News
உணவு ஒவ்வாமையால் 100 பேர் வைத்தியசாலையில்
அவிசாவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (22) மாலை உட்கொண்ட உணவு இவ்வாறு ஒவ்வாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (23) காலை வயிற்றுவலி, மயக்கம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்ட நூறுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
KFC வழங்கிய பர்கரில் 3 இஞ்ச் நீள இரும்பு தகடு!
பிரிட்டனில் உள்ள சப்போல்க் பகுதியில் வசிக்கும் 29 வயதான லூசியா ரிச்சர்ட்சன் என்ற பெண்மணி, கடந்த சனிக்கிழமையன்று மார்ட்லேஷாமில் உள்ள கே.எப்.சி. உணவகத்தில் ஜிஞ்சர் பர்கரை வாங்கினார். இதை அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, 3 அடி நீளத்தில் ஒரு பொருள் இருப்பதை கண்டார். எலும்பு துண்டாக இருக்கும் என நினைத்த அவர், அதை கடித்தபோதுதான், அது எலும்பு துண்டல்ல, இரும்புத்துண்டு என்பதை கண்டுபிடித்தார். இதற்குள் ஐந்து முறை சிறு சிறு துண்டுகளாக அவர் பர்கரை உட்கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக…
நேர்மையின் மறுப்பெயர் முஸ்லிம்: இது தான் இஸ்லாம்.!
– மௌலவி செய்யது அலி ஃபைஜி – உலகத்தில் பணத்தின் தேவைகள் இல்லாதவர்களே கிடையாது, அதனால் பணத்தின் மீது ஆசை வைக்காதவர்களை பார்க்க முடியாது. ஆனால் இஸ்லாம் அந்த ஆசைக்கும் அணை போடுகிறது. பணத்தை மனிதன் விரும்பலாம், அது அவனுக்கு உரியதாக இருக்க வேண்டும், அவன் உழைத்து உருவாக்கியதாக இருக்க வேண்டும், அனுமதிக்கபட்ட முறையில் அவனுக்கு அது கிடைத்ததாக இருக்க வேண்டும். தாம் சம்பாதிக்காத பணத்தை தவிர ஏனைய பிறரின் பொருளாதாரத்தை இஸ்லாம் புனிதமாக கருத சொல்கிறது. இறைத்தூதர்…
மதினா அமீர் ஃபைஸல் சாமான்யர்களோடு நோன்பு திறப்பு!
புனித மதினாவின் அமீர் ஃபைஸல் பின் சல்மான் செக்யூரிடி நபர்களோடு ஒன்றாக அமர்ந்து நோன்பு திறந்த காட்சி. சவுதி ஆட்சியாளர்கள் அனைவரும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பயணிப்பது மக்களோடு மக்களாக. மக்களாட்சியோ மன்னராட்சியோ எந்த வகை ஆட்சியாக இருந்தாலும் அதனால் மக்கள் பயன் பெற வேண்டும். நம் நாட்டில் நடப்பது மக்களாட்சியாக இருந்தாலும் அதனால் சாமான்யன் எந்த பலனையும் அடைய முடியவில்லை. அரசியல் வாதிகளின் வாரிசுகள்தான் கோடி கோடியாக சொத்து சேர்க்கின்றனர். தகவல் உதவி…
பெண்ணுரிமையால் கவரபட்டு இஸ்லாத்தில் இணைந்த சகோதரி!
இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்ற தலைப்பில் ஹாங்காங் நாட்டில் ஒரு மார்க்க அறிஞர் உரை நிகழ்த்தி கொண்டிருந்தார் அவர் தனது உரையில் இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகளை பட்டியலிட்டார் அந்த மார்க்க அறிஞரின் உரையும் இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கபட்டுள்ள முக்கியத்துவமும் வீதியில் உரையை செவியுற்ற ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணின் சிந்தனையை கவர்கிறது சிறிதும் தாமதிக்காமல் அந்த உரை முடியும் முன்பே உரை நிகழ்த்தியவரின் முன்னிலையில் அந்த பெண் வந்து தான் இஸ்லாத்தில் இணையவிரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்து தன்னை…
ஆட்சியமைக்க விடமாட்டேன்: ரணில்
மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீளவும் ஆட்சிப்பீடத்திற்கு ஏற்றவே தற்போதைய பாராளுமன்றம் முயற்சிக்கின்றன. எனவே மக்களின் ஆணையை இழந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் இனிமேல் ஏற்படுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின் போது பெறப்பட்ட புரட்சிகரமான வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு புதிய பாராளுமன்றம் அவசியமாகும். எனவே அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை கருத்திற் கொண்டாவது பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றும்…
சவூதி இகாமா சம்மந்தமான சரியான செய்தியும் விளக்கமும்!
