News
ஜோதிடம் பார்த்து தேர்தலுக்கு நாள் குறிப்பவன் நானில்லை
நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பவனில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. புத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால் நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்? – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். கொழும்பு – 07 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாட்டின்போது “ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்…
மைத்திரியின் கரங்களைப் பலப்படுத்தும் பிரதமர் வேண்டும் : சந்திரிக்கா
தற்போதைய நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமரை நியமிப்பது அனைவரதும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பலங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்வொரு வழியிலேனும் பிரதமராகினால் நாடாளுமன்றம் மாத்திரமின்றி முழு நாடும் குழப்பமடையும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுடன் அன்று கருத்து மோதல் இருந்திருந்தாலும், கட்சியை விட நாட்டை குறித்து சிந்தித்து ராஜபக்ஷவை தோல்வியடைய செய்யுமாறும் அவர்…
உங்களையும் குடும்பத்தையும் பாதுகாப்பதா? மஹிந்தவையும் குடும்பத்தையும் பாதுகாப்பதா?
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இந்நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாகும். இதில் நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதா அல்லது மஹிந்த ராஜபக் ஷவையும், அவரது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதா என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு உங்கள் குடும்பமும், உங்களது எதிர்காலமும் நாசமாகிப்போக வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக் ஷ தலைமையி லான கூட்டணிக்கு வாக்களிக்க முடியும். இந்தத் தேர்தல் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,…
மஹிந்தவின் பிரதமர் கனவுடன் குடியுரிமையும் பறிபோகும் : ராஜித
புலிகளுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் பிரதமர் கனவு மட்டுமல்ல, அவரது குடியு ரிமையும் பறிபோகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இன்று மஹிந்த ராஜபக் ஷவின் காற்று தடைப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காற்று வீச ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து…
மஹிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் : இன்றைய தினம் விசாரணை
ஊழியர் சேம இலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் இருந்த பொது மக்களின் 1150 கோடி ரூபாவை தெரிந்துகொண்டே மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டி முன்னாள் நிதியமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி கெலும் குமார சிங்கவினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த விசேட வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு பிரதான நீதிவான் கிஹான்…
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே அமையும் – அமைச்சர் றிஷாத்
மக்கள் எதிர்பார்க்கும் நன்மைகளை வழங்கக் கூடிய புதிய அரசாங்கமொன்றை ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சி அமைக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சரும், வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி 8ஆம் திகதி பெறப்பட்ட வெற்றியும் அதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நன்மைகளையும் வழங்கக் கூடிய புதிய…
ஹக்கீம் என்னை அச்சுறுத்தியிருப்பது என்னை கொல்வதற்கான சதித்திட்டமாகும் -.இஸ்மாயில்
வீசி இஸ்மாயில் தேர்தலில் வெற்றி பெற்றால் எனது கதை அறுப்பேன் அவரை பாராளுமன்ற கதிரையில் அமர விட்மாட்டேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அச்சுறுத்தியிருப்பது என்னை கொல்வதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என எனது ஆதரவாளர்கள் அச்சமடைந்துள்ளனர் நானும் அச்சமடைந்துள்ளேன் என தென்கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் உப வேந்தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்தார். சாய்ந்தமருதில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை…
கல்முனைக்குடியில் YLS ஹமீட் ஆற்றிய உரை
கூனிக்குருகி வீடுகளுக்குள் முடங்குகின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவமாக இல்லாமல் எமது கட்சி மூலம் கிடைக்கின்ற தேசியப்பட்டியல் கிடைக்கின்ற இந்த கல்முனை பிரதிநிதித்துவம் இன்ஷா அல்லாஹ் மறைந்த தலைவரின் பிறகு மீண்டும் முஸ்லிம்கள் சார்பில் பாராளுமன்றில் முழங்க இருக்கின்ற ஒரு பிரதிநிதித்துவமாக இருக்கும் என்ற வாக்குறுதியை வழங்குகின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். கல்முனைக்குடி பிரதான வீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 7 ஆம் இலக்க வேட்பாளர்…
ACMCயின் திகாமடுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று மாலை (13-08-2015)சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல்; தலைமையில் நடைபெற்ற இந்த இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடலில் முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்அமீர் அலி. முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளீட்ட பெரும் தொகையான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
SLMC உறுப்பினர் ACMCயில் இணைவு
முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆலங்குளம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பி.ரி.கரீம் தனது ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸனி; திகாமடுல்ல மாவட்ட மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமாகிய சிராஸ் மீராசாஹிபுடன் இணைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் அமைப்பாளர் எ.பி.முனாஸின் ஏற்பாட்டில் மேற்படி இணைவு நடைபெற்றது
உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை! மஹிந்தவுக்கு மைத்திரி அதிரடி அறிவிப்பு
சிலவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள 5 பக்க கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பகுதிகள் பின்வருமாறு உள்ளன! “நீங்கள் என்னுடன் ஒத்துழைத்து செயற்பட எதிர்பார்ப்பதாக கூறும் செய்தியொன்றை அண்மையில் ஊடகங்கள் வௌியிட்டிருந்தன. உங்களுக்கு அவ்வாறான எதிர்பார்ப்பு இருக்குமாயின் அது தொடர்பில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய சில…
மயிலின் வெற்றி இரட்டிப்பானது ஹக்கீமின் காதறுப்பு விழா இன்று
– ஏ.எச்.எம்.பூமுதீன் – மருதமுனை – மயில் வேட்பாளர் வீசி இஸ்மாயிலுக்கு எதிராக முகா தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வீசி இஸ்மாயிலை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் அப்பதவியிலிருந்து விலக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி முகா வினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதியரசர் குழுவினரால் முகா வின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்திற்க்கு…
