Headlines

பிரதி மற்றும் இராஜாங்க முஸ்லிம் அமைச்சர்களின் விபரம்

இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி – தேசிய ஒருமைப்பாட்டு ஹிஸ்புல்லாஹ் – மீள்குடியேற்றம் பைசல் முஸ்தபா – உள்ளுராட்சி பிரதியமைச்சர்கள் அமீர் அலி – கிராமிய பொருளாதாரம் பைசல் காசிம் – சுகாதாரம் முகம்மட் ஹரீஸ் -விளையாட்டு

Read More

அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் அழைப்பு

கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என இன்று தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்ட கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். கொழும்பு நவம் மாவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சின் முன்றலில் இடம் பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நாட்டில் ஒரு நல்லாட்சியினை ஏற்படுத்த வேண்டும்…

Read More

களுத்துறையில் நீர்வெட்டு

களுத்துறை பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த நீர் வெட்டு இன்று காலை 8 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டானது வாதுவ, களுத்துறை, பயாகல, அளுத்கம, பேருவளை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. களுத்துறை கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமீர் அலி அமைச்சரானார்

– எம்.ரீ.எம்.பாரிஸ் – இலங்கையின் நல்லாட்சிக்கான அரசியல் பயனத்தில்அமீா்அலி அரசியல் ரீதியிலான சமயோசிந்த முடிவுகள்சிறப்பானதாக அனைவராலும் குறிப்பாகசிறுபான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லிம்மக்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினைபெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறுவேலைத்திட்டங்கள் முன்னொடுக்கப்பட்டு வந்தது. 2010ஆம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமீா்அலி தோல்வியடைந்தாலும் 2014ஆம் ஆண்டு இந்நாடுபாரியதொரு தேர்தலை எதிர்நோக்கியது அது தான்ஜனாதிபதி தேர்தலாகும். இந்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனதுஇருப்பை பாதுகாத்து கொள்ள தேசிய பட்டியல் மூலம்பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அமீா்…

Read More

”இஸ்லாமியர்கள் வேண்டாம், கிறித்தவர்களை மட்டுமே ஏற்போம்”

பிரான்ஸ் நாட்டிற்குள் கிறித்துவ மதத்தை சேர்ந்த அகதிகளை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என அந்நாட்டு மேயர்கள் வெளியிட்ட கருத்திற்கு உள்துறை அமைச்சகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து சுமார் 24 ஆயிரம் அகதிகளுக்கு குடியமர்வு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டே சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிபரின் இந்த அறிவிப்பை சில மாநகர மேயர்கள் வரவேற்றிருந்தாலும், சில மேயர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்….

Read More

முஸ்லிம் அகதிகளும், மத மாற்றமும்..!

ஜேர்மனியை நோக்கிச் செல்லும் அகதிகளுக்கு, உண்மையிலேயே அங்கு சுதந்திரமாக வாழ்வதற்க்கான வழிகள் செய்து கொடுக்கப்படுகிறதா அல்லது செய்து கொடுக்கப்படுமா? பல இணைய தளங்களில் இருந்து பெறப்பட்ட அதிர்ச்சித் தகவல்களை சுருக்கமாகத் தருகிறேன். ஐரோப்பிய நாடுகளில் அனுமதிக்கப்படும் அகதிகளுக்கு அங்கே வாழும் முழுச் சுதந்திரம் வழங்கப்படுமா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாக அமையும். காரணம் அவர்கள் அங்கே தற்காலிகமாகத்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அங்கு நிரந்தரமாக வாழ வேண்டுமென்றால் புகலிட (Asylum ) உரிமையைக் கோரி நீதிமன்றத்தில் பதிந்து,…

Read More

தவறவிடப்பட்ட நல்லிணக்கம், வலுவான முறையில் முன்னெடுக்கப்படும் – விஜயதாச ராஜபக்ஷ

தேசிய அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டுக்கும் மக்களுக்கும் மிகப் பொருத்தமான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை தோற்றுவிப்பதற்குப் பொருத்தமான சூழல் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கேற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்க ஒத்துழைக்குமாறு மக்களிடம் முன்வைக் கப்பட்ட கோரிக்கைக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இதற்கமைய உச்ச சட்ட வாக்கத்தைக்…

Read More

கண்காட்சி அமைச்சராக இருக்கப் போவதில்லை: மனோ

அமைச்சர் என்ற முறையில் உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து நீக்குவேன். அதை விடுத்து வெறுமனே அமைச்சரவை வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு இந்த நாட்டில் நல்லிணக்கத்துக்கும் ஒரு அமைச்சர் இருகின்றார் என்று காட்டும் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள தனது அமைச்சு அலுவலக பொறுப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை (08) முற்பகல் ஏற்றுக்கொண்ட வைபவத்தில்…

Read More

44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று  நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் குறித்த அமைச்சர்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

சிரியச் சிறுவன் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து கண்ணீர் அஞ்சலி

துருக்கி நாட்டு கடற்கரையில் இறந்து கிடந்த அகதி சிறுவன் அய்லானுக்கு பிரபல நடிகை உட்பட சமூக ஆர்வலர்கள் அய்லான் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து அஞ்சலி செலுத்தியுள்ளமை உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காசாவில் உள்ள கடற்கரை ஒன்றில் 30 நபர்கள் கொண்ட சமூக நல அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை கூடியுள்ளனர். அய்லான் அணிந்திருந்த சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுடன் சிறுவன் இறந்து கிடந்த தோற்றத்தை போலவே அனைவரும் கடற்கரை மணலில்…

Read More

தேசிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று

தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக அமைச்சரவையின் எஞ்சிய அமைச்சுப் பதவிகளுக்கான அமைச்சர்கள் மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இதனையடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சரவை அமைச்சர்களுடன் மாகாண முதலமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். தேசிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களுக்கு இன்று அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக…

Read More