News
புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தினால் குற்றம்
மோட்டார் வாகன சட்டத்தின் பிரகாரம் அலைபேசிகளை பயன்படுத்தி கொண்டு வாகனம் செலுத்துவது குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தண்டம் பத்திரிகையை வழங்கமுடியாது என்றும் அதனால் அவ்வாறான சாரதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாதுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார். சீருடையில் கடமையில்…
இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் மேலும் சில அமைச்சர்கள் விபரம்
தேசிய அரசாங்கத்தில் மற்றுமொரு தொகுதி அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இன்று மாலை இரண்டு மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இதன் போது ஐக்கிய தேசிய கட்சியில் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 27 பேரும், அமைச்சரவை அமைச்சராக ஒருவரும் பதவி பிரமாணம் செய்துகொள்வார்கள். சுதந்திர கட்சிக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் 2 மற்றும் மீதமுள்ள இராஜாங்க…
மனோ கனேசன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்
தேசிய கலந்துறையாடல்கள் கபிணட் அமைச்சராக கொழும்பில் முதல் தமிழ் பிரநிதியாக மனோ கனேசன் நேற்று காலை (08) ராஜகிரியையில் உள்ள மொழிகள் தேசிய நல்லிணக்க அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் மலையக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பிணா்கள் அந்த அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா் மனோ – இந்த அமைச்சு பற்றி நான் நேற்று பிரதமந்திரியுடன் கலந்துரையாடினன். இந்த அமைச்சின் முலம் சிவில் சமுகம், மற்றும் மதத்…
நீங்கள் ஒரு தொழிலை தேடுபவர்களா? இதனை பயன்படுத்திக் கொள்ளவும்
நீங்கள் ஒரு தொழிலை தேடுபவர்களா? அனுராதபுரம், ரஜரட்ட பல்கலைக்கழகம் நடத்தும் இந்த தொழில்பயிற்சி கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ளவும்.
வடக்கில் இன்னும் 38 அகதி முகாம்களில் 54 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனா்
– அஸ்ரப் ஏ சமத் – வடக்கில் இன்னும் 38 அகதி முகாம்களில் 54 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனா். இம் மக்கள் யுத்தத்தின்பின் முகாம்களில் முடக்கப்பட்ட மக்களாகும். அரசு வடக்கில் அகதி முகாம்களில் வாழும் பெண்கள் தமது காணி பமிகள் மீள பகிா்ந்தளிக்கப்பட வில்லை. கடந்த 30 ஆண்டுகளில் 1 குடும்பமாகிய மக்கள் தற்போது 3அல்லது 4 குடும்பங்களாக்கப்பட்டுள்ளன. இம் மக்கள் முகாம்களில் வாழ்வது இம் மக்களுக்குரிய காணிகளை பாதுகாப்பு படையினா் இன்னும் அவா்கள் முகாம்களாக வைத்துள்ளனா். அவா்கள்…
SLTJ யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வு மாற்று மத நண்பர்கள் புகழாரம்
நாடு முழுவதும் சிங்களம் / தமிழ் ஆகிய மொழிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பகிரங்கமாக பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை அனைவரும் அறிந்ததே! இந்நிலையில் கடந்த 06.09.2015 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பாக ஹெம்மாதகம க்ரீன் வீச் ஹோட்டலில் வைத்து இதே நிகழ்ச்சி நடைபெற்ற போது, பொது பல சேனாவின் காடையர்கள்…
ஊடகவியலாளர் பிரியந்த யானை தாக்கி உயிரிழந்தது இவ்வாறுதான்
