News
1000 இற்கும் அதிகமான ரஷ்யர்கள் ISIS இல்
ISIS உடன் இணைந்து சுமார் 1000 இற்கும் அதிகமான ரஷ்ய நாட்டவர்கள் சண்டையிட்டு வருவதாகவும் இவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்குத் திரும்பும் பட்சத்தில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் அபாயம் இருப்பதாகவும் ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சில் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் வெளிவரும் கொம்மெர்சாண்ட் (business daily) என்ற நாளிதழுக்கு அந்நாட்டு பாதுகாப்புக் கவுன்சில் தலைமை அதிகாரியான நிக்கொலை பட்ருஷேவ் அளித்த நேர்காணல் நேற்று திங்கட்கிழமை வெளியாகி இருந்தது. அதில் தற்போது ISIS இற்காகச் சண்டையிட்டு வரும்…
மரண தண்டனை ஆடையுடன் வந்த முர்ஸி
மரண தண்டனை கைதிக்கான சிவப்பு நிற கைதி உடையுடன் எகிப்து முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சி முதல்முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் முர்சி முகம்கொடுத் திருக்கும் ஐந்து வழக்குகளில் ஒன்றான கட்டார் நாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுக்காகவே ஞாயிறன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்ற சிறைக்கூண்டுக்கு அழைத்து வரப்பட்டபோது அங்கு ஆஜர்படுத்தப்பட்டிருந்த ஏனைய பிரதிவாதிகள் முர்சிக்கு ஆதரவாக கோசம் எழுப்பினர். ஏற்கனவே முர்சி மீதான…
கல்வி அமைச்சர் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் சந்திப்பு
– முஹம்மது சனாஸ் – மலையக தோட்டப்புற தமிழ் மொழி மூலமான முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க ஆகியோரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துரையாடினார். அதேவேளை, இது தொடர்பில் அகில இலங்கை மக்கள்…
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட இடமளிக்கமாட்டோம்…!
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் குறிப்பிட்டார். நேற்று மாலை கண்டி மடவளை பிரதேசத்தில் அமைச்சர் கிரியால்ல அவர்களின் பாததும்பரை ஹாரிஸ்பத்துவை தொகுதிகளுக்கான முஸ்லிம் இணைப்பு செயலாளராக நியமனம் பெற்ற மடவளை பஸார் அல்ஹாஜ் ஹனீப் அவர்களின் அனுசரணையில் தெரிவு செய்யபட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நிழ்கவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இங்கு மேலும்…
ரமழான் மாதத்தில் தாக்குதல் மைத்திரி கண்டனம்
ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சார்க் வலய அங்கத்தவ நாடொன்றின் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வருந்தத் தக்கது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானின் ஜனநாயகத்தை சீர்குழைக்க முடியாது என என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்டின் செயற்பாடுகளை ஸ்தம்பிதமடைய செய்யும் முயற்சியாக இது அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு, மகிழ்ச்சியான செய்தி
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் நடைபாதை வியாபாரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றாக நீக்கப்பட்டிருப்பதாக கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார். இதற்கான முழுமையான ஒத்துழைப் பினையும் அனுமதியையும் வழங்கக் கோரி பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கமைய கடந்த காலங்களைப் போன்று வியாபாரிகள் நடைபாதையில் தமது வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் வியாபாரிகள் வழக்கம் போல நடைபாதை வியாபாரங்களை முன்னெடுக்க…
தினமொரு நபிமொழி – 3
‘ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (புகாரி)
துபாயில் பிச்சை எடுத்த 70 பேர் பிடிபட்டனர் !
ரமழான் மாதம் நோன்பிருந்து இறைவனை வழிபடும் மாதம் மட்டுமல்ல, முஸ்லிம்கள் ‘ஸகாத்’ எனப்படும் தான-தர்மங்களையும் அதிகம் செய்யும் மாதம் என்பதால், ரமழான் மாதங்களில் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பதை ஒரு பிழைப்பாகவே சிலர் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே துபாய் நகரின் மஸ்ஜித்கள் , மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பு மிக்க சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 70 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர். தற்போது பிடிபட்டவர்களில் பெண் ஒருவர்….
அகதிகளை அரவணைத்து அவர்களுடன் நோன்பு திறந்த துருக்கி அதிபர்!
துருக்கியில் சிரியாவை சார்ந்த முஸ்லிம்கள் அதிக அளவில் அகதிகளாக உள்ளனர் அவர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் செய்து வரும் துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் நேற்யை தினம் கிழக்கு துருக்கியில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்து அகதிகள் முகாமில் உள்ள மக்களுடன் அமர்ந்து நோன்பு திறந்ததோடு அந்த மக்களுடன் அன்பாக கலந்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி கூறிய துருக்கி அதிபர் அகதியாக உள்ள முஸ்லிம்களின் குழந்தைகளின்…
உலக அழிவு ஆரம்பம்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய உயிரினமாக காணப்பட்ட டைனோசர் இனம் அழிவடைய ஆரம்பித்த காலத்தில் இருந்தே, உலகின் அழிவு காலம் ஆரம்பமானது. இதன் பல்வேறுகட்டங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதன்படி தற்போது அதன் ஆறாம் கட்ட காலத்திற்குள் உலகம் பிரவேசித்துள்ளது. இந்த காலப்பகுதியில் உலக உயிரினங்களின் அழிவு வேகம் 100 மடங்குகளால் அதிகரித்து காணப்படும்…
புரட்சி இன்னும் முடிவுக்கு வரவில்லை ; பிரதமர்
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும் முடியவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற தேசிய இளைஞர் முன்னணியின் சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிப்பதி தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும் முடியவில்லை. இந்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு தெளிவான எதிர்காலமொன்றை உருவாக்கிக் கொடுப்பதே இந்நாடு எதிர்கொண்டுள்ள பாரியதும் முதன்மையானதுமான பிரச்சினையாகும். வெளிநாட்டு முதலீடுகளை நம்…
