News
தலைவர் அஷ்ஃரப் கண்ட கனவை நனவாக்கும் பயணத்தில் பின்நிற்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்
– எம்.சி.அன்சார் – பெருந்தலைவர் எம்.எச்எம். அஷ்ஃரப் அவர்கள் கண்ட கனவை நனவாக்கும் நோக்கிய பயணத்தில் எதிர்காலங்களில் எவ்வாறான சவால்கள், சதிகள், தடைகள் வந்தாலும் அச்சமில்லாமல் முன்னோக்கி பயணிக்க அகில இலங்கை மக்கள் கட்சியும். அதன் தலைமையும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்நிற்கப் போவதில்லை. என அகில இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கடந்த பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் கட்சிக்கு வாக்களித்த சம்மாந்துறை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்…
மக்கா விபத்தில் இலங்கையர்கள் எவரும் சிக்கவில்லை
மக்கா ஹரத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவும் காற்றின் காரணமாகவும் புனித கஃபதுல்லாஹ்வுக்கு அருகில் (நிர்மாணப்பணிகள் செய்யும்) கிறேன் ஒன்று உடைந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சுமார் நூறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ள நிலையில் .. உயிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் இலங்கை பிரஜைகள் எவரும் இல்லை என முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் அவர்களின் அந்தரங்க செயலாளார் பாஹிம் ஹாசிம் அவர்கள் சற்றுமுன் தெரிவித்தார்.
மக்காவில் அனர்த்தம் – இலங்கை ஹாஜிகள் தொடர்பில், விபரங்களை பெற நடவடிக்கை
– இக்பால் அலி – மக்காவில் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான நிலவரங்களை உடன் பெற்றுத் தருமாறு இலங்கை சவூதி அரேபியாத் தூவராலயத்திலுள்ள உதவித் தூதுவர் அன்சார் அவர்களிடம் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தொலைபேசியில் அவரச வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் போது இருவருக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான விபரங்களை உடன் பெற்றுத் தருவதற்கு…
பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்வு… ஹரமில் மூன்று அடி உயரத்துக்கு தண்ணீர் (photos)
மக்கா, மஸ்ஜிதுல் ஹரம் பகுதியில் கிரேன் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளதாகவும் காயமடைந்தோர் தொகை 183 ஆக உயர்வடைந்துள்ளதாக சவுதி அரேபிய சிவில் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி நேரப்படி மாலை 5.45pm மணிக்கு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கையை சேர்ந்த ஹாஜிகள் பற்றி அறிவதற்காக முஸ்லிம் சமய விவாகார மற்றும் தபால் அமைச்சர் அல்ஹாஜ் அப்துல் ஹலீம் தற்போது ஜித்தா இலங்கை தூதுவர் காரியலத்துடனும் தற்போது அங்கு இருக்கும் …
இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015 இன்று வைபவரீதியாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தியாவின் 50 க்கும் மேற்பட்ட முன்னணி கைத்தொழில்,வர்த்தகம்,விசாயம்,மருந்தகம்,கட்டிட நிர்மாணிப்பு,ஆடை தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம்,சக்தி வளத்துறை சார்ந்த…
ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பில் றிஷாத் துரித நடவடிக்கை
ஒலுவில் துறைமுக அபிவிருத்தியினை தொடர்ந்து அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளதுடன், இதனால் பாதிப்புக்குள்ளான மீனவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒலுவில் மத்திய குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதை அடுத்து, உரிய…
கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை அமைச்சர் றிஷாத் பார்வையிடவுள்ளார்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் பிரதேசம் நீண்டகாலமாக கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றது இதனால் அப்பிரதேச மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஒலுவில் துறைமுக கட்டுமான பணிகளின் பின்னர் கடற்கரையை அன்டிய பிரதேசம் நாளாந்தம் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருவதுடன் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும், நிலங்களும் காவு கொள்ளப்படுகின்றது இதனால் அப்பிரதேச வாழும் ஆழ்கடல், கரைவலை மற்றும் நன்னீர் மீனவர்களின் தொழில்களும் பாதிக்கப்படுள்ளதுடன் கடற்கரையை அன்டிய துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கட்டிடங்களும் சேதமடையும் நிலையும் காணப்படுகின்றது. இதுதொடர்பாக…
ரியாத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் (டிரைவர்) கவனத்திற்கு!
சவூதி தலைநகர் ரியாத் சாலைகளில் புதிதாக ஸ்பீடு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து நிதானமாக வண்டியை ஓட்டவும். வாகனத்தில் வேகமாக சென்றால் கேமரா அடித்துவிடும். கேமரா அடித்தால் 500 ரியால்கள் அபராதம் விதிக்கப்படும்.
ஜித்தாவை மிரட்டிய மணல் புயல் (காணொளி இணைப்பு)
கடந்த செவ்வாய் மாலை சவூதி அரேபியா ஜித்தாவில் திடீரென ஏற்பட்ட மணல் புயலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் சூரிய ஒளியால் வெளிச்சமாக காணப்பட்ட ஜித்தா நகரம் சில நொடிகளில் இரவுபோல் காட்சியளித்தது. இந்த மணல் புயல் காரணமாக ஜித்தாவிற்கு வந்த விமானங்கள் தரையிறங்காமல் வேறு ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டன.
ஒரு மில்லியன் சிரிய மக்களுக்கு, சவூதி அமைக்கும் பிரமாண்ட முகாம்
சிரியா அகதிகளில் 1 மில்லியன் மக்களுக்கு சவூதி அரேபியா குடியமர்வதற்கான அனுமதியையும் 1 இலட்சம் மாணவர்களுக்கு சவூதி பல்கலைக்கழங்கள் மற்றும் அரச பாடசாலைகளில் கல்வியை தொடர்வதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது. பெரும்பாலும் யூத கிரிஸ்தவ ஊடங்களில் வராத இந்த செய்தி எமது முஸ்லிம்களுக்கு புதியதாக இருக்கலாம். இன்னும், சிலருக்கு இந்த செய்திகளை கண்டாலும் எதுக்கு எடுத்தாலும் சவூதியை திட்டித் தீர்க்கும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் கஷ்டங்கள் இருக்கலாம். ஐரோப்பா சிரிய அகதிகளை இரு கரம் ஏந்தி வரவேற்கின்றது…
2022 ஆம் அண்டில் பிரான்ஸ் இஸ்லாமிய நாடாக மாறும்
பிரான்ஸ் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 66 மில்லியனாகும். .இதில் 6 மில்லியன் முஸ்லிகள் இருப்பதாக ஒரு குறிப்பு உறுதி செய்கிறது. மேலும், பிரான்ஸில் இஸ்லாத்தை புதிதாக ஏற்போர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால் முஸ்லிம்களின் எண்ணிக்கை பிரான்ஸில் அசுர வேகத்தில் உயரும் என்றும் அறியமுடிகிறது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் பிரான்ஸ் இஸ்லாமிய நாடாக உருவாக வாய்ப்பு இருப்பதாக பிரன்ச் நாவல் ஆசிரியர் மைக்கேல் ஓபக் கூறியுள்ளார். 2022 பிரானஸ் இஸ்லாமிய நாடாக…
மஹிந்தவை புகழ்கின்றார் மைத்திரி
பத்து வருடங்களாக அரச அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தற்போது எம்.பி. பதவியை ஏற்று சாதாரணமாக இருக்கிறார். அவ்வாறான நிலையில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுகளை ஏற்பதில் என்ன பிரச்சினை உள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சுப்…