மின்னேரியா கிராமங்களில் யானைகள் புகுந்து நாசம் விளைவிப்பது தொடர்பாக செய்தி திரட்டச் சென்ற பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் யானை தாக்கி நேற்று அதி காலை உயிரிழந்துள்ளார். 46 வயதான பிரியந்த ரத்நாயக்க என்பவரே இவ்வாறு இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராமத்திற்குள் புகுந்த யானையை வீடியோ செய்ய முற்பட்ட போது திடீரென வந்த யானை ஊடகவியலாளரை தாக்கியுள்ளது. தலையில் பலத்த காயங் களுடன் காணப்பட்ட இவர் ஹிங்கு ராக்கொட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவருடன் வேறு…
கோத்தபாயவின் ஆசனத்தில் அமரமாட்டேன் : சரத் பொன்சேக்கா
பாதுகாப்புச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் பதவி சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இடம்பெற்ற ஊடக நிகழ்ச்சியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக இராணுவத்தை விட்டு தப்பியோடி, பின்னர் தமையனின் செல்வாக்கை பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த ஒருவரது ஆசனத்தில் தான் அமரமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பீல்ட் மார்ஷல் எனும் உயரிய பதவியின் கௌரவத்தை தான்…
இஸ்லாமிய பொருளாதாரத்தை நடை முறைபடுத்துவது காலத்தின் கட்டாயம் – ஜேர்மன்
20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு சில தினங்களுக்கு முன்பு துருக்கியின் அன்கரா நகரத்தில் நடை பெற்றது இந்தியாவின் நிதி அமைச்சர் அருண்யேட்லியும் இதில் பங்கெடுத்தார். ஜெர்மன் நிதி அமைச்சரின் கருத்து மாநாட்டில் பலரையும் கவரும் விதத்தில் இருந்தது ஜெர்மன் நிதி அமைச்சர் தனது உரையில் உலக பொருளாதாரத்தோடு இஸ்லாமிய பொருளாதாரத்தையும் இணைத்து செயலாற்ற வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். இஸ்லாமிய பொருளாதாரம் உலகின் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை தற்போதைய சூழலில் நாம் மறுத்து விடமுடியாது . உலக…
உலகிலேயே மிக பெரிய திருகுர்ஆன் பிரதி!
நீங்கள் படத்தில் பார்க்கும் திருமறை குர்ஆனின் பிரதி தான் உலகிலேயே மிக பெரிய திருகுர்ஆன் பிரதியாகும். இதற்கு முன்பு ரஷ்யாவின் ததாரிஸ்தானில் இருந்து வரும் இரண்டு மீட்டர் நீளமும் ஒன்றரை மீட்டர் அகலமும் கொண்ட திருமறை பிரதிதான் உலகிலேயே மிக பெரிய திருகுர்ஆன் பிரதியாக கருத பட்டது. தற்போதைய புதிய பிரதி 500 கிலோ கிராமை கொண்டதாகும். 2.28 மீட்டர் நீளத்தையும் 1.55 மீட்டர் அகலத்தையும் கொண்ட 218 பங்கங்களை கொண்டு இந்த பிரதி தொகுக்க பட்டுள்ளது….
தீர்வுக்கு ஆதரவளிக்க சொல்ஹெய்ம் தயார்
தீர்வுக்கு ஆதரவளிக்க சொல்ஹெய்ம் தயார் இலங்கை அரச தலைவர்கள் அழைத்தால் அங்கு அரசியல் தீர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கத் தான் தற்போது தயாராக இருப்பதாக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்போது இலங்கை அதன் சொந்த ன கடின உழைப்பு மூலம் தன்னு டைய சிக்கல்களை தீர்ப்பதற்குப் பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் அதற்குச் சிறந்த மத்தியஸ்தராக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நோர்வே நாட்டு வானொலி மற்றும் தொலைக்காட்சி…
இஸ்லாத்தில் இணைந்த விமான பணிபெண் மது பானங்களை பரிமாற முடியாது என உறுதி
அமெரிக்காவின் எக்ஸ்பிரஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணி பெண்ணாக பணியாற்றி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு மதுவகைகளை பரிமாற மறுத்துவிட்டார். இதற்கு எனது மார்க்கம் இடம் தரவில்லை எனவே இந்த பணியை நான் செய்ய முடியாது என்று அவர் காரணம் கூறிவிட்டார். இந்த காரணத்திற்காக குறிப்பிட்ட அந்த நிறுவனம் அந்த பணி பெண்ணின் பதவியை பறித்ததுள்ளது. இதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற அவர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். பணிநீக்கம்…
