News
மஹிந்தவுடன் ஒரே மேடையில் இருக்கமாட்டேன் – மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தாங்கள் பெரும் கவலையடைவதாகவும் மனம் குழம்பியுள்ளதாகவும் முன்னணி சிவில் அமைப்பின் பிரதிநிதிக் குழுவொன்று ஜனாதிபதியிடம் நேற்று இரவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி காரியாலயத்தில் கடந்த இரவு நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் காமினி வியங்கொட, பேராசிரியர் சரத் விஜேசூரிய, கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி. சமன் ரத்னபிரிய, ஜோஸப் ஸ்டாலின், தர்மசிறி பண்டாரநாயக்க, ரவி ஜெயவர்தன ஆகியோர் உட்பட தம்பர அமில தேரரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி அலுவலகத்தின்…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி: இந்தியாவுக்கு சீனா ஆதரவு
ஐ.நா. சபையில் அதிகாரமிக்க பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள்தான் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இதில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற வேண்டும் என்பது இந்தியாவின் நெடுநாளைய விருப்பம். இந்த விஷயத்தில் இப்போது இந்தியாவுக்கு சீனா திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷியாவில் உள்ள உபா நகரில் நேற்று முடிந்த ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் இது தெரியவந்துள்ளது. அந்த பிரகடனத்தில், “சர்வதேச விவகாரங்களில் பிரேசில், இந்தியா, தென்…
நீதிமன்றில் ஆஜராகாத பொது பலசேனா பிக்குகளுக்கு பிடியாணை
கடந்த அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக ரிஷாத் பதியுத்தீன் இருந்த போது அவரது அமைச்சிற்குள் பலாத் காரமாக நுழைந்து குழப்பம் விளை வித்த சம்பவம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் இரு பிக்குகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சமப்வம் தொடர்பில் ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த 6 பிக்குமார்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தொடர்ச்சியாக வழக்குகளுக்கு ஆஜராகாத 4 ஆவது மற்றும் 5 ஆவது சந்தேக நபர்களான பிக்குகளையே கைது செய்ய…
இஸ்லாத்தை ஏற்றபோது பெற்ற மனஅமைதி இன்னும் விலகவில்லை
இஸ்லாத்தை ஏற்றபோது பெற்ற மனஅமைதி இன்னும் விலகவில்லை இஸ்லாத்தை ஏற்றபோது பெற்ற மனஅமைதி இன்னும் விலகவில்லை இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது. லாரன் பூத் (Lauren Booth) – அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர்,பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர். இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள். அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய…
இந்திய ரூபாய் நோட்டுகளில் நோய்க் கிருமிகள்!
இந்திய ரூபாய் நோட்டுகளில் அதிக ளவில் நோய்க் கிருமிகள் இருப்பதாகப் புதிதாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் அதிகளவில் பரிமாறிக் கொள்ளப்படும் ரூபாய் நோட்டுகள், அதிக அளவில் நோய்க் கிருமி கடத்திகளாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய அறிவி யல் மற்றும் தொழில் ஆய்வு மையத்தின் கீழ் இயங்கும் `இன்ஸ் டிட்யூட் ஆஃப் ஜினோமிக்ஸ் அண்ட் இன்டக்ரேட்டிவ் பயாலஜி’ மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளை ஆராய்ந்தனர். இதற்காக…
வாரியபொல யுவதியால் தாக்கப்பட்ட இளைஞர் குற்றவாளியாக அறிவிப்பு
வாரியபொல யுவதியால் தாக்கப்பட்ட இளைஞர் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுள்ளார். வாரியபொல நீதிமன்றமே அவரை குற்றவாளியாக இனங்கண்டது. தம்மை, ரொபட் தசன்லேகே சந்திர குமார என்ற இந்த இளைஞர், கேலி செய்ததாக கூறி திலினியால் வாரியபொல பேரூந்து நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டார். இந்த தாக்குல், சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பிரசாரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு இன்று இடம்பெற்றபோது குறித்த இளைஞரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்ற அடிப்படையிலேயே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கான தண்டனை தீர்ப்பு…
கின்னஸ் சாதனை படைத்த இப்தார் நிகழ்ச்சி!
ரமழான் மாதத்தின் இப்தார் ஏற்பாடுகள் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் 1058 மீட்டர் நீளத்திற்கு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று உணவருந்தினர். இளவரசர் மஷல் பின் மஜீத் பின் அப்துல் அஜீஸ் ஆதரவுடன் அபியா இண்டர்நேசனல் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை பார்வையிட்ட கின்னஸ் நிபுணர்கள் இதனை உலகின் மிகபெரிய இப்தாராக அறிவித்து கின்னசில் இடம் பெற செய்தனர். மேலும், அதற்கான சான்றிதழையும் வழங்கினர்.
உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது – சயிட் அல் ஹூசெய்ன்
இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுக்கத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார். பொஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா ஆகியன தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் கலந்துரையாடப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் சிவிலியன் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள்…
தந்தையாகும் மைக்கல் கிளார்க்
அவுஸ்திரேலிய டெஸ்ட கிரிக்கெட் அணி தலைவர் மைக்கல் கிளார்கின் மனைவி கர்ப்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 34 வயதுடைய மைக்கல் கிளார்க் கடந்த 2012 ஆம் ஆண்டு மொடல் அழகியான கைலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிளார்க் நேற்று தனது ‘இன்ஸ்ட்ராகிராம்” சமூக வலைதளத்தில் தான் தந்தையாக போகும் செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோன்பு நோற்று உம்ரா செய்து கொண்டிருந்த நிலையில் வபாத்தான சிறைவாசி!
சில நிகழ்வுகள் நமது நெஞ்சங்களில் நீக்கமற நிலை பெற்றுவிடும் அப்படி பட்ட நிகழ்வொன்று இன்று மக்காவில் நடை பெற்றது. ஆம், சவூதி, தம்மாம் நகரைச் சேர்ந்த 57 வயதை நிறைவு செய்த முதியவர். 57 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்த பிறகும் அவருக்கு எட்டும் தொலைவில் இருக்கும் புனித மண்ணை பார்ப்பதர்கோ அங்கு ஹஜ் உம்றா செய்வதர்கோ சென்றதில்லை. இந்த மனிதர் ஒரு வழக்கில் அகபட்டு தண்டனை பெற்று தம்மாம் சிறையில் அடைக்க பட்டார். சிறையில் இருந்த காலங்களில் தனது கடந்த காலங்களை…
மயானமாக மாறிய நாடாளுமன்றம் – ரி.பி ஏகநாயக்க
அண்மைக் காலத்தில் பொரல்ல மயானமும் நாடாளுமன்றமும் ஒன்று போல் மாறியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி. பி ஏகநாயக்க தெரிவித்துள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் நாடாளுமன்றம் பொரல்ல மயானம் போன்று இருந்ததுடன் நாட்டு மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இருவரும், அவசர உதவி கேட்கின்றனர்
ஜின்னாபுரம் ஆலங்குடா ஏத்தாளையில் வசித்துவரும் ஏ.எஸ்.கபூர் என்பவரின் இரு மகள்களான பாத்திமா றிகாஸா வயது 12, பாத்திமா றிமாஸா வயது 02 ஆகிய இருவரும் லியுகோமியா நோயினால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள 25 இலட்சம் ரூபா செலவாகும் என மதுரை வைத்திய நிபுணர் சிபார்சு செய்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் இப்பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், வறுமைக் கோட்டில் வாழும் இவர்களின் தந்தை முச்சக்கரவண்டி ஓட்டி தனது குடும்பத்தை…
