை விட்டு புகலிடம் தேடி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.அங்கு இடம்பெறுகின்ற இன மோதல்களினாலேயே இவர்கள் செல்லுமிடம் அறியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்றது….
20 வருடங்களுக்குப் பிறகு கல்குடா மக்களுக்களின் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம்
அஷ்ரப் எ சமத் கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தத்தின் போது இருப்பிடம், சொத்து, சுகங்களை எல்லாம் இளந்து இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களில் குடியேறி வரும் இக்காலத்தில் அவர்களின் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் கடந்த அரசால் இழுத்தடிப்புக்கள் செய்யப்பட்டு வந்தன. அந்த வகையில் இன்று இலங்கையில் நல்லாட்சி மலர்ந்திருக்கும் இவ்வேளையில் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு அவர்களின் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட…
வத்தளையில் நடைபெற்றுள்ள, படு பயங்கரமான சம்பவம்..!
தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தின் 49 வயதான பெண் ஒருவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இனந்தெரியாத ஒருவர் அல்லது பலர் தமது இரத்தத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவேளையில் தாம் சுயநினைவிழந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் வத்தளை சென்அந்தனீஸ் தேவாலயத்துக்கு முன்னால் தாம் கைவிடப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டதாக பெண் குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று பணிக்கு செல்லும்…
வில்பத்து விவகாரத்தைக் கையாள அமைச்சரவை உபகுழு அமைச்சர் றிஷாத் உடபட பலர் நியமனம்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடபுல முஸ்லிம்களின் எதிர்நோக்கும் இன்றைய மீள்குடியேற்ற பிரச்சினை என்பது தனிநபர் பிரச்சினையல்ல. இந்த விடயத்துக்கு உடனடியாக தீர்வு கண்டு அந்த மக்களுக்கு விமோசனம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். இதனையடுத்தே இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்து அதன் ஊடாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது….
மக்களுடன் இணைந்து வழக்கு தாக்கல் செய்ய முடிவு
தமக்குரிய காணிகளை ஜி. பி. எஸ். (GPS) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்த 2012 ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானிக்கு எதிராக மரிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குளி மற்றும் முள்ளிபுரம் ஆகிய மக்கள் நீதிமன்றம் செல்லவிருப்பதாக கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் வில்பத்து விளாந்திபுரம் இந்நாட்டு…
வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் பேதங்களை மறந்து செயற்படவேண்டும்
ரஸீன் ரஸ்மின் மன்னர் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. யுhழ் புங்குடுதீவு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வாரம் முழுதும் ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்களில் பேசப்பட்டது. இதனால் வில்பத்து விவகாரத்திற்கு ஒருவார காலம் ஓய்வு கொடுக்கப்பட்டது. எனினும் வித்தியா தொடர்பில் நாட்டில் தற்போது அமைதி நிலை ஏற்பட்டதும் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு நினைத்தபடி ஆடிக்கொண்டிருக்கின்ற இனவாதிகள் இலங்கை முஸ்லிம்களை அடக்கி ஒடிக்கி வைத்துக்கொண்டு தாம் நினைத்தபடி…
மியன்மார் (BURMA) தூதுவருக்கு அமைச்சர் றிஷாத் கடிதம்
ஏ.எச்.எம்.பூமுதீன் மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அமைச்சர் றிஷாத் பதியுதீன் இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். நேற்று காலை (27) குறித்த கண்டனக் கடிதம் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ காரியாலயத்திலிருந்து மியன்மார் தூதுவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் உள்ள முஸ்லிம்களுக்கு நடக்கும் கொடுமைகளை எண்ணி இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிகுந்த மனவேதனையை அடைந்துள்ளனர். இலங்கையைப் போன்று மியன்மாரும் ஒரு பௌத்த நாடாகும். புத்த பெருமான் மற்றுமொரு…
வில்பத்து தேசிய வன அழிப்பின் பின்னணியில் யார்? உண்மைகளை அம்பலப்படுத்திய நெத் FM
ஏ. எச்சித்தீக் காரியப்பர் உண்மைகள் ஊர்சுற்றி வரும் வரையும் அரங்கேறிக் கொண்டிருக்கும் பொய்மைகளானது எப்போது உண்மைகள் வந்து வாசற் கதவை தட்டுகின்றவோ அப்போதிருந்தே இல்லாத இடம் தெரியாமல் போய் விடும் என்பார்கள் அல்லவா? அதுபோன்ற சம்பவம் ஒன்றுதான் இன்று வில்பத்து விவகாரத்தில் இடம்பெற்றுள்ளது. வில்பத்து தேசிய வனப் பகுதியில் அமைச்சர் றிஷாத்தின் அனுசரணையில் பாரிய மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பச்சை நிர்வாணப் பொய்களை சிங்கள இனவாதிகள் அவிழ்த்து வந்த நிலையில் சிங்கள இணையமான நெத் எம். எப்….
இலங்கை ஒரு வர்த்தக மையமாக காணப்படுகின்றது – அமைச்சர் றிஷாத் பதியுதீன்
ஊடகப் பிரிவு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்தியரின் டாடா குழுமத்தினர் அமைச்சர் றிஷாத் பதியுதீனை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர். இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையில் உள்ள வர்த்தக தொடர்புகள் பலம் வாய்ந்தவையென அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு எடுத்துரைத்தார் இலங்கை வர்த்தக மையமாக காணப்படுகின்றது என்றும் கூறினார். இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் இலங்கையில் முதலீடுகளை செய்வதுடன் உற்பத்தி துறையில் அதிக ஆர்வத்தை தாங்கள் கொண்டுள்ளதாகவும்,அதற்கான…
கடத்தப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிப்பு
50 கோடி ரூபாய் கப்பம் கேட்டு, நைஜீரியாவில் உள்ள காடொன்றில் சிறைவைகப்பட்டிருந்த இலங்கை பொறியியலாளரான டி.ஏ. கருணாதாஸ, இலங்கை நேரப்படி நேற்றிரவு 9.30க்கு விடுவிக்கப்பட்டுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனஹண்ட நிகழ்ச்சி – அமைச்சர் றிஷாத் சிங்கள மக்களுக்கு தெற்கு முசலி மீள்குடியேற்றம் தொடர்பாக தெளிவுபடுத்தினார்
– அபூஹஸ்மி – கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற TNL ஜனஹண்ட நிழ்ச்சியில் அமைச்சர் ரிஷாட் பதிவுதீன் அவர்கள் கலந்துகொண்டு பூர்வீக கிராமங்களாக காணபட்ட பாலக்குழி, கரடிக்குளி, மறிச்சுக்கட்டி, கொண்டச்சி, காயக்குளி தொடர்பாக வினவப்பட்ட கேள்விகளுக்கு நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்கள் நன்கு தெளிவுபெறும் வகையில் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை விளக்கிக்கூறினார். அவர் மேலும், ஜனஹண்ட நிழ்ச்சியில் பேசுகையில், நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்த வடக்கு முஸ்லிம்கள் புலிகளின் கொள்கைக்கு உடன்படாத ஒரே காரணத்தினால்…
அந்த வார்த்தை திடீரென எனக்குத் தெரியாமலே வந்துவிட்டது
நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தகாத வார்த்தைகளால் எசியமை, நான் தெரியாமல் செய்த தவறாகும். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தை திடீரென வந்துவிட்டது. எவ்வாறாயினும், நான் அதை தெரிந்தே சொல்லவில்லை’ என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணாயக்கார கூறினார். கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வாசுதேவ, ‘தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை நம்பிக்கையில்லாப் பிரேரணையின்…