சவூதியில் இக்காமா முறை ஒழிக்கப்பட இருப்பதாகவும், இனி அலைக்கழிப்புகள் இல்லை என்பதாகவும், இதனால் வங்கி பரிவர்த்தனை முதல் பல்வேறு நலன்கள் ஏற்படப்போவதாகவும் நேற்று நமது வலைதளத்தில் செய்தி வெளியிட்டோம். இது பற்றி சவூதி அரபியாவிலிருந்து பைசல் முஹம்மது என்பவர் தரும் விரிவான விளக்கம். இக்காமா என்ற பெயர் தான் “Resident identity card” என்று மாற்றப்படுகிறதே தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல, வருடாவரும் இதனை புதுப்பிக்க (Renew) தான் வேண்டும். புதிதாக வழங்கப்பட உள்ள அட்டையில்…
1300 ஆண்டுகளுக்கு முன்பே பர்மா மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் சான்று!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற ஒரு சில தினங்களில் சாசனம் ஒன்றை வெளியிட்டார்கள். அது மதீனாச் சாசனம் என்று அழைக்கப்படுகிறது. அதில் கூறப்பட்டிருக்கும் பல செய்திகளில் ஒரு செய்தி என்னவென்றால் “யாரெல்லாம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கவில்லையோ அவர்களும் முஸ்லிம்களும் ஒரே சமூகமாகும்”. இதன் அடிப்படையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களிடம் பகைமை கொள்ளாத மக்களுடன் முஸ்லிம்கள் சகோதரப் பாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டால் இவர்களும் இவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களும் ஒன்றாக…
சூரதுல் நம்லில் சுலைமான் நபியுடன் சபா என்ற நாட்டின் அரசியான பல்கீஸ் (படங்கள் இணைப்பு)
பல்கீஸ் நாயகியின் இராட்சியம் (PHOTOS) ஓமான் நாட்டில் இருக்கும் பல்கீஸ் நாயகியின் அரண்மனை அல் குர்ஆனில் சூரதுல் நம்லில் சுலைமான் நபியுடன் சபா என்ற நாட்டின் அரசியான பல்கீஸ் சம்பந்தமாக பல வசனங்கள் இருக்கின்றன. சபா என்ற இராட்சியம் தற்போதைய ஏமனை மையமாக கொண்டு ஓமான், சூடான் மற்றும் எதியோப்பியா பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்திருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஏனெனில் பல்கீஸ் அரசியால் சுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட முத்து, ரத்தினம் மற்றும் தங்கம் என்பன இந்த…
பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிமொருவர் மரணம்
அப்துல்லாஹ்: பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற லொறிமீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் செவ்வாய் அதிகாலை 2.10 மணியளவில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள மஹாஓயா – அரந்தலாவையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மஹாஓயா வீதியில் நள்ளிரவில் பயணித்துக் கொண்டிருந்த லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு மங்களம பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், பொலிஸாரின் உத்தரவை மீறி லொறி அதிவேகத்துடன் பொலிஸ் சாவடியைக் கடந்து…
காவல் என்ற சொல்லுக்கே இலக்கணமாக திகழும் கஃபாவின் காவலர்கள் !
கடுகடுத்த முகத்துடனும் முரட்டு தனமான குணத்துடனும் வலம் வரும் காவலர்களை நமது நாட்டில் நாம் அதிகம் அதிகம் பார்க்கமுடியும் மக்களின் வரி பணத்தை ஊதியமாக பெற்று உண்டு கொழுத்து விட்டு மக்களையே வேட்டையாடும் வேடன் களாகதான் பெரும் பகுதி காவலர்கள் உள்ளனர் இதோ சில மனிதாபிமானமிக்க காவலர்களின் படங்களை வெளியிட்டுள்ளோம் காவல் என்ற சொல்லுக்கே இலக்கணமாக திகழும் சில காவலர்களின் படங்களை வெளியிட்டுள்ளோம் தாகித்த சிறுவனுக்கு தாய் உள்ளத்தோடு தண்ணிர் புகட்டும் காவலரையும் தடுக்கி விழுந்த முதியவரை…
சவூதிக்கு சென்ற மகனை காணவில்லை.. ஒரு தாயின் மன வேதனை. நீங்கள் உதவுவீர்களா?
சவூதிக்கு சென்ற மகனை காணவில்லை.. ஒரு தாயின் மன வேதனை. நீங்கள் உதவுவீர்களா? (கண்டுபிடிக்க உதவுவீர்) இன்று ஒரு தாயின் மன வேதனையை இங்கு பதிவிடுகிறேன். இந்த தகவலை படித்து அதனை உங்கள் நண்பர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எத்தி வைப்பதன் மூலம் ஒரு பிரதிபலனை பெறமுடியும் என்று நம்புகிறேன். ALIYAR RINOOS . 304,UNIT 07, MULLIPOTHANA, KANTHALE. கடவுச்சீட்டு இல N 4022903 எனும் நபர் 2012 DEC 09 எனும் திகதியில் MARADHANA,…
