News
தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த செல்வந்தர் !
சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து கல்வி அறக்கட்டளைக்கு தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த துபாய் செல்வந்தர். சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து, துபாய் செல்வந்தர் அப்துல்லாஹ் அஹ்மத் அல் குரைர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்வி அறக்கட்டளைக்கு தானம் செய்துள்ளார். இவர் துபாயில் பிரபலமாக அறியப்படும் Mashreq bank, Al Ghurair Construction, Al Ghurair RealEstate போன்ற நிறுவனங்களின் ஸ்தாபகர் ஆவார். துபாய் செல்வந்தர் அப்துல்லாஹ் அஹ்மத் அல்…
மஹிந்தவை முஸ்லிம்கள் மன்னித்துவிட்டனர்: அஸ்வர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் முஸ்லிம்கள் அவரை மன்னித்துவிட்டார்கள். பொதுத்தேர்லில் அவர் தரப்பில் போட்டியிடுவதற்கு பல முஸ்லிம்கள் முன்வந்திருக்கின்றமை இதனை உறுதிசெய்கிறது என முன்னாள் முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் எ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு…
மஹிந்தவின் சிறப்புரிமைகளை உடன் வாபஸ் பெறவேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைச் சலுகைகளை வாபஸ் பெற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரை வலியுறுத் தும் ஐ.தே.க., முடிந்தால் குருணாகலில் மஹிந்த போட்டியிட்டு வெற்றி பெற்றுக்காட்டட்டும் என்றும் சவால் விடுத்தது. பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே ஐ.தே.க.வின் பேச்சாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தனக்கு 58 இலட்சம் மக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறும் மஹிந்த…
நோன்பை தடைசெய்த சீன அரசை பணியவைத்த துருக்கி!
சீன உய்கூர் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற அரசு அந்த பகுதியில் உள்ள முஸ்லிம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ரமழான் காலத்தில் நோன்பு நோற்பதற்கு தடைவிதித்திருக்கிறது இது முஸ்லிம்கள் இடையே மிகபெரிய சீற்றத்தை உருவாக்கியது உய்கூர் முஸ்லிம்களுக்கு ஆதராவாக சீன அரசை கண்டித்து துருக்கி முஸ்லிம்கள் மிக பெரிய கண்டன ஆர்பாட்டங்களை நடத்திவருகின்றனர் துருக்கியில் சீன அரசுக்கு எதிராக எழுந்துள்ள கோபம் சீன அரசை கவலை கொள்ள செய்திருப்பதாக சீன வெளியுறவு துறை…
செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் பாடகி
பாகிஸ்தானின் நன்கு அறியப்பட்ட பிரபல சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி ( வயது 87) இவர் உடல் நலகுறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பார்க்கச் சென்ற பாடகி ரிஸ்வி சிரித்தபடி உடல் நலகுறைவாக படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் அப்துல் சத்தார் மற்றும் அவரது மனைவியுடன் செல்பி புகைப்படம் எடுத்து அதை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த இணையத்தள பாவனையாளர்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். அவர்…
5 வயதில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த சிறுவன்!
சையது அலி பைஜி நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவனின் பெயர் சல்மான் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரை சார்ந்தவன் வெறும் ஐந்து வயதை மட்டுமே நிறைவு செய்துள்ள அந்த சிறுவன் இறைவனின் வேதமான திருகுர்ஆனின் 30 பாகங்களை தனது மனதில் உறுதியாக பதிய வைத்து சாதனை படைத்துள்ளான் ஜந்து வயதிலேயே திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ள அந்த சிறுவனை உர்ச்சாக படுத்தும் விதத்தில் ஜித்தவில் அவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது அவனது ஆசிரியர்கள்…
16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம்கள் மக்காவுக்கு வருகை!
இந்த ஆண்டு நடைபெற்று வரும் மாதத்தின் கடந்த 16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம்கள் பல்வேறு உம்ரா செய்வதற்க்காக மக்காவுக்கு வந்து சென்றுள்ளனர். இது சென்ற ஆண்டுகளை ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த நாட்களில் 6 லட்சத்து 50 ஆயிரம் வாகங்கள் மக்கா நகருக்கு வந்து சென்றுள்ளன. இந்த கணக்கெடுப்புகளை இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்தார். மேலும் இந்த ரமலானில் 25 மில்லியன் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
ராஜிவ் காந்தியை தாக்கியவர்தான், பொதுபல சேனாவின் தலைமை வேட்பாளர்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி கம்பஹா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பி.ஜே.பி) சார்பிலேயே இவர் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேவேளை, BJP கட்சியின் தேசிய அமைப்பாளர் வண.விதாரந்தெனிய நந்த தேரர், கொழும்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.
இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால் நடத்தப்படும் பேச்சுப் போட்டி
அஸ்ரப் ஏ. சமத் இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால் சீனா -உலகத்தின் கவனத்தை ஈத்த” பட்டுப பாதை வா்த்தக வட்டாரத்தை மற்றும் 21ஆம் நுாற்றாண்டு கடற் பட்டுப்பாதையை ஒன்றாய் கட்டி எழுப்புவதற்கான திட்டம்” என்ற தலைப்பில் இலங்கையில் உள்ள பாடாசலை மாணவா்கள், பல்கலைக்கழக மாணவா்களுக்கிடையே மும் மொழிகளிலும் பேச்சுப் போட்டி ஒன்றை ஒழுங்கு படுத்தியுள்ளது. மேற்படி விடயமாக இலங்கை – சீன நட்புரவுச் சங்கத்தின் ஊடக மாநாடு கொழும்பு ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமையக மாநாட்டு மண்டபத்தில்…
அனைவரும் கைகோர்க்க வேண்டும் – ஜனாதிபதி
பொறாமை, கோபம், குரோதம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு நட்புறவுடனும் கூட்டொருமைப்பாட்டுடனும் நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.vk
விக்ரமபாகு வைத்தியசாலையில்..!
நவசம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மீண்டும் ஹஜ் சர்ச்சை: கோட்டா மீள் பகிர்வுக்கு முகவர்கள் ஆட்சேபனை
ஹஜ் குழுவினால் நேற்று உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முகவர்களுக்கிடையிலான கோட்டா மீள்பகிர்வு பட்டியலிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறி ஹஜ் கோட்டா மீள் பகிர்வுக்கு முகவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசர் வழங்கிய ஹஜ் வழிகாட்டல்கள்(Guide Lines SCFR 500/2012) மீண்டும் மீறப்பட்டுள்ளமையினால் கோட்டா பகிர்வினை ஏற்றுக் கொள்ள முடியாதென பெரும்பாலான ஹஜ் முகவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் இலங்கையருக்கான ஹஜ் கேள்விக்குறியாகியுள்ளது. ஹஜ் முகவர்களுக்கான நேர்முகப்பரீட்சை ஒரு சுயாதீனக் குழுவினால் நடாத்தப்பட்டாலும்…
